Baakiyalakshmi serial: வீட்டில் மறுமண ஏற்பாடுகள்.. ஆத்திரத்தில் மாலினியை அடிக்கப்பாய்ந்த செழியன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமான சீரியலாக பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. இந்த சீரியலில் எழில் மற்றும் அமிர்தாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தற்போது அவர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனிடையே செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையில் ஜெனிக்கு விவாகரத்து பெற்று விரைவில் மறுமணம் செய்து வைக்க அவரது அப்பா ஜோசப் முடிவெடுத்து அதை கோபியிடம் ஆத்திரத்துடன் கூறுகிறார்.
இதனால் ஆத்திரமடையும் கோபி, தன்னுடைய அம்மா ஈஸ்வரியுடன் இணைந்து செழியனுக்கு மறுமணம் செய்ய பெண் பார்க்க துவங்குவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனால் செழியனும் மிகுந்த ஆத்திரத்துடன் தன்னுடைய பாட்டி மற்றும் அப்பாவிடம் தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று கூறுகிறார். ஆத்திரத்துடன் அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். முன்னதாக ஜெனியின் மறுமணம் குறித்து கேள்விப்படும் செழியன் அவரது வீட்டில் சென்று இதுகுறித்து கேட்க, பதிலுக்கு ஜோசப் செழியனை அடித்து காயப்படுத்துவதாக காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 1000 எபிசோட்களை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் தற்போது நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். பாக்யாவின் ரெஸ்டாரன்ட் செயல்பட உறுதுணையாக இருக்கிறார் அமிர்தா. இதனிடையே செழியன் வாழ்க்கையில் மாலினியால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜெனி கோபத்துடன் தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். தன்னுடைய அப்பா ஜோசப்பின் வற்புறுத்தலால் விவாகரத்துக்கும் அப்ளை செய்துள்ளார்.

ஜெனிக்கு மறுமணம்?: இந்நிலையில் செழியனுக்கும் ஜெனிக்கும் விரைவில் விவாகரத்து பெற்று, ஜெனிக்கு மறுமணம் செய்து வைக்க அவரது அப்பா ஜோசப் மும்முரம் காட்டி வருகிறார். ரெஸ்டாரண்டில் கோபியை பார்த்து ஆத்திரத்துடன் அவர் இதை கூறுகிறார். இதையடுத்து ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் இணைந்து செழியனுக்கு மறுமணம் செய்ய பெண் பார்க்க துவங்குகின்றனர். இதையடுத்து ஈஸ்வரியிடம் பாக்கியா இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்று கோபத்துடன் கூறுகிறார். பிரச்சனையை தீர்த்து அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க தான் முயற்சிகள் மேற்கண்டு வருவதாகவும் இந்த நேரத்தில் இது போன்ற மறுமண பேச்சுகள் பிரச்சனையை அதிகப்படுத்தும் என்றும் கூறுகிறார்.

அடிவாங்கிய செழியன்: இந்நிலையில் தன்னுடைய மனைவி ஜெனி மற்றும் மகளுடன் இணைந்து வாழவே தான் விரும்புவதாகவும் மறுமணம் குறித்த பேச்சுக்களை அவர்கள் மேற்கொள்ளக் கூடாது என்று ஆத்திரத்துடன் கூறும் செழியன், வீட்டைவிட்டு அதே ஆத்திரத்துடன் வெளியேறுகிறார். ஆத்திரத்துடன் மாலினி வீட்டிற்கு செல்கிறார் செழியன். அவர் அங்கு கண்டிப்பாக ஒருநாள் வருவார் என்று தான் எதிர்பார்த்ததாக மாலினி உற்சாகத்துடன் வரவேற்கிறார். ஆனால் மாலினியை அடிக்க கைத்தூக்குகிறார் செழியன். பெண்களை அடிக்கக்கூடாது என்று கூறி தன்னுடைய அம்மா தன்னை வளர்த்ததாகவும் அதனால்தான் தான் மாலினியை அடிக்காமல் இருப்பதாகவும் கூறுகிறார்.

மாலினியிடம் ஆத்திரம்: தொடர்ந்து தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று தான் அவரை ஏமாற்றினேனா என்றும் கேள்வி எழுப்புகிறார். மாலினி திகைக்க, தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் தன்னை விட்டு விடும்படியும் தான் முன்னதாக கெஞ்சியதையும் எடுத்துக் கூறுகிறார். இப்படிப்பட்ட கிளையண்ட் தனக்கு வேண்டாம் என்று தன் அலுவலகத்தில் கூறியதாகவும் ஆனால் அவர்களும் இந்த விஷயத்தை காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றும் செழியன் ஆத்திரத்துடன் மாலினியிடம் பேசுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. மாலினியிடம் தான் பழகியதால்தான் தற்போது நடுத்தெருவில் நிற்பதாகவும் கோபத்துடன் பேசுகிறார் செழியன்.

பாக்கியாவின் விளக்கம்: இதனிடையே காரில் வேகமாக சென்ற செழியனை பின்தொடர்ந்து வந்த எழில் மாலினி மற்றும் செழியனினின் இந்த பேச்சை மறைந்திருந்து கேட்பதாகவும் இன்று எபிசோடில் காணப்பட்டது. முன்னதாக செழியன் மற்றும் ஜெனி விவகாரத்தில் பாக்கியா ஏன் ஜெனிக்கு சப்போர்ட்டாக இல்லை என்று ராதிகா அவரிடம் கேட்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதற்கு பதில் சொல்லும் பாக்கியா, செழியன் செய்தது தவறு என்றும் தனக்கு முன்னதாக கோபி செய்தது துரோகம் என்றும் தெளிவுபடுத்துகிறார். செழியன் மற்றும் ஜெனி விவகாரத்தில் அவர்கள் தற்போதுள்ள சூழலை கடந்து வந்தால் அவர்களுக்கு மிகவும் அழகான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை காத்திருப்பதாகவும் பாக்கியா ராதிகாவிடம் கூறுவதாக காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











