Baakiyalakshmi: நீங்க நினைச்சபடி கரு கலைஞ்சிடுச்சு.. சந்தோஷம்தானே.. ஈஸ்வரியை குற்றம் சாட்டிய கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பரபரப்பான கட்டங்கள் காட்சிப் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சீரியலில் கீழே தடுக்கி விழுந்த ராதிகாவிற்கு தற்போது கரு கலைந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ராதிகாவின் கர்ப்பம் கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என்றும் அவர்தான் ராதிகாவை தள்ளிவிட்டதாகவும் ராதிகாவின் அம்மா கமலா குற்றம் சாட்டுகிறார். இதை ராதிகாவும் நம்புகிறார். இதனால் கோபியை அவர் அதிகமாக திட்டுகிறார். தான் முன்னதாக சொன்னதுபோல அவரது அம்மாவை தனது வீட்டிற்கு அழைத்து வராமல் இருந்திருந்தால் இதுபோல நடந்திருக்காது என்று கோபியிடம் கொந்தளிக்கிறார் ராதிகா.

Television Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. ராதிகா கீழே விழுந்து அவரது கர்ப்பம் கலைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவின் அம்மா குற்றம் சாட்டுகிறார். அவர்தான் பின்னால் இருந்து ராதிகாவை தள்ளிவிட்டதாகவும் அவர் கூறுகிறார். தான் அதை பார்த்ததாகவும் அவர் கூறும் நிலையில் இதை ராதிகாவும் நம்புகிறார். துவக்கத்திலிருந்தே தன்னுடைய கருவை கலைக்க சொன்ன ஈஸ்வரிதான் தன்னை பின்னால் இருந்து தள்ளிவிட்டதாக அவரும் நினைக்கிறார்.

கோபியிடம் ராதிகா ஆத்திரம்: இதையடுத்து இவை அனைத்திற்கும் கோபிதான் காரணம் என்றும் அவர் திட்டித் தீர்க்கிறார். துவக்கத்திலேயே ஈஸ்வரியை தனது வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம் என்று அவர் கூறிய நிலையில், தன்னுடைய அம்மாவை கூடவே வைத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்து ராதிகா வீட்டிற்கு ஈஸ்வரியை அழைத்து வந்தார் கோபி. இந்நிலையில் ஈஸ்வரிக்கும் கமலாவிற்கும் பிரச்சினைகள் வந்தபோது மீண்டும் ஈஸ்வரியை பாக்கியா வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு ராதிகா கூறியதை காதில் போட்டுக் கொள்ளாமல் கோபி நடந்துக் கொண்டார். இதனால் முன்னதாக அவர்களுக்குள் பிரச்சினைகள் வந்ததையும் பார்க்க முடிந்தது.

ஈஸ்வரியை திட்டும் ராதிகா: இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஈஸ்வரி மருத்துவமனையில் ராதிகாவை வந்து சந்திப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ஆனால் அவரை பார்த்ததும் ராதிகாவும் கமலாவும் கத்தித் தீர்க்கின்றனர். தன்னுடைய கர்ப்பம் கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என்று குற்றம் சாட்டும் ராதிகா, தன்னுடைய குழந்தையை கருவிலேயே கொன்றது போல தற்போது தன்னையும் கொல்ல வந்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்புகிறார். இதையெல்லாம் கேட்கும் ஈஸ்வரி, மிகுந்த அதிர்ச்சியுடன் தான் ராதிகாவை தள்ளி விடவில்லை என்று கண்ணீருடன் கூறுகிறார். தான் அப்படியெல்லாம் செய்யக்கூடியவள் இல்லை என்றும் சொல்கிறார்.

மனம் உடைந்த ஈஸ்வரி: அவர்கள் அதை கேட்பதாக இல்லாத சூழலில் அந்த அறையிலிருந்து வெளியில் வரும் ஈஸ்வரி, கோபியிடம், தான் அப்படியெல்லாம் செய்வேனா, அவர்கள் கூறியதை கேட்டுக் கொண்டு அப்படியே நின்றுக் கொண்டிருக்கிறாயே என்று அழுகையுடன் கேட்கிறார். இதையடுத்து பேசும் கோபி, துவக்கத்திலிருந்தே இந்த கருவை கலைக்க சொன்னதுடன், ராதிகாவிடமும் கருவை கலைக்க ஈஸ்வரி சொன்னதை சுட்டிக் காட்டி, அவர் நினைத்தது போலவே தற்போது தன்னுடைய குழந்தை கலைந்து விட்டதாக குற்றம் சாட்டி பேசுகிறார். தன்னுடைய மகனும் கரு கலைந்ததற்கு தான்தான் காரணம் என்று கூறுவதை கேட்டு ஈஸ்வரி மனம் உடைந்து போகிறார்.

பாக்கியா தவிப்பு: இதனிடையே, ஈஸ்வரிக்கு பாக்கியா கால் செய்கிறார். தொடர்ந்து அவர் எங்கே இருக்கிறார் என்றும் கேட்கிறார். ஆனால் கோபியின் குற்றச்சாட்டால் கண்ணீருடன் காணப்படும் ஈஸ்வரி, மொபைலிலும் தன்னுடைய அழுகையை வெளிப்படுத்துகிறார். இதையடுத்து செழியன் மூலமாக கோபிக்கு கால் செய்யும் பாக்கியா, ஈஸ்வரி மருத்துவமனையில் இருப்பதை உறுதிப்படுத்துகிறார். இதனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தாலும், தன்னுடைய மாமியார் ஈஸ்வரி அழுததை நினைத்து பாக்கியா தவிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X