Baakiyalakshmi: உங்க அம்மாவ வீட்டை விட்டு அனுப்ப முடியுமா முடியாதா.. கோபியிடம் ராதிகா ஆத்திரம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது. ராதிகா கீழே விழுந்து அவருடைய கரு கலைந்துள்ள நிலையில் ஈஸ்வரிதான் அவரைப் பிடித்து தள்ளி விட்டதாக கமலாவும் ராதிகாவும் தொடர்ந்து கோபியிடம் குற்றம் சாட்டுகின்றனர்.

தன்னுடைய அம்மா அப்படி செய்யக் கூடியவர் இல்லை என்று கோபி தொடர்ந்து கூறுகிறார். இருந்தபோதிலும் அதை ஏற்காத ராதிகா மற்றும் கமலா இருவரும் தங்கள் ஊருக்கு செல்வதாக கூறுகிறார். இந்நிலையில் ராதிகாவை தான் எங்கும் அனுப்ப மாட்டேன் என்று கோபி தொடர்ந்து கூறுவதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது.

Television Vijay TV Baakiyalakshmi serial

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மருத்துவமனையில் ராதிகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக காணப்பட்டது. கீழே விழுந்து ராதிகாவின் கரு கலைந்துள்ளது. அவருக்கு பின்னால் ஈஸ்வரி நின்று கொண்டிருந்ததை வைத்து அவர்தான் ராதிகாவை தள்ளிவிட்டதாக கமலாவும் ராதிகாவும் தொடர்ந்து கோபியிடம் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை கோபியால் ஏற்க முடியவில்லை. தன்னுடைய அம்மா இப்படி எல்லாம் நடந்து கொள்பவர் கிடையாது என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் ராதிகாவை பார்க்க வந்த ஈஸ்வரியை ராதிகா மற்றும் கமலா இருவரும் திட்டி வெளியேற்றுகின்றனர்.

அம்மாவை குற்றம் சாட்டிய கோபி: அவர்தான் இந்த கரு கலைந்ததற்கு காரணம் என்று அவர்கள் இருவரும் திட்டியதை கோபி வேடிக்கை பார்த்தபடி நிற்கிறார். அவரால் ராதிகாவை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. இந்நிலையில் வெளியில் வரும் ஈஸ்வரி தான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்கள் கூறியதை கேட்டு நீ அமைதியாக நின்றாயே என்றும் கோபியிடம் கண்ணீருடன் கேட்கிறார். ஆனால் கோபியோ அவர்கள் சொன்னதில் என்ன தவறு என்றும் துவக்கத்தில் இருந்தே இந்த கரு கலைய வேண்டும் என்று நீங்கள் என்னிடமும் ராதிகாவிடமும் கூறி வந்தீர்கள் என்றும் நீங்கள் நினைத்தபடியே அனைத்தும் நிறைவேறிவிட்டது என்றும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை தன்னுடைய அம்மா மீது சுமத்துகிறார்.

பரிதவிக்கும் ஈஸ்வரி: இதனால் மிகுந்த பரிதவிப்புடன் ஈஸ்வரி வீட்டிற்கு அழுதபடி வருகிறார். சாலையில் அவர் கண்ணீருடன் நடந்து வீட்டிற்கு செல்வதை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இதனிடையே மறுநாள் காலை ஈஸ்வரியை ராதிகா வீட்டில் வந்து பாக்கியா பார்க்கிறார். அப்போது பாக்கியாவிடம் தன் மகன் மீது எந்த பழியும் வராத வண்ணம் சமாளித்து பேசுகிறார் ஈஸ்வரி. நீங்கள் ஏன் போனில் அழுதீர்கள் என்று பாக்கியா கேட்க அந்த குழந்தை வேண்டாம் என்று தான் கூறியது உண்மைதான் ஆனால் இப்படி ஆகும் என்று தான் நினைக்கவில்லை என்று ஈஸ்வரி அழுதபடி கூறுகிறார்.

ராதிகாவின் புதிய முடிவு: இதையடுத்து ஈஸ்வரியை தன்னுடன் வீட்டிற்கு வரும்படி தொடர்ந்து பாக்கியா கூறும் நிலையிலும் ஈஸ்வரி அதைக் கேட்காமல் ராதிகா வீட்டிலேயே இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் ராதிகாவை டிஸ்சார்ஜ் செய்கின்றனர். அவரது பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கிறார் கமலா. இந்நிலையில் அங்கு வரும் கோபியிடம் ராதிகா தான் அந்த வீட்டிற்கு வரப் போவதில்லை என்றும் ஊருக்கு அம்மாவுடன் செல்ல உள்ளதாகவும் கூறுகிறார். தொடர்ந்து இங்கே வருவதாக எண்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் கோபி தான் ராதிகாவை எங்கேயும் அனுப்பப் போவதில்லை என்று கூறுகிறார்.

ராதிகா நிபந்தனை: இதையடுத்து குறுக்கே பேசும் கமலா, ராதிகா இங்கேயே இருக்க வேண்டும் என்றால் ஒரு நிபந்தனை என்று கூறுகிறார். தொடர்ந்து ஈஸ்வரியை அந்த வீட்டை விட்டு வெளியேற்றினால் ராதிகா அந்த வீட்டிற்கு வருவாள் என்று கமலா கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் கோபி தன்னை நம்பி அந்த வீட்டிற்கு வந்த ஈஸ்வரியை திருப்பி எப்படி அனுப்ப முடியும் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு கமலா உங்கள் குழந்தையை கருவிலேயே உங்கள் அம்மா கலைத்த சூழலிலும் அவர்களுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறீர்களே என்று ஆத்திரத்துடன் கேட்கிறார். ராதிகாவோ அவர் அவருடைய அம்மா வீட்டை விட்டு அனுப்ப முடியுமா முடியாதா என்றும் கண்டிப்புடன் கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X