Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து எழில் மற்றும் அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி எழிலிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். எழிலோ தான் வாழ்க்கையில் சாதிக்கும் வரையில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்னு உறுதியாக கூறுகிறார். இதனால் பாட்டியிடம் தொடர்ந்து வாக்குவாதங்களும் மனஸ்தாபங்களும் ஏற்படுகின்றன.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று கூறியவர்கள் எல்லாம் வயதை துலைத்துவிட்டு வேதனை அடைவதை தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருப்பதாகவும் வயது தொலைந்துவிடும் என்றும் கூறுகிறார் ஈஸ்வரி. கோபியும் இனியா பிறந்தபின்புதான் வாழ்க்கையில் முன்னேறியதையும் எடுத்து சொல்கிறார். ஆனால் இவை எதையும் காதில் போட்டுக் கொள்ளப் போவதில்லை என்று எழில் கூறுகிறார். இதனால் ஈஸ்வரி தொடர்ந்து சண்டை பிடிக்கிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 18th of April 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: தொடர்ந்து எழில் மற்றும் அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மல்லுக்கு நிற்கிறார் ஈஸ்வரி. ராமமூர்த்தி சமாதானம் பேசினாலும் கேட்காமல் தொடர்ந்து குழந்தை விஷயம் குறித்து அமிர்தாவிடமும் எழிலிடமும் பேசுகிறார். ஆனால் இந்த விஷயத்தில் பிடி கொடுக்காமல் இருக்கிறார் எழில். அமிர்தாவும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினாலும் நிலாதான் நம்முடைய குழந்தை என்று சமாதானம் பேசுகிறார். நிலா எப்படி உங்களுடைய குழந்தை ஆகும் என்று அமிர்தா கேள்வி கேட்டால் கோபமடைகிறார். இந்நிலையில் தங்களின் குழந்தை குறித்து பாட்டி ஈஸ்வரி கேள்வி எழுப்பினால் தொடர்ந்து ஆத்திரமடைகிறார்.

எழிலிடம் மல்லுகட்டும் ஈஸ்வரி: அதே கதைதான் இன்றைய எபிசோடிலும் தொடர்கிறது. அமிர்தா -எழில் குழந்தை பெற்றுக் கொள்ள ஈஸ்வரி தொடர்ந்து வற்புறுத்துகிறார். ராமமூர்த்தி தொடர்ந்து கேட்க வேண்டாம் என்று கூறினாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து எழிலிடம் இதுகுறித்து கேட்கிறார் ஈஸ்வரி. இதனால் கோமடையும் எழில், தான் வாழ்க்கையில் சாதித்துவிட்டுதான் தன்னுடைய குழந்தை குறித்து யோசிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார். இதற்கு பதிலளிக்கும் ஈஸ்வரி, கோபியும் இனியா பிறந்த பிறகுதான் வாழ்க்கையில் முன்னேறியதாக கூறுகிறார். இதற்கு பதிலளிக்கும் எழில், அவரைப்பற்றி தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

Vijay TV s Baakiyalakshmi serial today 18th of April 2024 episode

வாமிட் சத்தம் கேட்க வேண்டும்: இதையடுத்து பேசும் ஈஸ்வரி, தனக்கு தெரியாது இந்த வீட்டில் கண்டிப்பாக வாமிட் சத்தம் கேட்க வேண்டும் என்று உறுதியாக கூறுகிறார். தொடர்ந்து வாந்தி எடுக்கும் சத்தமும் கேட்கிறது. ஆனால் வாந்தி எடுப்பது ராதிகா. அவர் சாப்பிட்டது ஒத்துக் கொள்ளவில்லை என்று ராதிகா மட்டுமில்லாமல் கோபியும் நினைக்கின்றனர். ஆனால் இரவு முழுவதும் இது தொடர்வதுடன் மறுநாள் காலையும் தொடர்ந்ததையடுத்து ராதிகாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது. கோபி மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறுகிறார். இதை மறுக்கும் ராதிகா, மெடிக்கல் ஷாப்பிற்கு செல்லலாம் என்று கூறுகிறார். தானும் உடன் வருவதாகவும் கூறுகிறார்.

உறுதியான கர்ப்பம்: இதையடுத்து இருவரும் மெடிக்கல் ஷாப்பிற்கு செல்கின்றனர். மருந்துக்கடைக்கும் கூடவே செல்ல வேண்டுமா என்று ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கேட்கின்றனர். ஆனால் தான் கண்டிப்பாக செல்ல வேண்டும என்று ராதிகா கூறுகிறார். இதனால் ஈஸ்வரியும் கோபமடைகிறார். காலை வேளை என்பதால் மெடிக்கல் கடைகள் மூடியிருப்பதால் ராதிகா கடுப்பாவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பத்திற்கான டெஸ்டை ராதிகா மேற்கொள்வதாகவும் கர்ப்பம் உறுதியாவதாகவும் நாளைய எபிசோடிற்கான பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. இதனால் கோபி முழிப்பதாகவும் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X