Baakiyalakshmi serial:உனக்கு பிடிக்கலை இல்ல.. இங்கதான் இருப்பேன்.. அடாவடித்தனத்தை துவங்கிய ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. தன்னுடைய மகன் கோபி கேட்டதற்காக அவருடன் ராதிகா வீட்டுக்கு கிளம்பி வருகிறார் ஈஸ்வரி. ஆனால் அங்கு ராதிகாவின் அம்மாவிற்கும் ஈஸ்வரி செட் ஆகாத சூழல் ஏற்படுகிறது.

முன்னதாகவே இவர்களுக்குள் பிரச்சனைகள் இருந்து வந்த சூழலில் தற்போது இருவரும் ஒரே வீட்டில் இருப்பது பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ராதிகாவின் அம்மாவிற்கு தான் அங்கு வந்தது பிடிக்கவில்லை என்பது தனக்கு தெரிகிறது என்றும் அதனாலேயே தான் அந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்றும் ஈஸ்வரி மல்லுக்கு நிற்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Vijay TV s Baakiyalakshmi serial today 18th May 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து 1000ற்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான எந்த சூழலும் தற்போது சீரியலில் காணப்படவில்லை. எழில் மற்றும் செழியனின் திருமண வாழ்க்கையில் காணப்பட்ட அடுத்தடுத்த பிரச்சனைகளை சரி செய்கிறார் பாக்கியா. இதையடுத்து அவரும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் ரெஸ்டாரண்டை துவக்கினார். இதனால் இந்த சீரியல் நிறைவு பெற உள்ளதாக அனைவரும் நினைத்தனர்.

வீட்டை விட்டு வெளியேறிய கோபி: ஆனால் தற்போது அடுத்தடுத்த பிரச்சனைகளை சீரியலில் நுழைத்து வருகிறார் இயக்குனர். ராதிகா கர்ப்பமான சூழலில் அதை குடும்பத்தினரிடம் சொல்ல அவமானப்பட்டு தொடர்ந்து கோபி தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் மறைக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய வந்த சூழலில், அவர்கள் அனைவரும் கோபியை முற்றிலுமாக வெறுக்கின்றனர். தொடர்ந்து அவர் வீட்டை விட்டு செல்வதற்கு குடும்பத்தினர் அனைவரும் வலியுறுத்துகின்றனர். தன்னுடைய குடும்பத்தினர் அனைவரும் தன்னை கைவிட்ட சூழலில் கோபி தன்னுடைய அம்மாவை பயன்படுத்தி பாக்கியாவை பழிவாங்க நினைக்கிறார்.

கோபியுடன் கிளம்பிய ஈஸ்வரி: அதிரடியாக தன்னுடைய அம்மா ஈஸ்வரியை பல்வேறு விதங்களில் சமாதானப்படுத்தி தன்னுடன் ராதிகா வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். இல்லை என்றால் தான் மறுபடியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விடுவேன் என்று சென்டிமெண்டாக அவர் பேசிய சூழலில், ஈஸ்வரி கோபியுடன் வர சம்மதிக்கிறார். பாக்கியா இந்த விஷயத்தில் அழுது ஆர்ப்பாட்டம் செய்வார் என்று கோபி எதிர்பார்த்து, இதன் மூலம் பாக்கியாவை பழிவாங்கவும் திட்டமிடுகிறார். ஆனால் குடும்பத்தினர் அனைவரும் சொல்ல சொல்ல கேட்காமல் ஈஸ்வரி கோபியுடன் கிளம்புகிறார்.

பாக்கியா கூறிய விளக்கம்: அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த பாக்கியா அங்கு வர, அவர் தன்னை போகாதே என்று கேட்பார் என்று ஈஸ்வரி உள்ளிட்ட அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் அவர் எதுவும் கூறாமல் ஈஸ்வரி செல்வதற்கு வழி விட்டு நிற்கிறார். இதனால் ஈஸ்வரி மட்டுமில்லாமல் கோபி மற்றும் ராதிகாவும் ஏமாற்றம் அடைகின்றனர். இதையடுத்து தான் மற்றவர்கள் முடிவுகளில் தலையிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளதாகவும் அதனால்தான் தன்னுடைய மாமியார் வீட்டை விட்டு வெளியில் சென்ற போது தான் தடுக்கவில்லை என்றும் தன்னுடைய மாமனாரிடம் பாக்கியா கூறுகிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 18th May 2024 episode

மல்லுக்கு நிற்கும் ஈஸ்வரி: இதனிடையே கோபி வீட்டிற்கு வரும் ஈஸ்வரி, அங்கு கோபியின் மாமியாரிடம் முறைப்பாக நடந்து கொள்கிறார். அவரும் முந்தைய பிரச்சனைகளை நினைத்து கோபமாகவே இருக்கிறார். இந்நிலையில் ராதிகாவிடம் பேசும் அவரது அம்மா, ஈஸ்வரியை அந்த வீட்டை விட்டு இரு தினங்களில் தான் துரத்துவேன் என்று சபதம் இடுகிறார். இந்நிலையில் இரண்டு பெட்ரூம் மட்டுமே கொண்ட அந்த வீட்டில் ஈஸ்வரியை எங்கு தங்க வைப்பது என்பது கேள்விக்குறியாகிறது. இதனிடையே ஈஸ்வரி தண்ணீர் கேட்டுக் கொண்டிருக்க, தண்ணீர் வேண்டுமென்றால் எழுந்து வந்து தானே எடுத்து குடிக்க வேண்டும் என்று ராதிகாவின் அம்மா உறுதிப்பட கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X