Baakiyalakshmi serial: செழியனை அடித்து துவைக்கும் ஜெனியின் அப்பா.. பொங்கியெழுந்த எழில்!
சென்னை: விஜய் டிவியில் 1000 எபிசோட்களை கடந்து மாஸ் காட்டி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இந்த சீரியலில் எழில் மற்றும் அமிர்தாவின் வாழ்க்கையில் கணேஷால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்ட சூழலில் அடுத்ததாக ஜெனி மற்றும் செழியனின் வாழ்க்கையில் மாலினியால் ஏற்பட்ட பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதனிடையே பாக்கியா புதிய ரெஸ்டாரன்ட் துவங்கியதை தொடர்ந்து கோபியும் கிளவுட் கிட்சன் மூலம் அவருக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார்.
ஆனாலும் தன் மகனின் இந்த புதிய பிசினஸ் காரணமாக ஈஸ்வரி மிகப் பெரிய உற்சாகத்தில் காணப்படுகிறார். அவரை இப்படி பார்க்கத்தான் நன்றாக இருப்பதாகவும் கூறுகிறார். இதனிடையே ஜெனியின் மறுமணம் குறித்து அவரது அப்பா ஜோசப், ரெஸ்டாரண்டில் கோபியிடம் கோபமாக பேசி விவாகரத்து பெற்ற மறுநாளே ஜெனிக்கு திருமணம் நடக்கும் என்றும் மாப்பிள்ளை தயாராக உள்ளதாகவும் கூறியதால் குடும்பத்தில் மீண்டும் செழியன் -ஜெனி பிரச்சினை தலைதூக்கியுள்ளது. ஜெனியின் மறுமணம் குறித்து கேள்விப்பட்டவுடன் செழியன் நேரடியாக அவரிடம் சென்று இதுகுறித்து கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த சில வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களை கட்டி போட்டுள்ளது. இந்த சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா என முன்னணி கேரக்டர்களையும் அவர்களது நெருங்கிய சொந்தங்களையும் மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனாலும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. தன்னுடைய மகன்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க பாக்கியா அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
பிரச்சினையில் செழியன் -ஜெனி: எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் காரணமாக எழுந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது, இதையடுத்து அவர்கள் இருவரும் தற்போது நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே செழியன் மற்றும் ஜெனியின் வாழ்க்கையில் மாலினி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. தன்னுடைய அப்பாவின் வற்புறுத்தல் காரணமாக ஜெனி விவாகரத்திற்கு அப்ளை செய்துள்ளார்.அவர்களுக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. செழியன் மூலமாக ஏற்பட்ட காயம் ஆற அதிக காலங்கள் ஆகும் என்று முன்னதாக ஜெனி கூறியதை பார்க்க முடிந்தது.
ஜோசப் ஆத்திரம்: இந்நிலையில் ரெஸ்டாரண்டில் கோபியை பார்க்கும் ஜெனியின் அப்பா ஜோசப், மிகுந்த கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார். மேலும் செழியன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் தன்னுடைய மகள் ஜெனியை ஏமாற்றியதாகவும் அவளுக்கு விவாகரத்து கிடைத்த அடுத்த நாளே மிகவும் சிறப்பான முறையில் தான் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மாப்பிள்ளை தயாராக உள்ளதாகவும் ஜோசப் கூறுகிறார். இதனால் கடுப்பாகும் கோபி, வீட்டில் வந்து அதை தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறுகிறார். இதையடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாகும் செழியன் உடனடியாக இது குறித்து கேட்பதற்காக ஜெனி வீட்டிற்கு செல்கிறார்.
செழியனை அடிக்கும் ஜோசப்: அங்கு ஜோசப் செழியனை சரமாரியாக அடித்து காயப்படுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. தொடர்ந்து செழியனை வீட்டை விட்டு வெளியில் துரத்துகிறார். கதவை திறக்கும்படி கதறும் செழியன், வீட்டின் வெளியிலேயே இருக்கிறார். இதனிடையே செழியன் வெளியில் கிளம்பி சென்ற நிலையில் அவன் ஜெனி வீட்டில் சென்று ஏதாவது பிரச்சனை செய்து விடுவானோ என்று கலக்கத்தில் வீட்டு வாசலிலேயே காத்திருந்த பாக்கியா, எழில் வீட்டிற்கு வந்தவுடன் அவனை ஜெனி வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். ஜெனி வீட்டிற்கு வரும் எழில். அங்கு சாலையில் அழுதபடி ரத்த காயங்களுடன் இருக்கும் செழியனை கண்டு என்ன நடந்தது என்று கேட்கிறார்.
ஆத்திரத்தில் எழில்: இதையடுத்து ஜோசப் செழியனை அடித்தது குறித்து தெரிந்து கொள்ளும் எழில், என்ன செய்தாலும் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்று ஜோசப் நினைத்து விட்டாரா என்று கேட்டுவிட்டு இதை ஒரு கை பார்ப்பதாக கூறி செழியனுடன் ஜோசப் வீட்டிற்கு செல்ல முற்படுவதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து நாளைய தினம் ஜோசப்பிடம் எழில் சண்டை போடுவது குறித்த எபிசோட்களை எதிர்பார்க்கலாம். மேலும் ஜோசப் செழியனை அடித்து காயப்படுத்திய நிலையில், ஈஸ்வரி உள்ளிட்டவர்கள் எந்த மாதிரி ரியாக்ட் செய்வார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











