Baakiyalakshmi serial: அம்மா -பையன் உறவு முறிஞ்சிப் போச்சு.. பாக்கியா மட்டும்தான் மகள்.. ஈஸ்வரி உறுதி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் சிறப்பான காட்சிகளுடன் அமைந்தது. சிறையிலிருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு வீடு வந்து சேர்ந்த ஈஸ்வரியை பார்க்க பாக்கியா வீட்டிற்கு வருகிறார் கோபி. இதையடுத்து ஈஸ்வரி கோபத்தில் பொங்கியதை பார்க்க முடிந்தது.
பாக்கியா மட்டுமே தனக்கு துன்ப காலங்களில் உடன் இருந்ததாகவும் கோபி தன்னை நம்பாமல் கைவிட்டு விட்டதாகவும் கோபியிடம் குற்றம் சாட்டி பேசிய ஈஸ்வரி, தனக்கு கோபி என்ற மகன் இல்லை என்றும் அம்மா -பையன் உறவு முறிந்துவிட்டதாகவும் உறுதியுடன் கூறுகிறார். மேலும் கோபியை அவர் தலைமுழுகுவதாகவும் இன்றைய எபிசோட் அமைந்திருந்தது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் மிகவும் பரபரப்பாக அடுத்தடுத்த சிறப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. ராதிகாவை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஈஸ்வரி, அதிலிருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அவரை உற்சாகமாக வரவேற்று ஆசுவாசப்படுத்துகின்றனர். பெரிய பிரச்சினையிலிருந்து ஈஸ்வரி மீண்டு வந்ததை கொண்டாடும்வகையில் பாக்கியா பிரியாணி உள்ளிட்ட பல டிஷ்களை சமைக்கிறார். அதை குடும்பத்தினர் அனைவரும் ஆர்வமாக சாப்பிடுகின்றனர்.
மன்னிப்பு கேட்கும் கோபி: அந்த நேரத்தில் அங்குவரும் கோபி, தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் உள்ளே வருகிறார். இதையடுத்து அவரை எழில் மற்றும் ராமமூர்த்தி இருவரும் கோபத்துடன் வெளியில் செல்ல சொல்கின்றனர். ஆனால் கோபியோ, தன்னுடைய அம்மாவிடம் பேசிவிட்டு செல்வதாக தொடர்ந்து ஈஸ்வரியிடம் செல்கிறார். இதையடுத்து அமைதியாக சாப்பிடத் துவங்கிய ஈஸ்வரி, மிகுந்த ஆக்ரோஷத்துடன் யார் அம்மா என்று கேட்கிறார். தான் எந்த தவறையும் செய்யவில்லை என்று கூறும்போது, கமலா, ராதிகாவுடன் சேர்ந்துக் கொண்டு தான் சிறைக்கு செல்ல காரணமானபோது தான் அம்மா என்று தெரியவில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார்.
அம்மா -மகன் உறவு முறிந்தது: இதையடுத்து அம்மா -மகன் முறிந்து விட்டதாகவும் தனக்கு பாக்கியா என்ற மகள் மட்டுமே இருப்பதாகவும் கூறும் பாக்கியா, கோபியை தலை முழுகுவதாக கூறி, பக்கத்தில் இருந்த பக்கெட்டின் தண்ணீரை தன்னுடைய தலையில் ஊற்றிக் கொள்கிறார். தான் இறந்தாலும் தன்னை வந்து கோபி பார்க்கக்கூடாது என்றும் தனக்கு எந்தவிதமான சடங்கும் செய்யக்கூடாது என்றும் ஆக்ரோஷத்துடன் பேசும் ஈஸ்வரி, கோபியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கோபத்துடன் கூறுகிறார். இதையடுத்து செய்வது அறியாமல் வெளியில் வரும் கோபி, வீட்டின் வாசலிலேயே அமர்ந்தபடி கதறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.
உடைந்துபோய் அழும் கோபி: இதையடுத்து இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமான ராதிகாவின் அம்மா மீது கோபத்துடன் வீட்டிற்கு வருகிறார் கோபி. தொடர்ந்து கதவை அவர் தட்டிய நிலையில், இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமான கமலாவை சென்று கதவை திறக்கும்படி ராதிகா கூறுகிறார். அவர் பயந்துபோய் ஒளிந்துக் கொள்கிறார். இதையடுத்து கதவை ராதிகா திறக்க, வீட்டிற்குள் வரும் கோபி, கோபத்துடன் கத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உடைந்துபோய் அழுகிறார். தொடர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்கிறார் ராதிகா. ஆனால் இந்த ஒரு சாரியை வைத்துக்கொண்டு செய்த தவறிலிருந்து எஸ்கேப் ஆகிவிட ராதிகா முயற்சிப்பதாக கோபி கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











