Baakiyalakshmi serial: தயவுசெஞ்சு இனியாவை மன்னிச்சிடுங்க.. கல்லூரி முதல்வரிடம் கதறிய பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா முன்னதாக பப்பிற்கு சென்று போலீசிடம் சிக்கியது தொடர்பான காட்சிகள் காணப்பட்டன. இந்த பிரச்சனையில் சிக்கிய அனைவருக்கும் டிசி கொடுக்க கல்லூரி முதல்வர் மிகவும் உறுதியுடன் இருக்கிறார்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவரையும் பெற்றோருடன் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்றும் தொடர்ந்து டிசி வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர் கூறிய நிலையில், பாக்கியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி என அனைவரும் இனியாவுடன் சென்று கல்லூரி முதல்வரை சந்திப்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பப்பிற்கு சென்று போலீஸிடம் சிக்கிய இனியாவை ராதிகா காப்பாற்றுவதாக கடந்த எபிசோட்களில் காணப்பட்டது. இதனால் இனியாவை வளர்க்க தெரியாமல் வளர்ப்பதாக ராதிகா, பாக்யாவிடம் கூறுவதாகவும் பாக்கியா அவமானப்பட்டு நிற்பதாகவும் காணப்பட்டது. இந்நிலையில் இந்த விஷயத்தில் அடுத்தடுத்த பிரச்சனைகளை பாக்கியா சந்திப்பதாக காணப்படுகிறது. இந்த விஷயம் கேள்விப்பட்டு மறுநாள் பாக்கியாவிடம் சண்டையிடுகிறார் கோபி.
அவமானத்தில் பாக்கியா: வயது பெண்ணை சரியாக வளர்க்க தெரியாமல் வளர்ப்பதாக கோபி சண்டையிட்ட நிலையில் அவரும் இனியாவிற்கு அப்பா தானே என்று பாக்கியாவும் பதிலுக்கு பேசியதாக காணப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் டிசி கொடுக்க உள்ளதாகவும் அவர்களது பெற்றோர்களுடன் வந்து டிசியை வாங்கி செல்ல வேண்டும் என்றும் இனியாவின் கல்லூரியின் முதல்வர் கூறுவதாக கடந்த எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய அம்மாவிடம் இதை கூற பயந்து கொண்டு கோபியிடம் இதைக் கூறி அவரை கல்லூரிக்கு வரவழைக்க இனியா திட்டமிடுகிறார்.

கல்லூரிக்கு சென்ற பாக்கியா: இன்றைய எபிசோடில் இதுகுறித்து தன்னுடைய அப்பா கோபியிடம் இனியா பேசுகிறார். இதை பார்க்கும் பாக்கியா, இனியாவிடம் கோபமாக பேசுகிறார். எந்த விஷயம் என்றாலும் திட்டினாலும் அடித்தாலும் இனியாவுடன் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் துணை நிற்பதாகவும் ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் இனியா செயல்படுவதாகவும் நாளைய தினம் கண்டிப்பாக நான் தான் கல்லூரிக்கு வருவேன் என்றும் பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. மறுநாள் கல்லூரிக்கு செல்ல இனியா, பாக்கியா இருவரும் கிளம்பிய சூழலில் அவர்களுடன் தாத்தா, பாட்டியும் கிளம்பி வருகின்றனர்.
டிசி கொடுக்க முதல்வர் உறுதி: இனிமேல் இனியாவை தாங்கள் பார்த்துக் கொள்வதாக முன்னதாக அவர்கள் கூறிய நிலையில் இந்த பிரச்சனையையும் தாங்கள் சமாளிக்க உடனிருக்க வேண்டும் என்று ஈஸ்வரி கூறுவதாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. இந்நிலையில் இன்றைய தினம் கல்லூரி முதல்வரை அனைவரும் சென்று சந்திக்கின்றனர். அவரோ கல்லூரிக்கு இந்த பிரச்சனையால் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த விஷயத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் டிசி கொடுக்க தான் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறுகிறார். இந்த தண்டனை தான் அடுத்து இதுபோன்ற செயலில் ஈடுபட நினைக்கும் மாணவர்களுக்கு தான் கொடுக்கும் எச்சரிக்கை என்றும் அவர் கூறுகிறார்.
ஈஸ்வரி விளக்கம்: இதனால் பாக்கியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி மட்டுமல்லாமல் இனியாவும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்ணை சரியாக கவனிக்காமல் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி விடுவீர்களா என்று கல்லூரி முதல்வர் பாக்கியாவை பார்த்து கேள்வி எழுப்ப, இதற்கு பதிலளிக்கும் ஈஸ்வரி, பாக்கியா இனியாவை அனுப்ப மாட்டேன் என்று கூறியதாகவும் பிறந்த நாள் நிகழ்ச்சி தானே என்று தாங்கள் தான் சிபாரிசு செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறார். இதனிடையே பர்த்டேக்கு செல்வதாக கூறிவிட்டு இனியா செய்த செயலை சுட்டிக்காட்டுகிறார் கல்லூரி முதல்வர்.
கதறிய பாக்கியா: இனி இனியாவை கல்லூரியில் சேர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும் உடனடியாக அவர்கள் சென்று டிசியைப் பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் பாக்கியா கதறி அழுகிறார். தன்னுடைய மகளின் வாழ்க்கையே இதனால் பாழாகிவிடும் என்றும் இனி இதுபோல நடந்து கொள்ளாமல் தான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் பாக்கியா முதல்வரிடம் கண்ணீருடன் கூறுவதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











