Baakiyalakshmi: அன்புக்கு விலை சொல்லலாமுங்களா.. பாக்கியாவிற்கு ரிப்பீட்டு தந்த பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களைத் தாண்டி கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் பாக்கியலட்சுமி தொடரில் அதற்கான முகாந்திரமே இல்லாத வகையில் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

வீட்டில் வாந்தி சத்தம் கேட்க வேண்டும் என்று தன்னுடைய பேரன் எழிலிடம் ஈஸ்வரி மல்லுக்கட்ட, அன்றிரவே வாந்தி சத்தம் கேட்கிறது. ஆனால் வாமிட் செய்தது கோபியின் மனைவி ராதிகா. சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவரை சென்று கோபி மற்றும் ராதிகா இருவரும் கன்சல்ட் செய்கின்றனர். மருத்துவர் கர்ப்பத்தை உறுதி செய்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் தவிக்கின்றனர். பேத்தி எடுத்துவிட்ட கோபி, தற்போது அப்பாவாக போவதை எப்படி குடும்பத்தினரிடம் சொல்வது என்று முழிக்கின்றனர்.

Vijay TV s Baakiyalakshmi serial today 20th April 2024 episode Radhika pregnant

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து 1100 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்யும் கோபி, பல பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார். பிசினசில் தொடர்ந்து கவனம் செலுத்தாமல் அதை மூடும் நிலைக்கும் வருகிறார். இந்நிலையில் ராதிகாவின் துணையால் கிளவுட் கிச்சனை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பாக்கியாவிற்கு போட்டியாக அவர் இந்த தொழிலை துவங்கிய நிலையில், பாகியா போல இல்லாமல் செஃப்பை மட்டுமே நம்பி இந்த தொழிலில் இறங்கியுள்ளார்.

ராதிகா கர்ப்பம்: ஒருமுறை செஃப் திடீரென விடுப்பு எடுக்க, பல பிரயத்தனங்கள் செய்தே அன்றைய ஆர்டரை அவர் முடிக்க வேண்டி வந்தது. பாக்கியாவின் துணையால்தான் அந்த பிரச்சினையிலிருந்து அவர் மீள்கிறார். இந்நிலையில் தற்போது அடுத்த பிரச்சினையாக ராதிகா கர்ப்பமானது தெரியவருகிறது. செழியன் வழியில் பேத்தி எடுத்துவிட்ட கோபி, ராதிகாவின் கர்ப்பத்தால் அவமானமாக உணர்கிறார். தன்னுடைய குடும்பத்தினரிடம் இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் முழி பிதுங்குகிறார். ஆனால் ராதிகாவோ, வெட்கப்பட்டாலும் தன்னுடைய அம்மாவிடம் விஷயத்தை போட்டுடைக்கிறார்.

ராதிகா அம்மா அட்வைஸ்: அவரோ, இந்த நேரத்தில் இந்த குழந்தை மிகவும் அவசியம்தான் என்று கூறுகிறார். தன்னுடைய அம்மா -அப்பா, குடும்பம் என அந்தப் பக்கமே சாய்ந்துக் கொண்டிருக்கும் கோபியை, ராதிகா தன் பக்கம் இழுக்க, இந்தக் குழந்தை கண்டிப்பாக தேவை என்று கூறுகிறார். இதனால் ராதிகா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். இந்நிலையில் ராதிகாவின் கர்ப்பம் குறித்து தன்னுடைய அம்மாவிடம் கூறமுடியாமல் தவிக்கிறார் கோபி. இதை அவர் எப்படி சொல்லப் போகிறார் என்பது குறித்து ராதிகாவும் எந்தவிதமான ஐடியாவும் இல்லாமல் இருக்கிறார்.

பாக்கியாவிற்கு பழனிச்சாமி கிஃப்ட்: இதனிடையே இன்றைய எபிசோடில் பாக்கியாவின் ரெஸ்டாரெண்டிற்கு அவரைத் தேடி வரும் பழனிச்சாமி, அவருக்கு பரிசாக புத்தகங்களை அளிக்கிறார். அதை பெற்றுக் கொள்ளும் பாக்கியா, மிகுந்த உற்சாகத்துடன் புரட்டிப் பார்க்கிறார். அனைத்துமே முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் புத்தகங்கள். ஆனால் அவற்றிற்கு கண்டிப்பாக பழனிச்சாமி பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதையடுத்து அன்புக்கு விலை பேசலாமா என்று பழனிச்சாமி கேட்கிறார். முன்னதாக அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சமைத்த பாக்கியா பணம் பெற்றுக் கொள்ளாமல் அன்பிற்கு விலை பேசலாமா என்று கேட்டதற்கு பதில் தரும் வகையில் பழனிச்சாமி தற்போது அதே வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X