Baakiyalakshmi serial: இவ்வளவும் நடிப்பா.. ஈஸ்வரி பாட்டி இது கொஞ்சம் ஓவர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோடுகளால் ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடிலும் அதைத் தொடர்ந்துள்ளது. தன்னுடைய மகன் கோபியுடன் ராதிகா வீட்டுக்கு வருகிறார் ஈஸ்வரி. பாக்கியா வீட்டில் தன்னுடைய அதிகாரத்தை செய்தது போலவே இங்கும் அதை தொடர நினைக்கிறார். ஆனால் அதற்கு ராதிகாவின் அம்மா கமலா இடம் கொடுக்கவில்லை.
முன்னதாகவே ஈஸ்வரி மற்றும் கமலா இடையில் பிரச்சினைகள் இருந்த சூழலில் தற்போது இருவரும் ஒரே வீட்டில் இருப்பதால் அது அதிகரித்துள்ளது. கமலா செயல்களால் கடுப்பாகும் ஈஸ்வரி, தொடர்ந்து கமலா மற்றும் ராதிகா குறித்து கோபியிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி போட்டு கொடுக்கிறார். இதனால் கோபி ராதிகாவிடம் ஆத்திரமடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ஈஸ்வரியின் அட்ராசிட்டியை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகவுள்ளது. ராதிகாவின் கர்ப்பத்தை அடுத்து பாக்கியா வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார் கோபி. அவர் தன்னுடன் தன்னுடைய அம்மா ஈஸ்வரியையும் அழைத்துக் கொண்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார். முன்னதாக ராதிகாவின் அம்மா கமலா மற்றும் ஈஸ்வரிக்கு இடையில் சரியான உறவு இல்லாத சூழலில், அவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து வாய் தகராறு ஏற்படுகின்றன.
கோபியிடம் ராதிகா ஆத்திரம்: கமலா மற்றும் ஈஸ்வரி இடையிலான சண்டைகளால் கோபி மற்றும் ராதிகா இருவரும் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். முன்னதாக கமலா பயன்படுத்தி வந்த அறையை அடாவடியாக எடுத்துக் கொள்கிறார் ஈஸ்வரி. இதனால் கமலா மற்றும் ராதிகாவின் மகள் மயூ இருவரும் ஹாலில் தரையில் படுத்து தூங்கும் சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடையும் ராதிகா, ஈஸ்வரியை உடனடியாக அந்த வீட்டிலிருந்து அனுப்பி வைக்குமாறு கோபியிடம் கூறுகிறார். உட்கார்ந்த இடத்திலிருந்து பாக்கியா வீட்டில் செய்தது போலவே இங்கும் தன்னுடைய ராஜ்ஜியத்தை தொடர நினைக்கிறார் ஈஸ்வரி.
மயங்கிவிழும் ஈஸ்வரி: ஆனால் இதற்கு கமலா இடம் கொடுக்கவில்லை. காபி கொடுப்பதிலிருந்து அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படும் சூழலில் திடீரென ஈஸ்வரி மயங்கி விழுகிறார். இதனால் பதற்றத்துடன் கோபி என்ன நடந்தது என்று தன்னுடைய அம்மாவிடம் கேட்க, காலையில் இருந்து காபி, டிபன் என எதுவும் சாப்பிடவில்லை என்று அவர் கூறுகிறார். இதனால் பயங்கரமாக ஆத்திரமடையும் கோபி, தன்னுடைய அம்மாவிற்கு ஹார்லிக்ஸ் போட்டுக் கொண்டு வந்து கொடுப்பதாக இன்றைய எபிசோடு காணப்படுகிறது. தொடர்ந்து ராதிகாவிடம் தன்னுடைய அம்மாவை சரியாக கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அவர் தன்னுடைய கிளவுட் கிச்சனுக்கு செல்கிறார்.
ஆப்பிளை பிடுங்கும் ராதிகா: அவர் அப்படி செல்ல, ஈஸ்வரி டிவியில் பாட்டு போட்டு என்ஜாய் செய்வதாக காணப்படுகிறது. இதனால் ராதிகா, கமலா இருவரும் மிகுந்த கடுப்பிற்குள்ளாகின்றனர். இதனிடையே கர்ப்பமாக இருக்கும் ராதிகாவிற்காக ஆப்பிள் கட் செய்து வைக்கிறார் கமலா. அவர் அப்படி செல்ல உடனே அந்த தட்டை எடுத்து ஈஸ்வரி தானே சாப்பிடுகிறார். இதனால் ஆத்திரமடையும் கமலா, ராதிகாவிடம் புகார் செய்ய ஈஸ்வரிக்கு சுகர் இருப்பதால் ஆப்பிளை சாப்பிட வேண்டாம் என்று கூறி அந்த தட்டை பிடுங்குகிறார் ராதிகா. இதையடுத்து சாப்பிடும் தட்டை பிடுங்கியதை மட்டும் கோபியிடம் கூறும் ஈஸ்வரி, ராதிகாவிற்கு கோபியிடம் திட்டு வாங்கி கொடுக்கிறார்.
நெகிழ்ச்சியில் எழில்: இவ்வாறு அடுத்தடுத்து தொடர்ந்து ராதிகா மற்றும் அவரது அம்மா கமலாவை கடுப்பேற்றிக் கொண்டு அங்கேயும் தன்னுடைய ராஜ்ஜியத்தை தொடர்கிறார் ஈஸ்வரி. இந்நிலையில் புதிய புரொடியூசரிடம் கதை சொல்ல செல்லும் எழிலுக்கு கதை ஓகே ஆகிறது. தன்னுடைய மகனின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்று சாமியை வேண்டிக் கொண்டு புரொடியூசர் அலுவலக வாசலிலேயே தவம் கிடக்கிறார் பாக்கியா. வெளியில் வந்து இதை பார்க்கும் எழில், தன்னுடைய அம்மாவை கட்டி அணைத்து நீ தான் பெஸ்ட் என்று கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. தொடர்ந்து தாத்தா, ஜெனி, ஈஸ்வரியிடம் அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறார் எழில்.


Click it and Unblock the Notifications











