Baakiyalakshmi serial: பார்ட்டியில் குடிக்கும் நண்பர்கள்.. ஆபத்தில் சிக்கும் இனியா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் பிரம்மாண்டமான சமையல் போட்டியில் பாக்கியா மற்றும் கோபி இருவரும் போட்டியிடுவதாக அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. இதில் இருவரும் சமமான சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ளதாக இன்றைய தினம் காணப்படுகிறது. இதையடுத்து ஏழாவது மற்றும் இறுதி சுற்று நடைபெற உள்ளது அதுவே இந்த சமையல் போட்டியின் வெற்றியை தீர்மானிப்பதாக காணப்படுகிறது.
இதனிடையே பாக்கியாவை இந்த சமையல் போட்டியில் எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்று கோபி தீவிரமாக செயல்படுகிறார். அடுத்தடுத்த செஃப்களை களமிறக்குகிறார். இதே போல பாக்கியா தான் கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று ஈஸ்வரியும் தொடர்ந்து தன்னுடைய விருப்பத்தை கூறுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் தொடர்ந்து பாக்கியா மற்றும் கோபி இருவரும் பிரம்மாண்ட சமையல் போட்டியில் போட்டியிடுவதாக அடுத்தடுத்த காட்சிகளை வெளிபரப்பியது. இந்த போட்டியில் இணைவதற்கு கோபி துவக்கத்தில் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை. தன்னுடைய நண்பர் செந்தில் கூறியதையடுத்து அவர் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தார். ஆனால் இதில் பாக்கியா போட்டியிட்டதை பார்த்து அவரை தான் கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றி கொள்ள வேண்டும் என்ற வீம்பு கோபிக்கு வந்துள்ளது. இதனால் அடுத்தடுத்த செஃப்களை களமிறக்கி தன்னுடைய பக்கத்தை மிகவும் வலிமையாக்கி கொண்டுள்ளார் கோபி.
சமையல் போட்டியில் பாக்கியா -கோபி: போட்டி துவங்குவதற்கு முன்னதாக தன்னுடைய அம்மாவிடம் போய் பேசும் கோபி, இந்த போட்டியில் வெற்றி பெறும் படி தன்னை ஆசீர்வதிக்க கேட்கிறார். ஆனால் ஈஸ்வரியோ பாக்கியாதான் வெற்றி கொள்வார் என்று கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. பாக்கியா வெற்றி கொள்ளும் வகையில் அவருடன் ஈஸ்வரி மற்றும் செல்வி இருவரும் சிறப்பாக கை கொடுக்கின்றனர். இந்நிலையில் 5 சுற்றுகளில் பாக்கியா மூன்று சுற்றிலும் கோபி இரண்டு சுற்றிலும் வெற்றி பெறுவதாக காணப்படுகிறது. நேற்றைய தினம் இதன் நீண்ட எபிசோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிலையில் இன்றைய எபிசோடில் அதன் தொடர்ச்சியாக ஆறாவது சுற்றில் இருவரும் போட்டியிடுவதாக காணப்பட்டது.
6வது சுற்றில் வெற்றிபெறும் கோபி: பாரம்பரிய முறைப்படி பாக்கியாவும் கான்டினென்டல் ஸ்டைலில் கோபியும் அடுத்தடுத்து டிஷ்களை நடுவர்கள் முன்னிலையில் வைக்கின்றனர், அதை சுவைக்கும் நடுவர்கள் இருவரும் சமமான புள்ளிகளை எடுத்துள்ளதாகவும் ஆனால் யாராவது ஒருவரை வெற்றியாளர் என்று அறிவிக்கும் சூழலில் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் கோபி வெற்றி பெறுவதாகவும் அறிவிக்கின்றனர். இதனால் பாக்கியா, ஈஸ்வரி உள்ளிட்டவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். எப்படியாவது பாக்கியாவை இந்த போட்டியில் வெற்றி கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக இருக்கும் கோபிக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
பப்பிற்கு செல்லும் இனியா: இவ்வாறு இன்றைய எபிசோடில் சமையல் போட்டி குறித்த அடுத்தடுத்த காட்சிகளை பார்க்க முடிந்தது. இதனிடையே தன்னுடைய தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வதாக கூறி சென்ற இனியாவை அவரது பிரெண்ட்ஸ் அனைவரும் வற்புறுத்தி பக்கத்தில் இருக்கும் பப்பிற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு சென்று குடிக்க போவதில்லை என்று இனியாவின் நண்பர்கள் முன்னதாக கூறிய நிலையில் அவர்கள் அனைவரும் பீர் குடிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனால் சங்கடப்படும் இனியாவை வற்புறுத்தி அங்கு ஆட வைக்கின்றனர். இதையடுத்து இனியாவின் கல்லூரி சீனியர், இனியா குறித்து அடுத்தடுத்து அழகாக இருப்பதாக கமெண்ட் செய்கிறார்.
சிக்கலில் இனியா: இதனால் இனியாவின் நண்பர்கள் ஆத்திரமடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே இனியாவிற்காக அவரது தோழியின் வீட்டு வாசலில் செழியன் காத்திருப்பதாகவும் தன்னுடைய அம்மாவிற்கு செழியன் இனியாவை தான் பார்த்துக் கொள்வதாக சமாதானம் கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காட்சிகள் அமைந்திருந்தன.


Click it and Unblock the Notifications











