Baakiyalakshmi: அமிர்தா - குழந்தையை கடத்திய கணேசன்.. பாக்யாவை திட்டித் தீர்க்கும் குடும்பத்தினர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர், தற்போது பரபரப்பான கட்டங்களை எட்டியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுடன் இணைந்து சங்கமம் எபிசோட்களை கொடுத்து வந்தது பாக்கியலட்சுமி சீரியல். திருமணத்தின்போது வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய காதலனால் ஏமாற்றப்பட்ட ராஜியின் வாழ்க்கையை காப்பாற்றும் வகையில் கோமதி தன்னுடைய மகனுக்கும் ராஜிக்கும் திருமணம் செய்து வைக்கிறார். இந்த திருமணத்தில் அவருக்கு உறுதுணையாக பாக்கியா, எழில், அமிர்தா இருந்ததாக காட்டப்பட்டது.

இந்த திருமணத்தை அவர் உடனிருந்து செய்ததை அறிந்த கோபி மற்றும் ராதிகா மற்றும் குடும்பத்தினர் கோபத்துடன் அவரை எதிர்கொள்கின்றனர். இந்த பஞ்சாயத்து சில தினங்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே வார்த்தையில் சாரி சொல்லி குடும்பத்தினரின் ஏச்சுக்களில் இருந்து தப்பிக்கிறார் பாக்கியா. இதனால் சப்பென்று போனதே என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில், தற்போது அமிர்தா மற்றும் நிலாவை கடத்துகிறார் அவரது முன்னாள் கணவர் கணேஷ். தன்னுடைய பெற்றோரின் உதவியுடன்

Vijay TVs Baakiyalakshmi serial today (19th February 2024) episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உடன் இணைந்து சங்கமம் எபிசோடுகளையும் ரசிகர்களை மிக சிறப்பாக கவரும் வகையில் கொடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் தன்னுடைய பெற்றோரை வைத்து அவரை வீட்டிற்கு வரவழைக்கிறார். பாக்கியா மூலமாக தன்னுடைய அப்பா சாகக் கிடப்பதாக கூறி அவர்களை வரவழைத்து, அமிதாவையும் குழந்தை நிலாவையும் கடத்துகிறார்.

பாக்கியாவை திட்டும் குடும்பத்தினர்: கணேஷின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் இறுதியாக அமிர்தா மற்றும் நிலாவை அவர் பார்க்க விரும்புவதாக கணேஷின் அம்மா கதறலுடன் கூற, பாக்கி அவர்களை அழைத்து சென்றிருந்தார். தன்னுடைய குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களை சமாதானப்படுத்தி இந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார். தற்போது கணேஷ், அமிர்தா மற்றும் நிலாவை கடத்தியதால் பாக்கியாவின் குடும்பத்தினர் அதிகமான அளவில் பாக்யாவை திட்டி தீர்க்கின்றனர். எதை சொன்னாலும் அவர் கேட்பதில்லை என்று அவரது மாமியார் ஈஸ்வரி மற்றும் முன்னாள் கணவர் கோபி ஆகியோர் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial today (19th February 2024) episode

ஈஸ்வரியின் அதிரடி முடிவு: இதனிடையே அமிர்தாவின் முன்னாள் கணவர் வந்துவிட்டதால் அவளை இனிமேல் வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம் என்று ஈஸ்வரி கூறுகிறார். அது எப்படி என்று அவரது கணவர் கேள்வி எழுப்புகிறார். இந்நிலையில் அமிர்தாவை ஒரு பாழடைந்த வீட்டில் அடைத்து வைக்கும் கணேசன், தொடர்ந்து அவரிடம் தாங்கள் தங்களது பழைய வாழ்க்கையை தொடரலாம் என்று கூறுகிறார். தான் அமிர்தா மற்றும் நிலா ஆகியோர் கண்காணாத இடத்திற்கு சென்று வாழலாம் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் கணேஷ் இறந்ததாக கருதி எழிலுடன் இணைந்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வரும் அமிர்தா இதற்கு உடன்படாமல் தொடர்ந்து அழுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

அமிர்தா, நிலாவை கடத்திய கணேஷ்: முன்னதாக இறந்ததாக கருதப்பட்ட கணேஷ் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது உயிருடன் வந்துள்ளார். அவர் இறந்ததாக கருதப்பட்ட நிலையில் கணேஷின் பெற்றோரோ எழிலுக்கு அமிர்தாவை திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த திருமணத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் விருப்பம் இல்லாத நிலையில், தன்னுடைய மகனின் விருப்பத்திற்கு மதிப்பளித்து திருமணத்தை பாக்கியா நடத்தி வைத்தார். இதனால் தன்னுடைய மாமியார் ஈஸ்வரி உள்ளிட்டவர்களிடம் அவர் தொடர்ந்து திட்டு வாங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது அமிர்தா மற்றும் நிலாவின் கடத்தலுக்கும் அவர்தான் காரணம் என்பதே அவரது குடும்பத்தினரின் குற்றச்சாட்டாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X