Baakiyalakshmi serial: அத்தைக்கு எதிராக என்னை தூண்டி விடுறீங்களா.. ராதிகாவிடம் கேள்வி கேட்ட பாக்கியா
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடர் 1000 எபிசோட்களை தாண்டி வெற்றிநடை போட்டு வருகிறது. சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அழுகை, ஆர்ப்பாட்டம் என இருந்த இந்த சீரியலில் இன்றைய தினம் ஜெனி மற்றும் அவரது குழந்தை மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்ததற்கான மகிழ்ச்சி வெளிப்பட்டு வருகிறது. தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய அம்மா திரும்பிக் கொடுத்ததாக செழியன் உடைந்து அழுவதையும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய அம்மாவை கட்டி அணைத்ததையும் பார்க்க முடிந்தது.
முன்னதாக இந்த சீரியலில் எப்படி ஜெனியையும் அவரது குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி ஜெனியை வீட்டிற்கு அழைத்து வந்தாய் என்று ராமமூர்த்தி பாக்கியாவிடம் கேட்பதாக காணப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சேர்த்து பேச வைத்ததாகவும் இருவரும் பயங்கரமான கோபத்துடன் பேசிக் கொண்டதாகவும் தொடர்ந்து சமாதானம் அடைந்து ஒன்றிணைந்ததாகவும் பாக்யா நடந்ததை விவரிக்க, இதனால் ராமமூர்த்தி மகிழ்ச்சி அடைகிறார். இதனிடையே அங்கு வரும் ஈஸ்வரி ஜெனி மீண்டும் வீட்டிற்கு திரும்பியதற்கு தான்தான் காரணம் என்று கூறியதையும் இன்றைய எபிசோடில் காண முடிந்தது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த சீரியல் சேனலின் இரண்டாவது சீரியலாக அதிக டிஆர்பியுடன் தொடர்ந்து இருந்து வருகிறது. தன்னுடைய மகன்கள் எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் மற்றும் பிரச்சினைகளை தற்போது பாக்கியா ஒன்றன்பின் ஒன்றாக தீர்த்து வைத்துள்ளார். முன்னதாக கணேசால் கதிர் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை அவர் போராடி தீர்த்த நிலையில் தற்போது செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையில் ஏற்பட்ட இக்கட்டையும் தீர்த்து வைத்துள்ளார்.
ராமமூர்த்தி கேள்வி: செழியன் மற்றும் ஜெனி மீண்டும் சேர்வதற்காகவும் ஜெனியின் குடும்பத்தினரிடம் பாக்கியா அதிகமாக போராட வேண்டி இருந்தது. செழியன் மற்றும் ஜெனியை தனியாக சந்திக்க வைத்து அவர்கள் இருவரையும் மனம் விட்டு பேச வைத்தார் பாக்கியா. இதற்கு ஜெனியின் அம்மா மரியமும் துணை நின்ற நிலையில் செழியன் மற்றும் ஜெனி தற்போது சமாதானம் அடைந்து ஒன்றிணைந்துள்ளனர். இதனிடையே இது எப்படி சாத்தியப்பட்டது என்று பாக்கியாவிடம் ராமமூர்த்தி கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர்கள் இருவரையும் தான் தனியாக சந்திக்க வைக்க மிகுந்த முயற்சி செய்ததாகவும் இதையடுத்து அவர்கள் நீண்ட நேரம் சண்டையிட்டு பேசி பின்பு சமாதானம் அடைந்ததையும் பாக்கியா எடுத்துக் கூறுகிறார்.
ஈஸ்வரி அதிரடி: இதை அங்கு சமையல் செய்து கொண்டிருக்கும் ராதிகாவும் பார்க்கிறார். இதனிடையே பாக்கியாவிடம் வரும் ஈஸ்வரி, செழியன் மற்றும் ஜெனி மீண்டும் இணைந்ததற்கு பாக்கியா மட்டுமே காரணம் இல்லை என்றும் அப்படி காரணமாக இருந்தால் முன்னதாகவே இதை செய்திருக்கலாமே என்றும் கேள்வி எழுப்புகிறார். தான் செழியனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ததால் தான் பாக்கியா உடனடியாக செழியன் மற்றும் ஜெனியை பேச வைத்ததாகவும் தொடர்ந்து ஜெனி சமாதானமடைந்து வீட்டிற்கு வர தான்தான் காரணம் என்றும் ஈஸ்வரி கூறுகிறார். இதை பார்க்கும் ராமமூர்த்தி மற்றும் ராதிகா இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் பாக்கியா வழக்கம் போல அந்த இடத்தை கடந்து செல்கிறார்.
ராதிகாவிற்கு பாக்கியா பதில்: இதனிடையே இது குறித்து பாக்கியாவிடம் ராதிகா கேள்வி எழுப்புகிறார். பாக்கியா இடத்தில் தான் இருந்திருந்தால் கண்டிப்பாக ஈஸ்வரியிடம் சண்டை போட்டிருப்பேன் என்றும் ராதிகா கூற, அத்தைக்கு எதிராக தன்னை மூட்டி விடுகிறீர்களா என்று பாக்கியா அவரிடம் கேள்வி கேட்கிறார். தொடர்ந்து இது முதல் முறை என்றால் தனக்கு கோபம் வரும் என்றும் ஆனால் தான் எந்த நல்ல விஷயம் செய்தாலும் அதை தன்னுடைய மாமியார் பாராட்ட மாட்டார் என்றும் பாக்கியா ராதிகாவிடம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே வீட்டிற்கு வந்த ஜெனி மற்றும் குழந்தையை குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடுகின்றனர்.
கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்: சாப்பிடக்கூட மனமின்றி அனைவரும் உற்சாகமாக சித்தி, அத்தை, அக்கா என மாற்றி மாற்றி பேசிக் கொள்கின்றனர். இதையெல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடையும் பாக்கியா அங்கிருந்து செல்கிறார். இதனிடையே அவரை பின்தொடர்ந்து வரும் செழியன் மனமுடைந்து அழுகிறார். தன்னுடைய வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தது தன்னுடைய அம்மா தான் என்றும் செழியன் அவரை கட்டிப்பிடித்து உடைந்து அழுகிறார். இதையடுத்து இது தன்னுடைய கடமை தான் என்று சாதாரணமாக சொல்வதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











