Baakiyalakshmi serial: கீழே தவறி விழுந்த ராதிகா.. பிரார்த்தனை செய்யும் ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் அடுத்தடுத்து பல விஷயங்களை கொண்டதாக காணப்பட்டது. பழனிச்சாமியின் அக்கா சுந்தரி, பாக்கியா மற்றும் பழனிசாமியின் திருமணம் குறித்து நேரடியாகவே பாக்கியாவிடம் கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் பாக்கியா தனக்கு அழகான ஒரு குடும்பம் இருப்பதாகவும் தான் தன்னுடைய இலக்கை நோக்கி பயணித்து வருவதாகவும் தற்போது தான் தன்னுடைய வாழ்க்கையை துவங்கி உள்ளதாகவும் பலவாறாக கூறுகிறார்.
தொடர்ந்து இது குறித்து பழனிச்சாமியிடமும் பாக்கியா மறைமுகமாக கேட்கிறார். அவரிடம் பேசிய பின்பு அவர் மனதில் இது போல் எந்த எண்ணமும் இல்லை என பாக்கியா தெரிந்து கொள்கிறார். இதனிடையே இன்றைய தினம் ராதிகா கீழே உள்ள பொருள் தடுக்கி விழுவதாக காணப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த வயிற்று வலியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பான காட்சிகளை கொண்டதாக காணப்பட்டது. நேற்றைய தினம் பழனிச்சாமிக்காக அவருடைய அக்கா சுந்தரி பாக்கியலட்சுமியிடம் திருமணம் குறித்து பேசி இருந்தார். ஆனால் பாக்கியலட்சுமி தான் வாழ்க்கையில் மேலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அதனால் தன்னால் வேறு எதையும் யோசிக்க முடியாது என்றும் தனக்கு அழகான ஒரு குடும்பம் உள்ளது என்றும் தெளிவு படுத்தியிருந்தார். பழனிச்சாமியை திருமணம் செய்து கொண்டும் தன்னுடைய கேரியரை சிறப்பாக தொடரலாமே என்று சுந்தரி கேட்டதற்கும் அது தன்னால் இயலாது என்று பாக்கியா உறுதியாக கூறியிருந்தார்.
பழனிச்சாமியிடம் பேசும் பாக்கியா: இந்நிலையில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமியிடம் இது குறித்து நேரடியாக கேட்காமல் மறைமுகமாக பாக்கியா கேட்கிறார். தன்னால் தனியாக இந்த உலகத்தில் இருக்க முடியாதா எனக்கு துணை கண்டிப்பாக தேவையா என்று அவர் கேட்க கண்டிப்பாக அவரால் தைரியமாக தனியாக இருக்க முடியும் என்று பழனிச்சாமி கூறுகிறார். இந்நிலையில் பழனிச்சாமியின் மனதில் தன்னைக் குறித்து எந்த எண்ணமும் இல்லை என்று பாக்கியா உறுதி செய்து கொள்கிறார். பாக்கியா இதுபோல பேசுவதால் ஏதோ நடந்திருக்கிறது என்பதை பழனிச்சாமியும் புரிந்து கொள்கிறார்.
மருமகனாக கொண்டு வர மாட்டேன்: தொடர்ந்து இனியாவிடம் அவரது கல்லூரி நிகழ்வுகள் குறித்து பாக்கியா கேள்வி எழுப்புகிறார். அதற்கு அடுத்தடுத்து கல்லூரியில் நடந்த விஷயங்களை அடுக்கும் இனியாவிடம் விமல் அவரை வெளியில் சந்தித்தாரா என்று பாக்கியா கேள்வி கேட்கிறார்.இதற்கு பதிலளிக்கும் இனியா, தான் அப்பாவுடன் ஒருமுறை வெளியில் சென்ற போது விமல் சந்தித்ததாகவும் கோபி விமலிடம் கடுமையாக நடந்து கொண்டு ரெஸ்டாரண்டில் சாப்பிட கூட விடாமல் வெளியில் அனுப்பி விட்டதாகவும் கூறுகிறார். தொடர்ந்து விமலை தான் நண்பன் கேட்டகிரியில் தான் வைத்திருக்கிறேன் என்றும் அவனை மருமகனாக கொண்டு வரமாட்டேன் என்றும் இனியா, பாக்கியாவிடம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
ராதிகாவிடம் ஈஸ்வரி கேள்வி: இந்நிலையில் இன்றைய தினம் ராதிகாவை ஸ்கேனுக்கு அழைத்துச் செல்வதற்காக கோபி மாலை வருவதாகவும் ரெடியாகி இருக்கும்படியும் கூறுகிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு செல்வதற்காக ராதிகா தயாராக இருக்கிறார். அப்போது தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவதற்காக அவர் கிச்சனுக்கு செல்கிறார். அப்போது அவரிடம் ஈஸ்வரி கேள்வி எழுப்புகிறார், ஸ்கேன் செய்வதற்குகூட கோபி வர வேண்டுமா என அவர் கேட்க, இரண்டு மணி நேரம் வந்து போவதால் அவரது பிசினஸ் ஒன்றும் கெடப்போவதில்லை என்று ராதிகா பதிலளிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
கீழே தவறிவிழும் ராதிகா: தொடர்ந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு ராதிகா திரும்பும் நிலையில் கீழே உள்ள ஒரு பொருள் தடுக்கி அவர் விழுந்து விடுகிறார். அவரது பின்னால் ஈஸ்வரி நின்று கொண்டிருக்க அவர்தான் தள்ளி விட்டது போன்ற பிம்பம் ஏற்படுகிறது. இதையடுத்து வலியால் துடித்துக் கொண்டிருக்கும் ராதிகாவை கோபி வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











