Baakiyalakshmi: தொடர்ந்து மல்லுகட்டும் ஈஸ்வரி -கமலா.. மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. ராதிகா வீட்டில் ஈஸ்வரி முகாமிட்டுள்ள சூழலில் அவருக்கும் ராதிகாவின் அம்மா கமலாவுக்கும் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனிடையே புதிய தயாரிப்பாளரிடம் தன்னுடைய கதையை சொல்வதற்காக ஏழில் கிளம்பி போவதாகவும் அவருக்கு ராமமூர்த்தி மற்றும் பாக்கியா வாழ்த்துக்கள் சொல்வதாகவும் காணப்பட்டது.

எழிலாக தொடர்ந்து அனைவரையும் கவர்ந்து வந்த விஜே விஷால் தற்போது மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நடிகர் நவீன் இந்த கேரக்டரில் இணைந்துள்ளார். இந்த கேரக்டர் மாற்றம் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனிடையே பாக்கியாவின் ரெஸ்டாரண்டிலும் புதிய பிரச்சினை தலைதூக்குவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Vijay TV Baakiyalakshmi serial today 21st May 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே காணப்பட்டது. இந்த சீரியலில் கோபியுடன் ராதிகா வீட்டிற்கு சென்றுள்ளார் ஈஸ்வரி. அங்கு ஈஸ்வரிக்கும் ராதிகாவின் அம்மா கமலாவிற்கும் இடையில் ஒத்துப் போகாத சூழல் காணப்படுகிறது. கோபி மற்றும் ராதிகா திருமணத்திலிருந்து அடிக்கடி பிரச்சினைகளை சந்தித்து, போலீஸ் ஸ்டேஷன் வரை இவர்களின் விவகாரம் சென்ற நிலையில் தற்போது ஒரே வீட்டில் இருவரும் இருப்பது அடுத்தடுத்த பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஈஸ்வரி அடாவடித்தனம்: ராதிகா அப்பார்ட்மெண்ட்டில் வாழ்ந்துவரும் சூழலில் இரண்டு பெட் ரூம் மட்டுமே உள்ளதால் ஈஸ்வரியை எங்கு தங்க வைப்பது என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இருக்கும் மற்றொரு அறையில் அவர் சென்று புகுந்து கொள்கிறார். இதனால் கமலா மற்றும் ராதிகாவின் மகள் மயூ இருவரும் ஹாலில் தரையில் படுத்து தூங்கும் சூழல் ஏற்படுகிறது. நீண்ட நாட்களாக கமலா ராதிகாவுடன் இருக்கும் சூழலில் தன்னுடைய மகள் மற்றும் அம்மா இருவரும் தரையில் படுக்கும் போது ஈஸ்வரி மட்டும் சொகுசாக கட்டிலில் தூங்குவதா என்று ராதிகா கோபியிடம் ஆத்திரப்படுகிறார். தொடர்ந்து இரு தினங்களில் ஈஸ்வரியை அங்கிருந்து அனுப்பி வைக்குமாறு கூறுகிறார்.

மல்லுகட்டும் ஈஸ்வரி -கமலா: இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கோபி முழிக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் காலையில் காலதாமதமாக எழுந்திருக்கும் ஈஸ்வரி, குளித்துவிட்டு ஹாலில் வந்து காபி, காபி என்று கத்துகிறார். இதையடுத்து ராதிகா, அவருக்கு காபி போட்டு தர எழுந்து போகிறார். ஆனால் அவரது அம்மாவோ தங்களது பெயர்களை அழைத்து கூப்பிட்டால் போகலாம் என்றும் காபி என்பது தங்களது பெயர் இல்லை என்றும் உறுதியுடன் கூறுகிறார். இதையே ஹாலுக்கு வந்து ஈஸ்வரியிடமும் கட் அண்ட் ரைட்டாக அவர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

மாற்றப்பட்ட நடிகர்: அடுத்தடுத்து தன்னை கமலா கடுப்படிக்கும் சூழலில் ஈஸ்வரிக்கு ஆத்திரம் அதிகரிக்கிறது. இந்நிலையில் தன்னுடைய கதையை புதிய தயாரிப்பாளருக்கு சொல்வதற்காக ஏழில் கிளம்புகிறார். அவரை ராமமூர்த்தி மற்றும் பாக்கியா இருவரும் சேர்ந்து வாழ்த்தி அனுப்புகின்றனர். சீரியலில் தொடர்ந்து எழிலாக நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வந்த விஜே விஷால் தற்போது மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சீரியல் நடிகர் நவீன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். என்ன காரணத்தினால் விஜே விஷால் சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்பது குறித்து தெரியவில்லை. சினிமாவில் நடிக்க சான்ஸ் பெறுவதற்காக விஜே விஷால் சீரியலில் இருந்து விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X