Baakiyalakshmi: குழந்தை இல்லாம பண்ணிட்டீங்க.. குற்றம் சாட்டிய கோபி.. வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா, கமலா மற்றும் கோபி என அனைவரும் ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று அடுத்தடுத்து குற்றம் சாட்டுகின்றனர். ஈஸ்வரி அவர்கள் கூறுவது எனக்கு வருத்தத்தை கொடுக்கவில்லை என்றும் கோபி கூறுவது மிகப்பெரிய வருத்தத்தை கொடுப்பதாகவும் கோபியிடம் தொடர்ந்து அழுகையுடன் கூறுகிறார்.

இந்நிலையில் தன்னுடைய குழந்தையை இல்லாமல் செய்து விட்டதாக கோபி ஈஸ்வரியை பார்த்து குற்றம் சாட்டுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. தொடர்ந்து கமலா மற்றும் ராதிகா ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற கூறுவதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது. கோபியும் இதற்கு ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறார்.

Television Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் ராதிகா. மருத்துவமனையிலேயே தான் அம்மாவுடன் ஊருக்கு கிளம்புவதாகவும் ஈஸ்வரி இருக்கும் இடத்தில் தன்னால் இருக்க முடியாது என்றும் ராதிகா கூறிய நிலையில், கோபி வீட்டிற்கு போய் அனைத்தையும் பேசிக் கொள்ளலாம் என்று கூறி அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அங்கு வந்தவுடன் மீண்டும் தனது குற்றச்சாட்டுகளை கமலா ஈஸ்வரி மீது சுமத்துகிறார்.

வலுக்கும் சண்டை: ஈஸ்வரி ராதிகாவை தள்ளி விட்டதை தான் நேரில் பார்த்ததாகவும் கமலா கூறுகிறார். நான் அப்படி செய்யவில்லை என்று ஈஸ்வரி அவர்களிடம் வாதிடுகிறார். ஆனாலும் ராதிகாவும் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து கொண்டு துவக்கத்திலிருந்து அந்த குழந்தை வேண்டாம் என்று கூறியது போல அந்த குழந்தையை இல்லாமலேயே செய்து விட்டீர்கள் என்று குற்றம் சாட்டுகிறார். ஒரு கட்டத்தில் கமலா, ஈஸ்வரியின் கழுத்தை நெரிக்க செல்கிறார். இது போன்ற ஒரு பெண்ணை தான் இதுவரை பார்த்ததில்லை என்றும் பிடிக்காத விஷயத்திற்காக இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வீர்களா என்றும் பலவாறாக கமலா குற்றம் சாட்டுகிறார்.

பரிதவிக்கும் ஈஸ்வரி: இந்நிலையில் கோபியிடம் சென்று ஈஸ்வரி மருத்துவமனையில் இருந்தது போலவே இப்போதும் சும்மா இருக்கிறாயே, அவர்கள் அடுத்தடுத்து கூறும் குற்றச்சாட்டுகளை இல்லை என்று கூறாமல் இருக்கிறாயே என்று கண்ணீருடன் கேட்கிறார். நான் இப்படி செய்யக் கூடியவளா என்றும் கோபியிடம் ஈஸ்வரி கேட்க, மீண்டும் ஈஸ்வரி தனது நாடகத்தை துவங்கி விட்டதாக ராதிகா கூறுகிறார். இதனிடையே, ஈஸ்வரி நினைத்தது போலவே தன்னுடைய குழந்தையை இல்லாமல் செய்து விட்டதாக கோபியும் குற்றம் சாட்டுகிறார். தன்னுடைய குழந்தையை கொன்று விட்டதாக கூற வருகிறார். ஆனால் இடையிலேயே நிறுத்திக் கொள்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறும் ஈஸ்வரி: தொடர்ந்து கோபியிடம் ஈஸ்வரி அவருடைய குழந்தையை தான் இல்லாமல் செய்து விட்டேனா என்று பலவாறாக கண்ணீருடன் கேட்கிறார். இந்நிலையில் தன்னுடைய அறைக்கு சென்று ஈஸ்வரி கதவை சாத்திக் கொள்கிறார். கமலா வீட்டை விட்டு கிளம்பாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வெளியில் இருந்தபடி கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து ராதிகாவும் கோபியிடம் உங்களது அம்மாவை அனுப்பப் போகிறீர்களா இல்லையா என்று கோபத்துடன் கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இதையடுத்து தன்னுடைய பெட்டியுடன் ஈஸ்வரி அங்கிருந்து புறப்படுகிறார்.

தெருவில் நின்ற ஈஸ்வரி: அவரை பார்த்து கமலா, இந்த வீட்டிற்குள் உங்கள் நிழல் கூட வரக்கூடாது நீங்கள் பார்த்தாலே அனைத்தும் மோசமாக மாறிவிடும் என்று பலவாறாக கூறுகிறார். இந்நிலையில் தன்னுடைய அம்மா வெளியேறுவதை வருத்தத்துடன் கோபி பார்ப்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. இதையடுத்து பெட்டியுடன் சாலைக்கு வரும் ஈஸ்வரி, எங்கு போவது என்று தெரியாமல் தவித்து நிற்கிறார். இதனிடையே அதிகாலை முதலே ஈஸ்வரி குறித்து தொடர்ந்து வருத்தத்துடன் காணப்பட்ட பாக்கியா, ஈஸ்வரி தன்னை அழைப்பது போல கேட்டு வெளியில் வந்து பார்க்கிறார்.

கைக்கொடுத்த பாக்கியா: அப்போது அங்கே தெருவில் தன்னுடைய மாமியார் நின்று கொண்டிருப்பதை பார்த்து அழுகையுடன் ஓடி வந்து அவரை ஆறுதலுடன் கட்டியணைத்து கொள்கிறார். என்ன ஆயிற்று என்று அவர் கேட்பதாகவும் ஈஸ்வரி கதறி அழுவதாகவும் இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X