Baakiyalakshmi serial: 2 நாள்ல உங்கம்மாவை இங்கிருந்து அனுப்பி வைங்க.. கோபிக்கு ஆர்டர் போட்ட ராதிகா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. கதையில் வழக்கம் போல பாக்யாவின் அழுகை, போராட்டம் என காண்பிக்காமல் தற்போது ராதிகா வீட்டிற்கு வந்துள்ள ஈஸ்வரி, ராதிகாவின் அம்மாவிடம் மல்லு கட்டுவதாக அடுத்தடுத்த காட்சிகளை சேர்த்து வருகிறார் இயக்குனர்.
இவர்களுக்குள் பிரச்சனைகள் இருந்த சூழலில் தற்போது ஒரே வீட்டில் இருவரும் இருப்பது மேலும் பிரச்சினைகளை அதிகரித்து வருகிறது. பாக்கியா வீட்டில் இருந்ததுபோலவே தற்பொழுது ராதிகா வீட்டிலும் தன்னுடைய அதிகாரத்தை தொடர நினைக்கிறார் ஈஸ்வரி. ஆனால் இதற்கு இது இடமில்லை என்பதை புரிய வைக்கிறார் ராதிகாவின் அம்மா. இதனால் ஈஸ்வரிக்கு ஆத்திரம் அதிகரிக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை எண்டெர்டெயின் செய்யும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் ராதிகாவின் கர்ப்பத்தை தொடர்ந்து அவரை வீட்டை விட்டு வெளியேற எழில், செழியன் உள்ளிட்ட குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அவரும் வீட்டை விட்டு தன்னுடைய மனைவி ராதிகாவுடன் வெளியேறுகிறார். தன்னை குடும்பத்தினருடன் சேர்ந்து பாக்கியா அவமானப்படுத்தியதாகவும் அதனால் அவரை பதிலுக்கு அழ வைக்க வேண்டும் என்றும் கோபி தீர்மானித்து தன்னுடைய அம்மா ஈஸ்வரியை தன்னுடன் ராதிகா வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
ராதிகா வீட்டிற்கு வந்த ஈஸ்வரி: முதலில் ராதிகா வீட்டிற்கு வருவதற்கு ஈஸ்வரி மறுப்பு தெரிவித்த போதிலும் தன்னுடைய மகனுக்காக அவர் வர சம்மதிக்கிறார். இதையடுத்து கோபியுடன் ராதிகா வீட்டிற்கு கிளம்பி வருகிறார். அங்கு முன்னதாக இருக்கும் ராதிகாவின் அம்மாவிற்கும் ஈஸ்வரிக்கும் அதிகமான பிரச்சனைகள் இருந்து வந்த சூழலில் அவருடன் ஈஸ்வரிக்கு பொருந்த முடியாமல் போகிறது. ஈஸ்வரி, ராதிகா வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தது முதல் இருவரும் மாற்றி மாற்றி வம்படியாக பேசுகின்றனர். பாக்கியா வீட்டில் அதிகாரம் செய்வது போலவே ஈஸ்வரி அந்த வீட்டிலும் உட்கார்ந்த இடத்திலேயே தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறார்.

அதிகாரம் செய்யும் ஈஸ்வரி: இதையடுத்து ராதிகாவின் அம்மா தண்ணீர் வேண்டும் என்றால் எழுந்து போய் குடிக்க வேண்டும் என்றும் உட்கார்ந்த இடத்திலேயே எல்லாரையும் அதிகாரம் செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார். இதனால் கடுப்பாகும் ஈஸ்வரி, தொடர்ந்து தானே காபி போட முயல்கிறார். ஆனால் பாலை கீழே ஊற்றி விடுகிறார். இதையடுத்து, அங்கிருந்து அவர் அப்படியே வெளியேறுகிறார். இதையடுத்து ராதிகாவின் அம்மா ஊற்றிய பாலை சுத்தம் செய்யுமாறு கூறுகிறார். ஆனால் நீயே சுத்தம் செய்து கொள் என்று வம்படியாக பேசுகிறார் ஈஸ்வரி. இந்நிலையில் இரவு உணவாக அவல் உப்புமா செய்கிறார் ராதிகாவின் அம்மா.
வலுக்கும் வாய்ச்சண்டை: தொடர்ந்து தான் எல்லாருக்கும் சமைத்து போட வேலைக்காரியா என்று தன்னுடைய மகளிடம் கேட்கிறார். இந்நிலையில் அவல் உப்புமாவை எப்படி இரவு நேரத்தில் சாப்பிட முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் ஈஸ்வரி. எங்கள் வீட்டில் சாப்பிடுவோம் என்று பதிலளிக்கிறார் ராதிகாவின் அம்மா. தொடர்ந்து அவல் உப்புமாவிற்கு தொட்டுக்கொள்ள இல்லையா என்று ஈஸ்வரி கேள்வி எழுப்ப, அதற்கு ராதிகாவின் அம்மாவோ இதற்கெல்லாமா தொட்டுக்கொள்ள கேட்பார்கள் என்று கேள்வி கேட்கிறார். தொடர்ந்து தன்னுடைய அம்மாவை தனியாக அழைத்து வரும் ராதிகா ஈஸ்வரியின் குணம் தெரிந்தும் ஏன் தொடர்ந்து பதிலுக்கு பதில் பேசுகிறாய் என்று கேட்கிறார்.
ராதிகா அம்மா குற்றச்சாட்டு: இதையடுத்து ராதிகாவின் அம்மாவும் வந்து ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்குள் அனைவரையும் அதிகாரம் செய்கிறார் என்று ஈஸ்வரி குறித்து குற்றம் சாட்டுகிறார். இந்நிலையில் வீட்டில் இரண்டு ரூம்களே உள்ள சூழலில் இரவு ஈஸ்வரி எங்கே தங்குவார் என்ற கேள்வியை ராதிகாவின் அம்மா எழுப்புகிறார். தொடர்ந்து இது குறித்து ராதிகாவும் கோபியிடம் கேள்வி கேட்க, அவர் வழக்கம் போல முழிக்கிறார். இந்நிலையில் இதை கேட்கும் ஈஸ்வரி தன்னுடைய பெட்டியுடன் வீட்டின் மற்றொரு அறைக்குள் செல்கிறார். இதையடுத்து ராதிகாவின் அம்மாவை ஹாலில் தூங்கும்படி கூறுகிறார். மயூவும் அவருடன் தரையில் தூங்குவதாக காணப்படுகிறது.
கோபியிடம் சண்டையிடும் ராதிகா: இந்நிலையில் அறைக்குள் வரும் ராதிகா கோபியிடம் சண்டை பிடிக்கிறார். தன்னுடைய மகள் தரையில் படுத்து தூங்கும் போது உங்களுடைய அம்மா சொகுசாக கட்டிலில் படுத்து தூங்க வேண்டுமா என்று கோபியிடம் கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து இரண்டு நாட்கள் உங்களுக்கு டைம் என்றும் அதற்குள் ஈஸ்வரியை இந்த வீட்டை விட்டு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ராதிகா உறுதியுடன் கோபியிடம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே, ஈஸ்வரி இல்லாமல் தனித்திருக்கும் ராமமூர்த்தியிடம் எழில், அமிர்தா, பாக்கியா என அனைவரும் சமாதானப்படுத்தும்வகையில் பேசுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











