Baakiyalakshmi:செழியனுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்ல.. பெண் வீட்டாரிடம் போட்டுடைத்த பாக்கியா
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. மாலினியால் ஏற்பட்ட பிரச்சினையால் செழியன் -ஜெனி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவர்களை சேர்த்து வைக்க நீதிமன்றம் அடுத்தடுத்து கவுன்சிலிங்கை ஏற்பாடு செய்து வருகிறது. இவர்களை சேர்த்து வைக்க பாக்கியா, எழில் உள்ளிட்டவர்களும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தன்னுடைய மகளின் வாழ்க்கையை செழியன் மற்றும் அவரது குடும்பத்தினர் சீரழித்து விட்டதாக ஜெனியின் அப்பா ஆத்திரம் கொள்கிறார்.
இதனால் தன்னுடைய மகளுக்கு உடனடியாக விவாகரத்து பெற்று, அவருக்கு மறுமணம் செய்து வைக்கவும் அவர் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார். இதுகுறித்து கேள்விப்பட்ட செழியன், நியாயம் கேட்கப் போக அவரை அடித்து காயப்படுத்துகிறார் ஜோசப். இதனால் செழியனின் அப்பா மற்றும் பாட்டி ஆகியோர் ஆத்திரமடைந்து, ஜெனிக்கு முன்னதாக செழியனுக்கு திருமணம் செய்து வைக்க முனைப்பு காட்டுகின்றனர். புரோக்கர் மூலம் செழியனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதனிடையே இன்றைய எபிசோடில் பெண் வீட்டார் செழியனை பார்க்க வீட்டிற்கே வருவதாக காட்டப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பல மாதங்களாக ஆண்டுகளாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். 1000 எபிசோட்களை தாண்டி இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது செழியன் மற்றும் ஜெனி விவகாரம் முன்னிலை படுத்தப்பட்டு வருகிறது. மாலினியால் இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையில் இருந்து வெளிவர முடியாமல் இருவரும் தவித்து வருகின்றனர். தனக்கு செழியன் துரோகம் செய்துவிட்டதாக கருதும் ஜெனி, அதை தாங்க முடியாமல் காணப்படுகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
செழியன் -ஜெனி விவாகரத்து வழக்கு: செழியனிடம் இருந்து ஜெனிக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்து, தன்னுடைய மகளுக்கு மறுமணம் செய்து வைக்க துடிக்கிறார் ஜோசப். இதுகுறித்து தெரியவந்த நிலையில் நேரடியாக ஜெனியிடம் இதுகுறித்து கேட்கிறார் செழியன். இதனால் ஏற்படும் சண்டையில் செழியனை அடித்துத் துவைக்கிறார் ஜோசப். இந்த விவகாரம் குறித்து தெரிந்து ஆத்திரப்படுகின்றனர் கோபி மற்றும் ஈஸ்வரி. ஜெனிக்கு முன்னதாகவே செழியனுக்கு மறுமணம் செய்துவைக்கும் ஏற்பாடுகளில் இறங்குகின்றனர். இந்த விஷயத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அவர்களிடம் தெளிவுப்படுத்துகிறார் செழியன்.
செழியனின் விருப்பம்: ஜெனி மற்றும் தன்னுடைய மகளுடன் இணைந்து வாழவே தான் விரும்புவதாகவும் கூறுகிறார். ஆத்திரத்தில் மாலினியிடம் சென்று ஜெனி தன்னை பிரிய நேர்ந்தால், மாலினியை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்வேன் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார். இந்நிலையில் இன்றைய தினம் செழியனை பார்க்க பெண் வீட்டார் வீட்டிற்கு வருவதாக காட்டப்படுகிறது. ராதிகாவை தன்னுடைய மனைவி என்று அறிமுகம் செய்கிறார் கோபி. ஈஸ்வரியும் ராதிகாவை தன்னுடைய மருமகள் என்று அறிமுகம் செய்யும் நிலையில் அங்கு பாக்கியா மற்றும் இனியா வருகின்றனர். அவர்குறித்து கேட்க அவர் தன்னுடைய எக்ஸ் மனைவி என்கிறார் கோபி.
பாக்கியா ஆவேசம்: இதனால் பெண் வீட்டார் ஆச்சர்யத்துடன் இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில் இருக்கிறார்களா, சண்டை சச்சரவு இல்லாமல் இருப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கின்றனர். இதனிடையே செழியனுக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுவதை பார்த்து திகைக்கும் பாக்கியா, செழியனிடமே இதுகுறித்து கேட்கிறார். ஜெனனி தன்னை விவாகரத்து செய்தாலும் தான் மறுமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று உறுதியுடன் செழியன் கூற, அதை கோபி மற்றும் ஈஸ்வரியிடம் உடைத்து கூறுமாறு பாக்கியா கூறுகிறார். இதையடுத்து மகனை கீழே அழைத்துவரும் பாக்கியா, இந்த திருமணத்தில் செழியனுக்கு விருப்பம் இல்லை என்று பெண் வீட்டார் முன்பு கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











