Baakiyalakshmi serial: கோபத்தில் வெடித்த ராதிகா.. மீண்டும் நெஞ்சு வலியில் கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை கொண்டதாக அமைந்திருந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்த நிலையில், யாரும் கைக்கொடுக்காத நிலையில் பாக்கியாதான் நள்ளிரவு என்றும் பார்க்காமல் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க காரணமாகிறார். ஆனால் ஏன்தான் உதவி செய்தாரோ என்ற எண்ணத்தை பாக்கியாவிற்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் கோபி அடுத்தடுத்து ஏற்படுத்தி வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கோபி, பாக்கியா, ராதிகா, ஈஸ்வரி என முன்னணி கேரக்டர்களை கொண்டு கதைக்களம் சிறப்பாக நகர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த சீரியல் டிஆர்பியில் சரிந்த நிலையில், தற்போது மீண்டும் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. இருந்தபோதிலும் சேனலின் 3வது இடத்திலேயே தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் இடம்பெற்று வருகிறது. இதிலிருந்து மீண்டு முதலிரண்டு இடங்களை பிடிக்க இந்த சீரியலின் இயக்குநர் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார்.
கோபியை காப்பாற்றிய பாக்கியா: அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோபிக்கு ஹார்ட்அட்டாக் வந்தது. தினந்தோறும் வாக்கிங் உள்ளிட்ட நல்ல பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் அவருக்கு எப்படி இது சாத்தியம் என மற்ற கேரக்டர்கள் மூலம் ரசிகர்களின் கேள்வியை இயக்குநர் காட்சிகளில் சேர்த்திருந்தார். ஆனாலும் மன உளைச்சல்தான் காரணம் என்று கூறப்பட்டது. இரவு நேரத்தில் யாரும் போனை எடுக்காத நிலையில் பாக்கியாதான் கோபியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். கோபியும் உயிர்பிழைக்கிறார். நல்லதை நினைத்து பாக்கியா செய்த இந்த செயல் அவருக்கே பாதகமாகிறது.
கோபியிடம் பாக்கியா கோபம்: ஈஸ்வரியின் கட்டாயத்தின்பேரில் கோபி, பாக்கியா வீட்டிற்கே வருகிறார். இதனால் அடுத்தடுத்த பிரச்சினைகளில் பாக்கியா சிக்குகிறார். இதுநாள் வரையில் பாக்கியாவின் வளர்ச்சியை குலைக்க சதித்திட்டம் போட்ட கோபி, தன்னுடைய உயிரை பாக்கியா காப்பாற்றியதை அடுத்து அவருக்கு தான் செய்த கொடுமைகளை நினைத்து வருத்தம் கொள்கிறார். தொடர்ந்து அவர்கள் இருவரையும் மீண்டும் இணைக்க ஈஸ்வரியும் அடுத்தடுத்த காய்களை நகர்த்த, இதை அறிந்து பாக்கியா கோபம் கொள்கிறார். தொடர்ந்து தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேறுமாறு கோபியிடம் கோபத்துடன் கூறுகிறார்.
கோபிக்கு மீண்டும் நெஞ்சுவலி: இதனிடையே இன்றைய எபிசோடில், ராதிகா வீட்டை விட்டு காலி செய்யப் போவதை கேள்விப்படும் கோபி, அவரை பாக்கியா வீட்டிற்கு வரவழைத்து கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து ஆத்திரமடையும் ராதிகா, ஈஸ்வரி, இனியா தன்மீது கோபப்படுவதை சுட்டிக் காட்டி கத்தி பேசுகிறார். இதனால் கோபிக்கு மீண்டும் நெஞ்சுவலி வருகிறது. தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று வருகிறார் கோபி. இதையடுத்து அந்த இடத்தில் ராதிகா மீண்டும் குற்றவாளியாக்கப்படுகிறார். இதையடுத்து இனியா, தன்னுடைய அப்பா வாழ்க்கையில் இருந்து வெளியேறுமாறு அவரை டைவர்ஸ் செய்யுமாறு ராதிகாவிடம் கோபத்துடன் கூறுகிறார்.
இனியாவிற்கு விழுந்த அறை: அவரை தடுத்து நிறுத்த பாக்கியா தொடர்ந்து முயற்சிக்கும் நிலையில், நிலைமை கைமீறிப் போவதை பார்த்து, ஒருகட்டத்தில் இனியாவை கன்னத்தில் அறை விடுகிறார். செல்வியும் ராதிகாவும் இதை தடுக்கின்றனர். ஆனாலும் தன்னுடைய அப்பாவின் உடல்நலம் சரியாகவேண்டுமென்றால் ராதிகா அவரது வாழ்க்கையில் இருந்து வெளியேறினால் மட்டுமே முடியும் என்று இனியா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











