Baakiyalakshmi: தாத்தாவின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. சூப்பராக தயாராகும் பாக்கியா குடும்பத்தினர்
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவரும்வகையிலும் தொடர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெறும்வகையிலும் அமைந்து வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சினைகளை சந்தித்த பாக்கியா குடும்பத்தினர் தற்போது கொண்டாட்ட மோடுக்கு தயாராகி வருகின்றனர்.
ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பாக்கியா முடிவெடுத்து அதன் ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை செழியனிடம் கொடுக்கிறார். அவரும் மண்டபங்களை தேர்வு செய்யும்நிலையில், ஒருநாள் தான் கால அவகாசம் இருப்பதால், பக்கத்தில் இருக்கும் அம்மன் கோயிலில் இந்த விழாவை செய்ய பாக்கியா கூறுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகள் பெற காரணமாக அமைந்து வருகிறது. ஈஸ்வரியின் கைது, வீட்டை விட்டு வெளியேறிய எழில் என அடுத்தடுத்து பிரச்சினைகளை மட்டுமே குடும்பத்தினர் சந்தித்தனர். ஒருபுறம் கோபி மற்றும் ராதிகாவின் சண்டையும் மயூவிற்கு மிகுந்த மன உளைச்சலை கொடுப்பதாக காட்டப்பட்டு வருகிறது. ராதிகாவின் அம்மா கமலா வீட்டைவிட்டு வெளியேறிய சூழலிலும் கோபி -ராதிகாவின் சண்டைகள் தொடர்கதையாக நீண்டு வருகிறது.
முற்றும் கோபி -ராதிகா சண்டை: இதனிடையே, எழில் வீட்டைவிட்டு வெளியேறியது குறித்து தெரிந்துக் கொண்டு அவரை நேரில் சென்று பார்த்துவிட்டு வரும் கோபி, இதுகுறித்து ராதிகாவிடம் பேச முற்படுகிறார். ஆனால் பாக்கியா வீட்டை பற்றி எதையும் பேச வேண்டாம் என்று மறுத்து அங்கிருந்து வெளியேறுகிறார் ராதிகா. இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நீள, ராதிகா எடுத்துவந்து வைக்கும் உணவை தட்டி விடுகிறார் கோபி. இதைப்பார்த்து மயூ அச்சப்படுவதாக காணப்படுகிறது. ஆனால் மயூவை கோபி சமாதானப்படுத்துகிறார். இதையடுத்து கேள்வி எழுப்பும் ராதிகாவிடம், செழியன், எழில், இனியா போல மயூவும் தனக்கு மிகவும் முக்கியம் என்று கூறுகிறார். ஆனால் இதை ராதிகா ஒப்புக் கொள்ளாத நிலை காணப்படுகிறது.
கோபியிடம் குட்நியூஸ் சொல்லும் செழியன்: இதனிடையே, காலை வாக்கிங் செல்லும் செழியனிடம், எழில் குறித்து அவரது நண்பர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் வருத்தத்திற்கு உள்ளாகும் செழியன், எழிலுக்கு கால் செய்து பேசுகிறார். பணம் தேவைப்பட்டால் கேட்குமாறும் கூறுகிறார். இதனிடையே, கோபியை வழியில் செழியன் சந்திக்கிறார். முந்தைய நாள் எழிலை தான் சந்தித்ததாகவும் ஆனால் எழில் விட்டேற்றியாக பேசியதாகவும் கோபி கூறுகிறார். இதனிடையே, ஜெனி மீண்டும் கர்ப்பமாகியுள்ளதை செழியன் கோபியிடம் கூறுகிறார். இதனால் மகிழ்ச்சிக்குள்ளாகும் கோபி, கடந்த சில தினங்களாக புண்பட்டிருந்த தன்னுடைய மனதிற்கு இந்த செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக உற்சாகமாக பேசுகிறார்.
தாத்தாவின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டம்: இதனிடையே தாத்தாவின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செழியன் தீவிரப்படுத்துகிறார். மண்டபத்திற்கு அவர் ஏற்பாடு செய்ய நினைக்க, பாக்கியாவோ, நேரம் குறைவாக உள்ளதால், பக்கத்தில் உள்ள கோயிலில் இந்த விழாவை சிறப்பாக நடத்தலாம் என்று கூறுகிறார். இதையடுத்து இந்த விஷயம் குறித்து ஈஸ்வரியிடம் கூறுகிறார் பாக்கியா. எழில் விஷயத்தில் தான்தான் குற்றவாளியோ என்ற எண்ண்ததில் இருக்கும் ஈஸ்வரிக்கு, இந்த கொண்டாட்டம் தேவையா என்று தோன்றுவதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











