Baakiyalakshmi: ஐயய்யோ.. கர்ப்பமா.. ஏன் இப்படி பண்ணினே.. ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து இரவு முழுவதும் வாமிட் செய்ததால் சந்தேகமடைந்த ராதிகா, அதிகாலையிலேயே கோபியை அழைத்துக் கொண்டு கர்ப்பத்தை கண்டறியும் கிட் வாங்குவதற்காக மருந்துக்கடையை தேடி அலைகின்றனர். காலை வேளையில் எந்த கடையும் திறக்காததால் மருத்துவமனையில் இருக்கும் மருந்துக்கடையில் கிட்டை வாங்குகிறார்.

தொடர்ந்து அந்த கிட்டை வைத்து ராதிகா சோதனை செய்ய ரிசல்ட் பாசிட்டிவ்வாக வருகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார் ராதிகா. இந்த விஷயத்தை கேட்டு முதலில் சந்தோஷப்படுகிறார் கோபி. தொடர்ந்து நிலைமையை புரிந்துக் கொண்டு முழிக்கிறார். அவர்கள் இருவரும் அடுத்தது என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து மருத்துவமனைக்கும் செல்கின்றனர்.

Vijay TV s Baakiyalakshmi serial today 19th April 2024 episode Radhika is pregnant

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியல் 1100 எபிசோட்களை தாண்டி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட கோபி, தற்போது அப்பாவாக போகிறார். இதையொட்டிய காட்சிகள் இன்றைய எபிசோடில் காணப்பட்டன. தொடர்ந்து இரவு முழுவதும் வாமிட் செய்த ராதிகா, காலையில் முதல் வேலையாக கோபியை அழைத்துக் கொண்டு மருந்துக்கடையை தேடி அலைகிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 19th April 2024 episode Radhika is pregnant

கர்ப்பத்திற்கான சோதனை: காலை வேளையில் மருந்துக்கடைகள் மூடியிருக்க, 24 மணிநேர மருத்துவமனைக்கு இருவரும் சென்று கர்ப்பத்தை கண்டறியும் கிட்டை வாங்கி வருகின்றனர். தொடர்ந்து கர்ப்பத்திற்கான சோதனையை ராதிகா மேற்கொள்ள பாசிட்டிவ் ரிசல்ட் வருகிறது. மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகும் ராதிகா, இதை எப்படி குடும்பத்தினரிடமும் தன்னுடைய மகள் மயூவிடமும் கூறுவது என்று குழப்பமடைகிறார். இந்நிலையில் கோபியிடம் இதை கூற, அவரோ, நிலைமை புரியாமல், மகிழ்ச்சியில் ராதிகாவை தூக்கி சுற்றுகிறார். தொடர்ந்து நிதானமாக இதை கூறுகிறார் ராதிகா. இதையடுத்தே நிலைமை புரிந்து முழிக்கிறார். ஏன் இப்படி செய்தாய் என்று ராதிகாவிடமே கேள்வி கேட்கிறார்.

மருத்துவரிடம் கன்ஃபார்ம்: இதையடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல இருவரும் திட்டமிடுகின்றனர். முதலில் மருந்துக்கடை உடனடியாக மருத்துவமனை என இவர்கள் அடுத்தடுத்து செல்வது ஈஸ்வரி உள்ளிட்டவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இருந்தபோதிலும் அவர்களை சமாளித்து ஏதேதோ கூறுகிறார் ராதிகா. கோபி வழக்கம்போல உளறுகிறார். முன்னதாக தாத்தா கோபியை பாரு என்று செழியனின் குழந்தையை வைத்து கோபியை தாத்தா என்று கூறுகிறார் ராமமூர்த்தி. இதனால் கோபி அவமானப்படுகிறார். தாத்தாவான தான் தற்போது அப்பாவாக போவது அவருக்கு மனஉளைச்சலை கொடுக்கிறது.

Vijay TV s Baakiyalakshmi serial today 19th April 2024 episode Radhika is pregnant

உறுதியான கர்ப்பம்: ஈஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினரை சமாளித்துவிட்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர் கோபி மற்றும் ராதிகா. அங்கு மருத்துவர் ராதிகாவின் கர்ப்பத்தை உறுதிப்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து சாமியை வேண்டிக் கொள்கிறார் கோபி. ஆனாலும் மருத்துவர் கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தை எப்படி குடும்பத்தினரிடம் கூறுவது என்பது குறித்து இருவரும் யோசிப்பதாகவும் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X