Baakiyalakshmi serial: ஓஹோ என்று மாறிய கோபியின் பிசினஸ்.. வாயெல்லாம் பல்லாகிப் போன ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். 1000 எபிசோட்களை கடந்து இந்த சீரியல் சிறப்பான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மசாலா பிசினஸ், கேன்டீன் கான்டிராக்ட், சமையல் கான்டிராக்ட் என்று படிப்படியாக முன்னேற்றம் கண்டு தற்போது ரெஸ்டாரெண்ட் துவங்கியுள்ளார் பாக்கியா. அவரது ரெஸ்டாரன்ட் திறப்பை குலைக்க சதி செய்த கோபி, தற்போது பாக்கியாவிற்கு போட்டியாக உணவுத் தொழிலையே துவங்கியுள்ளார். க்ளவுட் கிச்சனை துவங்கியுள்ள அவர் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவை வைத்து அதை துவங்கியும் உள்ளார்.
திறப்பு விழாவையடுத்து அதன் வேலைகளை ராதிகாவுடன் சேர்ந்து அவர் பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. முதல் நாளிலேயே அவரது பிசினஸ் சரியாக பிக்கப் ஆவதாக இந்த எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய நண்பன் செந்திலுடன் இணைந்து அவர் தான் வழக்கமாக போகும் ரெஸ்டாரெண்டில் காபி சாப்பிடுகிறார். அங்கு வரும் ஜெனியின் அப்பா ஜோசப், கோபியை பார்த்து சண்டையிடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. விரைவில் ஜெனிக்கு செழியனிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டு மறுநாளே, அவளுக்கு திருமணம் செய்து வைக்கவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டதாகவும் அவர் கோபத்துடன் கூறுகிறார்.

பாக்கியாவிற்கு போட்டியான கோபி: ஆனால் பாக்கியாவின் முன்ளாள் கணவர் கோபியை பொறாமை கொள்ள செய்கிறது. தொடர்ந்து பாக்கியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வந்த கோபி, அவரது ரெஸ்டாரெண்ட் திறப்பின் போதும் பல குளறுபடிகளை செய்தார். ஆனால் அவற்றிலிருந்து மீண்டு தற்போது பாக்கியா, ரெஸ்டாரெண்ட் துவங்கி நடத்தி வருகிறார். துவக்கத்தில் அவரது ரெஸ்டாரெண்டிற்கு அதிகமான வரவேற்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. இதனால் குழப்பத்தில் ஆட்பட்டாலும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார் பாக்கியா. இந்நிலையில் பாக்கியாவிற்கு போட்டியாக கோபியும் கிளவுட் கிச்சன் துவங்கி அதன் திறப்பு விழாவிற்கு தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவை சீப் கெஸ்ட்டாக அழைத்து திறந்து வைக்கிறார்.
கிளவுட் கிச்சன் துவங்கிய கோபி: அவரது இந்த கிளவுட் கிச்சனை துவங்குவதற்கு ராதிகா பண உதவி செய்கிறார். இந்நிலையில் முதல் நாளிலேயே கோபியின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் நடக்கிறது. இதனால் ஈஸ்வரி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். தெரியாத தொழிலை தன்னுடைய மகன் மேற்கொண்டாலும் தன்னுடைய பிசினஸ் டேலண்டால் அதை சிறப்பாக்கும் யுத்தியை தெரிந்து வைத்திருப்பது குறித்து அவருக்கு பெருமிதம் தாங்கவில்லை. தன்னுடைய கணவர் ராமமூர்த்தியிடமும் இதை கூறி தொடர்ந்து பெருமைப்படுகிறார். இது மட்டுமில்லாமல் வீட்டிற்கு வந்து தன்னுடைய மருமகள் பாக்கியாவிடமும் இது குறித்து பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைகிறார்.
பெருமிதத்தில் ஈஸ்வரி: கோபியின் கிளவுட் கிச்சனை திறந்து வைத்ததை போட்டோ எடுத்து அதை வீட்டின் ஹாலில் மாட்ட வேண்டும் என்று கூறுகிறார். இந்நிலையில் தன்னுடைய ரெஸ்டாரெண்ட்டுக்கு வரும் பழனிச்சாமியை உபசரிக்கிறார் பாக்கியா. தொடர்ந்து பாக்கியாவிற்கு பழனிச்சாமி உறுதுணையுடன் இருப்பாரா என்று செல்வி சூசகமாக கேள்வி எழுப்புகிறார். அதற்கு தான் கண்டிப்பாக பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக இருப்பேன் என்று பழனிச்சாமி கூறுகிறார். இதனிடையே தன்னுடைய நண்பன் செந்திலுடன் மற்றொரு ரெஸ்டாரெண்ட்டில் காபி சாப்பிட்டுக் கொண்டே தன்னுடைய பிசினஸ் குறித்து பெருமையுடன் பேசுகிறார் கோபி.
கோபியிடம் சண்டையிடும் ஜோசப்: அந்த நேரத்தில் அங்கு வரும் ஜெனியின் அப்பா ஜோசப், கோபியிடம் சண்டையிடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. மேலும் ஒன்றும் தெரியாமல் இருந்த தன்னுடைய மகளை ஏமாற்றி செழியன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசம்ன் செய்ததாக குற்றம் சாட்டுகிறார். தன்னுடைய மகளுக்கு இரண்டாவது திருமணத்திற்கான ஏற்பாடுகளை தான் செய்து வருவதாகவும் விவாகரத்து கிடைத்த அடுத்த நாளே மிகச் சிறப்பான வகையில் ஜெனிக்கு இரண்டாவது திருமணத்தை நடத்தவுள்ளதாகவும் ஜோசப் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் ஜோசப்பை பார்ப்பதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











