Baakiyalakshmi: நிலைமை மாறும்.. அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. பாக்கியாவிடம் கொந்தளித்த ராதிகா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் இயல்பாக அமைந்துள்ளது. தன்னுடைய அம்மா தன்னை தலைமுழுகிய விஷயத்தில் மனமுடைந்துப்போன கோபி, வீட்டிற்கு வந்து ராதிகாவிடம் மிகப்பெரிய அளவில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டிக் கொள்கிறார். ராதிகாவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாத கோபி, ராதிகாவும் கமலாவும் இணைந்து தன்னை தன்னுடைய அம்மாவிடம் இருந்து பிரித்து விட்டதாக கூறுகிறார்.
கோபியை தன்னுடைய மகன் இல்லை என்று கூறிய ஈஸ்வரி, இனி பாக்கியா மட்டும்தான் தன்னுடைய மகள் என்றும் தான் தன்னுடைய மகள், பேரன்கள், கணவர் என இனி தன்னுடைய வாழ்க்கையை இனிமையாக கழிக்கப் போவதாகவும் கூறுகிறார். இந்நிலையில் தன்னை மகள் என்று தன்னுடைய மாமியார் கூறிய விஷயம் பாக்கியாவையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பான காட்சிகளுடன் அமைந்திருந்தது. தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்கப் போகும் கோபியை பலவாறாக திட்டும் ஈஸ்வரி, இனிமேல் அவர் தனக்கு மகன் இல்லை என்றும் இதுபோன்ற ஒரு மகனை தான் பெற்றெடுக்கவில்லை என்று நினைத்துக் கொள்வதாகவும் கூறுகிறார். இனிமேல் தனக்கு பாக்கியா என்ற ஒரு மகள் மட்டுமே இருப்பதாகவும் கூறும் ஈஸ்வரி, பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு அவரை தலைமுழுகிவிட்டதாக கூறுகிறார். இதனால் கோபி மட்டுமில்லாமல் பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.
கதறியழுத கோபி: இதையடுத்து தன்னுடைய வீட்டிற்கு செல்லும் கோபி, தன்னுடைய அம்மாவின் இந்த செயலால், கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். ராதிகா மன்னிப்பு கேட்கிறார். கரு கலைந்த குழப்பத்தில் தன்னுடைய அம்மா சொன்னதையெல்லாம் தானும் கண்மூடித்தனமாக நம்பிவிட்டதாக கூறுகிறார். சாரி என்ற ஒற்றை வார்த்தையால் நடந்த தவறுகளை மறைக்க முடியாது என்று கூறும் கோபி, தன்னுடைய அம்மா தன்னை தலைமுழுகிய விவரத்தை கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் ராதிகா, ஈஸ்வரி கோபத்தில் இவ்வாறு நடந்துக் கொண்டிருப்பார் என்று கூறுகிறார்.
அனுபவமே சிறந்த ஆசான்: இதனிடையே, நடு ஹாலில் ஈஸ்வரி ஊற்றிய தண்ணீரை கஷ்டப்பட்டு துடைத்தெடுக்கும் செல்வி, ஈஸ்வரி இதுபோல நடந்துக் கொள்வார் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும், பாக்கியாவை தன்னுடைய மகள் என்று ஈஸ்வரி சொன்னபோது தனக்கு புல்லரித்ததாகவும் கூறுகிறார். தொடர்ந்து அனுபவமே என்று அவர் சொல்லப்போக, அதை எழில் அனுபவமே மிகச்சிறந்த ஆசான் என்று திருத்துகிறார். இந்த சில தின ஜெயில் வாழ்க்கை ஈஸ்வரிக்கு நல்ல உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுத்துள்ளதாகவும் செல்வி குறிப்பிடுகிறார். இதை கேட்டு ஈஸ்வரி இதை கேட்டால் வருத்தப்படுவார் என்று பாக்கியா செல்வியிடம் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
கொந்தளித்த ராதிகா: இதனிடையே வழியில் மயூ மற்றும் ராதிகாவை சந்திக்கும் பாக்கியா, மயூவிற்கு மீண்டும் நன்றி சொல்கிறார். ராதிகாவிடம் கூறாமல் மயூவை அழைத்து சென்றதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ராதிகா ஆத்திரப்படுகிறார். வாழ்க்கை இப்படியே இருந்துவிடாது என்றும் ஒருநாள் மாறும்போது தான் பாக்கியாவை பார்த்துக் கொள்வதாகவும் ஆத்திரத்துடன் கூறும் ராதிகா, மயூவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இதனிடையே, ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் ஈஸ்வரியிடம் பேசி மன்னிப்பு பெறுவதற்காக கோபி பாக்கியா வீட்டிற்கு மீண்டும் வர, ராமமூர்த்தி கோபப்படுவதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன.


Click it and Unblock the Notifications











