Baakiyalakshmi serial: கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுவேன்.. கோபி மீது வெறுப்பின் உச்சத்தில் ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் சிறப்பாக காணப்பட்டது. முந்தைய நாள் தன்னுடைய அம்மா தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு தன்னை தலை முழுகியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபி, மனக்குமுறலுடன் ராதிகா முன்னிலையில் அழுகிறார்.
இந்நிலையில் மறுநாளும் தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்க மீண்டும் பாக்கியா வீட்டிற்கு அவர் வருகிறார். அப்போது தன்னுடைய நிலைப்பாட்டை தான் முந்தைய நாளே கூறிவிட்டதாகவும், கோபி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றால் தானே கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளுவேன் என்றும் ஈஸ்வரி ஆக்ரோஷமாக இன்றைய எபிசோடில் பேசுவதாக காணப்பட்டது,

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் காணப்பட்டன. இரவு தன்னுடைய அம்மாவை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் பாக்கியா வீட்டிற்கு வருகிறார் கோபி. ஆனால் ஈஸ்வரியோ அவரை தலைமுழுகி விட்டதாக கூறி தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டதை பார்க்க முடிந்தது. இதையடுத்து மன உளைச்சலுடன் ராதிகாவிடம் சென்று தன்னுடைய மனதாங்கலை கோபி வெளிப்படுத்தி கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். ராதிகாவிடம் அவர் சுமூகமாக பேசுவதை விட்டுவிடுகிறார். தன்னுடைய கோபத்தை ராதிகாவிடமும் கமலாவிடமும் காட்டாமல் அமைதி காக்கிறார்.
கோபம் குறையாத ஈஸ்வரி: இதனிடையே மறுநாளும் தன்னுடைய அம்மாவை சென்று கோபி பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ஆனால் தான் முந்தைய நாளே தன்னுடைய தெளிவான முடிவை கூறிவிட்டதாகவும் இனி அதிலிருந்து மாறுபட போவதில்லை என்றும் ஈஸ்வரி இந்த முறையும் உறுதியுடன் கூறுகிறார். கோபி தன்னுடைய மகனே இல்லை என்று கூறும் ஈஸ்வரி, தொடர்ந்து கோபி வீட்டை விட்டு போகவில்லை என்றால் தானே கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுவேன். என்று ஆத்திரத்துடன் கூறுகிறார். இதையடுத்து வேறு வழி இல்லாமல் வெளியேறுகிறார் கோபி.
ஏமாற்றத்தில் எழில்: முன்னதாக தயாரிப்பாளரிடம் கதை சொல்ல எழில் கிளம்பிய நிலையில் ஈஸ்வரியின் கைது நடவடிக்கையால் அதை செயல்படுத்த முடியாமல் போகிறது. இந்நிலையில் மீண்டும் தயாரிப்பாளரை சந்திக்க எழில் செல்வதாகவும் ஆனால் அந்த படத்தையே டிராப் செய்ய அவர் முடிவெடுத்து விட்டதாகவும் ஏமாற்றம் மற்றும் வருத்தத்துடன் பாக்கியா மற்றும் அமிர்தாவிடம் எழில் கூறுகிறார். கதையையே உரிய நேரத்தில் கொடுக்க முடியாத தன்னால் எப்படி படத்தை உரிய நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியும் என்று தயாரிப்பாளர் கேட்டதாகவும் தன்னுடைய சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளதாகவும் எழில் வருந்துகிறார். இதனால் பாக்கியா, அமிர்தா இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
மகன் வீட்டிற்கே சென்ற கமலா: இந்நிலையில் கோபிக்காக மயூ மற்றும் ராதிகா இருவரும் வீட்டில் காத்திருக்கின்றனர். கோபி இரவு லேட்டாக வீட்டுக்கு திரும்புகிறார். அவர் வீட்டுக்கே வர மாட்டாரோ என்று தான் பயந்ததாக மயூ கூறுகிறார். இந்நிலையில் தன்னுடைய அம்மா கமலா, கோபியின் விருப்பப்படி அங்கிருந்து கிளம்பி போய் விட்டதாக ராதிகா கூறுகிறார். இந்நிலையில் மிகுந்த மன வருத்தத்துடன் பேசும் கோபி தான் யார் குறித்தும் கவலைப்பட போவதில்லை என்று கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











