Baakiyalakshmi: பாக்கியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. திரும்ப திரும்ப கேட்ட பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த பல காட்சிகளை காண முடிந்தது. பழனிச்சாமி விதவிதமான கலர்களில் சட்டைகளை போட்டு, புகைப்படங்கள் எடுத்து அதை டிபியில் வைத்த சூழலில் அதைப்பார்த்து இனியா, நக்கலடிக்கிறார். தொடர்ந்து அதை தன்னுடைய அம்மாவிடம் காட்டி சிரிக்கிறார்.

ஆனால் இதுபோல மற்றவர்களின் விஷயங்களை கிண்டலடிக்கக்கூடாது என்று அறிவுரை கூறும் பாக்கியா, தொடர்ந்து அவரை பாராட்டி மெசேஜ் அனுப்புமாறு இனியாவிடம் கூறுகிறார். ஆனால் அதுபோல தனக்கு பொய் சொல்ல வராது என்று கூறுகிறார் இனியா. தொடர்ந்து பாக்கியாவே பழனிச்சாமிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். அவரது சட்டைகள் அழகாக இருப்பதாக அவர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜால், பழனிச்சாமி உச்சி குளிர்கிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 23rd April 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்த சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மஞ்சள், ஆரஞ்சு உள்ளிட்ட விதவிதமான கலர்களில் சட்டைகளை போட்டு புகைப்படம் எடுக்கும் பழனிச்சாமி அதை தன்னுடைய டிபியில் வைக்கிறார். இதை பார்க்கும் இனியா, அவரை கலாய்த்து தன்னுடைய அம்மாவிடம் நக்கலடிக்கிறார். இதை கண்டிக்கும் பாக்கியா, அவர் தன்னுடைய அடுத்தடுத்த செல்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டி பேசியுள்ளதாகவும் அதனால் அப்படி பேச வேண்டாம் என்று கூறுகிறார்.

பாக்கியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்: தொடர்ந்து பழனிச்சாமியின் சட்டைகள் அழகாக இருப்பதாக கூறி அவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். இதை கேட்கும் பழனிச்சாமி, மிகவும் உற்சாகமடைகிறார். அவருக்குள் காதல் எட்டிப் பார்த்துள்ள நிலையில், காதலியிடமிருந்து வந்த இந்த பாராட்டு மெசேஜை அடுத்தடுத்து போட்டு கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். இதனிடையே, ராதிகாவின் கர்ப்பத்தால் அதை எப்படி குடும்பத்தினரிடம் சொல்ல போகிறோம் என்ற குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ராதிகாவிடம் இந்த கர்ப்பத்தை கலைத்து விடலாமா என்று கேட்கிறார் கோபி. இதையடுத்து ராதிகாவிடம் உதை படுகிறார்.

கனவிலும் துரத்தும் குழந்தை பிரச்சினை: இதனிடையே, கண்டிப்பாக இந்தக் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று ராதிகாவை சமாதானப்படுத்தி, தூங்க வைக்கிறார். ஆனால் அவருக்கு தூக்கம் வராமல் அல்லாடுகிறார். கனவிலும் குழந்தை குறித்தே வருகிறது. தான் தன்னுடைய குழந்தையை வீட்டிற்குள் அழைத்து வருவதாகவும், தன்னுடைய குழந்தையை செழியனின் குழந்தையிடம் சித்தப்பா என்று அவர் அறிமுகம் செய்வதாகவும் காணப்படுகிறது. மேலும் தன்னுடைய அப்பா ராமமூர்த்தி, பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம் என்று கூறி அவமானப்படுத்துவதாகவும் கனவில் தோன்றுகிறது. இதையெல்லாம் யோசித்து தூக்கம் வராமல் தவிக்கிறார்.

என்னது வெண்டைக்காய்க்கு தோல் சீவனுமா?: இதனிடையே அனைவரும் சமைப்பதை பார்த்து ஜெனியும் சமையலில் ஒத்துழைப்பதாக கூறுகிறார். அவரிடம் வெண்டைக்காயை கட் செய்து கொடுக்குமாறு பாக்கியா கூற, வெண்டைக்காயை எவ்வளவு சைசிற்கு வெட்ட வேண்டும், கழுவிவிட்டு வெட்ட வேண்டுமா, தோல் சீவ வேண்டுமா என அடுத்தடுத்த கேள்விகளை கேட்டு அனைவரையும் அவர் கடுப்பேற்றுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே சமையலறைக்கு காபி போடுவதற்காக வந்த ராதிகா, தாளிக்கும் வாசத்தால் வாமிட் வர, அங்கிருந்து ஓடுகிறார். இதை பார்க்கும் செல்வி, என்ன புள்ளதாச்சி மாதிரி தாளிக்கும் வாசத்திற்கெல்லாம் வாந்தி வருது என்று கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X