Baakiyalakshmi serial: பணம் கொடுக்கும் கோபி.. ரொம்பத்தான் அக்கறை.. கோபப்படும் எழில்!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்துள்ளது. தன்னுடைய அம்மா பாக்கியா சொன்ன ஒற்றை வார்த்தைக்காக தன்னுடைய மனைவி அமிர்தா மற்றும் நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் எழில். தங்கும் இடம் இல்லாமல் ஹோட்டலில் தங்குகிறார். தன்னுடைய நண்பர்களிடம் வாடகைக்கு வீடு பார்க்கவும் கூறுகிறார்.

இந்த விஷயத்தை இனியா மூலம் கேள்விப்படும் கோபி மிகுந்த மன வேதனைக்குள்ளாகிறார். உடனடியாக அமிர்தாவிடம் பேசி அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல் குறித்து அறிந்துக் கொள்கிறார் இதையடுத்து, அங்கு வரும் அவர், மீண்டும் வீட்டிற்கு செல்லும்படி எழில், அமிர்தாவிடம் கேட்கிறார். ஆனால் எழில் மறுப்பதாக இன்றைய எபிசோட் அமைந்துள்ளது.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் எழில், அமிர்தா மற்றும் நிலா வீட்டைவிட்டு வெளியேறியதையொட்டிய காட்சிகள் ஒளிபரப்பாகின. ஈஸ்வரி மற்றும் எழிலுக்கிடையில் குழந்தை விவகாரத்தில் சண்டை ஏற்பட, வாக்குவாதம் முற்றுகிறது. அவர்களை சமாதானப்படுத்த முயலும் பாக்கியா, ஒருகட்டத்தில் எழிலை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார். தன்னுடைய அம்மாவிற்கு கட்டுப்பட்டு நடந்துக் கொள்ளும் எழில், இந்த விஷயத்திலும் அவரது பேச்சை தட்டாமல் கேட்கிறார். அமிர்தா மற்றும் நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். தங்கும் இடம் இல்லாமல் ஹோட்டல் ஒன்றில் அவர்கள் தங்குகின்றனர்.

நேரில் சென்று விசாரிக்கும் கோபி: இந்த விஷயத்தை இனியா மூலம் தெரிந்துக் கொள்கிறார் கோபி. தன்னை எப்போதும் தன்னுடைய அம்மாவிற்காக எதிர்க்கும் மகனாக எழில் இருந்தபோதிலும், அவர் வீட்டைவிட்டு வெளியேறியது குறித்து தெரிந்துக் கொள்ளும் கோபி, மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். தொடர்ந்து அமிர்தாவிடம் பேசி, அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் குறித்து கேட்டறிந்துக் கொள்கிறார். அந்த ஹோட்டலுக்கே நேரடியாக வருகிறார். எழிலை வீட்டை விட்டு அனுப்பிய பாக்கியாவை திட்டித் தீர்க்கிறார். ஆனால் இதற்கு எழில் இடம் கொடுக்கவில்லை. அம்மாவை திட்ட வேண்டாம், அக்கறையுடன் இருப்பது போல நடந்துக் கொள்ள வேண்டாம் என்று பலவாறாக பேசுகிறார்.

https://www.youtube.com/watch?v=D4VN7SdkYgg

செழியன் சுயபச்சாதாபம்: இதையடுத்து அவர்களை மீண்டும் வீட்டிற்கே செல்லுமாறு கோபி அறிவுறுத்துகிறார். ஆனால் தான் தனியாக வாழ்ந்துக் காட்டுவேன் என்று எழில் கூறுகிறார். இதையடுத்து எழிலை தனியாக அழைத்து செலவிற்கு பணம் கொடுக்கிறார் கோபி. அதை வாங்க எழில் மறுத்து விடுகிறார். இதனிடையே, வீட்டில் தன்னுடைய எந்த செயலிலும் நாட்டம் இல்லாமல் எழிலை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறார் பாக்கியா. சமையலில் மீண்டும் உப்பை அள்ளிக் கொட்டப்போக, செல்வி பார்த்துவிட்டு தடுக்கிறார். இதனிடையே, தன்னால்தான் எழிலுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டதாக செழியன் சுய பச்சாதாபம் கொள்கிறார்.

தாத்தாவிற்கு 80வது பிறந்தநாள்: இதையடுத்து தாத்தாவிற்கு இன்னும் இரு தினங்களில் 80வது பிறந்தநாள் வருவதாகவும் அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பாக்கியா கூறுகிறார். இந்த விழாவிற்கு எழில் கண்டிப்பாக வருவான் என்றும் கூறுகிறார். இதுவரை வீட்டில் ஏதேதோ சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டதாகவும் இந்த 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பாக்க வேண்டும், அதன் ஏற்பாடுகளை செழியன்தான் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்றும் பாக்கியா கூறுவதாக இன்றைய எபசோடில் காணப்படுகிறது.

அமிர்தாவிடம் பேசும் பாக்கியா: தொடர்ந்து எழில் அறைக்கு வரும் பாக்கியா, அவரது உடைமைகளை வைத்து அவரை நினைத்து அழுவதாக காணப்பட்டது. தொடர்ந்து அமிர்தாவிற்கு கால் செய்கிறார். எழில் அறையில் இல்லாத நிலையில், எழிலையும் நிலாவையும் நன்றாக பார்த்துக் கொள்ளும்படி அமிர்தாவிடம் பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. தாங்கள் தனிக்குடித்தனத்திற்கு வீடு பார்க்க துவங்கியுள்ளதாக அமிர்தா பாக்கியாவிடம் கூறுவதாகவும் அடுத்தடுத்த காட்சிகள் அமைந்திருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X