Baakiyalakshmi: செஃப்பாக மாறிய பழனிச்சாமி.. இக்கட்டான நேரங்களில் கைக்கொடுப்பதாக பாக்கியா பாராட்டு!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், பாக்கியா ரெஸ்டாரெண்டிற்கு அடுத்ததாக துவங்கப்பட்டுள்ள பார் ஓபனிங் குறித்த காட்சிகளையொட்டி ஒளிபரப்பானது. இன்றைய தினம் பார்ரு ஓபனிங்கின் சமையல் காண்ட்ராக்டை எடுத்து சிறப்பாக செய்து முடிக்கிறார் பாக்கியா. ஆனால் அதிகமாக 50 பேர் வந்து விட்டதாக பார் ஓனரிடம் பாக்கியா கூறுகிறார்.
பார் ஓனரோ தொடர்ந்து தன்னுடைய கஸ்டமர்கள் ரெஸ்டாரெண்டிற்கு வந்து தான் சாப்பிட போவதாகவும் அதனால் ஒவ்வொரு காசையும் கணக்கு போட வேண்டாம் என்றும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே பார் ஓபனிங்கையடுத்து குடித்துவிட்டு அனைவரும் வந்து ரெஸ்டாரண்டில் கத்தி கூச்சல் போடுவதாக காணப்பட்டது

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பார் ஓபனிங்கின் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது. பாக்கியா ரெஸ்டாரெண்டிற்கு பக்கத்தில் பார் ஓபன் செய்யப்பட்டதையடுத்து அவரது ஊழியர்கள் அனைவரும் மிகுந்த கவலை கொள்கின்றனர். பாக்கியாவிற்கும் இந்த கவலை தொற்றிக்கொண்ட சூழலில் அங்கே என்ட்ரி கொடுக்கும் பழனிச்சாமி எந்த விஷயத்தையும் நமக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். தொடர்ந்து பாக்கியாவுடன் பக்கத்தில் பார் ஓனரிடம் சென்று பேசும் பழனிச்சாமி பார் ஓபனிங் தினத்தன்று சமையல் காண்ட்ராக்டையும் பெற்று கொடுக்கிறார்.
பார் ஓபனிங்: இதன் மூலம் பார் ஓனரிடம் நட்பு பாராட்டி பாக்கியாவின் அச்சத்தையும் போக்க முயற்சிக்கிறார் பழனிச்சாமி. தொடர்ந்து பார் ஓபனிங் தினத்தன்று அனைவரும் வந்து சாப்பிடுகின்றனர். மீன், முட்டை, சிக்கன், மட்டன் என்று விதவிதமாக சமைத்து அசத்துகிறார் பாக்கியா. முதலில் வருபவர்கள் மிகவும் சாஃப்ட்டாக சாப்பிட்டு விட்டு செல்ல, அடுத்தடுத்து வருபவர்கள் பாக்கியா மற்றும் ஊழியர்களிடம் சண்டை போடுகின்றனர். அவர்கள் அனைவரும் குடித்துவிட்டு குடல் குழம்பு, சிப்ஸ் மாங்காய், வேர்க்கடலை, சிக்கன் 65 என்று அடுத்தடுத்த உணவுகளை கேட்டு சண்டையிடுகின்றனர்.
அசத்திய பழனிச்சாமி: இவைகூட இல்லாமல் எப்படி ரெஸ்டாரெண்ட் நடத்துகிறீர்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது போன்று அடுத்தடுத்து வந்தவர்கள் நச்சரிக்க தொடங்க, பாக்கியாவிற்கே ஒரு கட்டத்தில் கடுப்பாகிறது. இந்நிலையில் அங்கு வரும் பழனிச்சாமி நிலைமையை கூலாக ஹேண்டில் செய்து சமாளிக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு டிஷ் கேட்க, அவை அனைத்தையும் தானே செய்து வந்து கொடுத்து அனைவரையும் அசத்துகிறார். அனைவரும் கிளம்பி சென்ற நிலையில் அவரிடம் வரும் பாக்கியா, தனக்கு எப்பொழுதெல்லாம் இக்கட்டான சூழ்நிலை வருகிறதோ, தான் இருட்டில் நிற்கிறேனோ அப்போதெல்லாம் பழனிச்சாமி அங்கு ஆஜராகி, தன்னை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதாக பாராட்டுகிறார்.
கறார் காட்டும் பார் ஓனர்: தொடர்ந்து பாக்கியா வாழ்க்கையில் தான் எப்போதும் வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்று பழனிச்சாமியின் கூறுகிறார். இதை பார்த்து செல்வி சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்கிறார். இந்நிலையில் அங்கு வரும் பார் ஓனரிடம் பாக்கியா குறிப்பிட்ட நபர்களை விட அதிகமாக 50 பேர் வந்து விட்டதாகவும் அவர் அதிகமான பணம் கொடுக்க வேண்டி வரும் என்றும் கூறுகிறார். ஆனால் அவரோ தொடர்ந்து தன்னுடைய கஸ்டமர்கள் அங்கு தான் சாப்பிட போகிறார்கள் என்று கூறுகிறார். இப்படி ஒவ்வொரு பணத்தையும் எண்ணி கேட்பது சரியாக இருக்காது என்றும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











