Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்தத் தொடர் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சூழலில் விரைவில் எண்ட்கார்ட் போடவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப அடுத்தடுத்த கதைக்களங்கள் காணப்படுகின்றன. பழனிச்சாமிக்கு பாக்கியா மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ள சூழலில், ராதிகா தற்போது கர்ப்பமடைந்துள்ளார்.
இதையொட்டிய காட்சிகள் அடுத்தடுத்து சீரியலில் ஒளிபரப்பாகி வருகின்றன. தன்னுடைய பேரன் எழில் மற்றும் அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து ஈஸ்வரி கட்டாயப்படுத்தி வருகிறார். இதனால் இவர்கள் இருவரிடையேயும் பேசாமல் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பது குறித்து தெரியவந்தால் அவரது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை ஈர்க்கும்வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியல் 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்துள்ள நிலையில், விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சீரியல் ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் ரசிகர்களை கவரும்வகையில் இதன் எபிசோட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. 25 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இருந்து 3 குழந்தைகளுக்கும் தாயான நிலையில், கணவனால் கைவிடப்படுகிறார் பாக்கியா.

கோபியின் குடைச்சல்: பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பெற முயல்கிறார் கோபி. ஒருகட்டத்தில் இதுகுறித்து அறிந்து தானே மனமுவந்து விவாகரத்து கொடுக்கிறார் பாக்கியா. தொடர்ந்து கோபியை வீட்டை விட்டு வெளியேற்றவும் செய்கிறார். ஆனாலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அவரது அம்மா ஈஸ்வரி, அவரை மட்டுமிலலாமல் ராதிகாவையும் வீட்டிற்குள் கொண்டுவந்து வைத்துக் கொள்கிறார். தொடர்ந்து கோபி, பாக்கியாவிற்கும் அவரது வளர்ச்சிக்கும் குடைச்சல் கொடுப்பதை பார்க்க முடிகிறது. அவற்றையெல்லாம் தன்னுடைய மகன்கள், பழனிச்சாமி உதவியுடன் முறியடிக்கிறார் பாக்கியா.
பாக்கியா பெருமிதம்: எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறார். இந்நிலையில் தன்னுடைய ரெஸ்டாரெண்டில் வாடிக்கையாளர்கள் அதிகமாக வராததற்கு காரணத்தை கண்டுபிடித்து அதையும் பழனிச்சாமி உதவியுடன் சிறப்பாக கையாள்கிறார். தற்போது கடையில் லாபம் அதிகரித்துள்ளதாக தன்னுடைய மாமியார் மற்றும் மருமகள்களிடம் அவர் பெருமையாக பேசுவதை பார்க்க முடிந்தது. இதனிடை,யே தோழியாக மட்டுமே நினைத்த பாக்கியா மீது பழனிச்சாமிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதையொட்டி அவரது நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
பழனிச்சாமியின் நடவடிக்கை: பாக்கியாவிற்கு புத்தகங்களை பரிசளிக்கிறார். தன்னுடைய வீட்டிலிருந்தபடியே விதவிதமான சட்டைகளை போட்டு புகைப்படங்களை எடுத்து அதை டிபியில் போடுகிறார். இதை பாக்கியா பார்ப்பாரா என்று ஆவலுடன் அவர் நினைத்துப் பார்க்க, தன்னுடைய மகள் இனியாவுடன் இன்றைய எபிசோடில் இந்தப் புகைப்படங்களை பாக்கியா பார்ப்பதாக காணப்படுகிறது. இதனிடையே ராதிகா கர்ப்பமாக இருப்பதையொட்டி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் கோபி காணப்படுகிறார். தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் அவர் இதை எப்படி சொல்வார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











