Baakiyalakshmi serial: என்ன ஈசு வெட்கமா.. தாத்தாவின் 80வது பிறந்தநாளில் ஸ்வீட் என்ட்ரி கொடுத்த எழில்!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை மிகச்சிறப்பாக கவரும்வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் தாத்தா ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடி வருகின்றனர். ஆனாலும் வீட்டைவிட்டு வெளியேறிய எழில் வராமல் அனைவரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
கோயிலில் வைத்து இந்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கிறது. நிகழ்ச்சியில் பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொள்கின்றனர். ஆனாலும் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரியின் மகன் கோபி இந்த விழாவில் பங்கேற்காதது குறித்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் தர்மசங்கடமான நிலைமைக்கு அனைவரும் தள்ளப்படுகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் காணப்பட்டன. தாத்தா ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையடுத்து கோயிலில் குடும்பத்தினர் அனைவரும் இருக்கின்றனர். விழாவிற்கு பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் வந்துள்ள நிலையில், ராமமூர்த்தி -ஈஸ்வரியின் ஒரே மகன் கோபி வராதது குறித்து உறவினர்கள் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். முன்னதாக ஏற்பட்ட பிரச்சினையில் கோபி மற்றும் ஈஸ்வரி இடையில் பிரிவினை வந்த நிலையில், அவரை தான் தலை முழுகிவிட்டதாக கூறி தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார் ஈஸ்வரி.
ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள்: இதனால் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அவருக்கு அழைப்பு விடப்படவில்லை. இதனிடையே, தன்னுடைய வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் கோபி, செழியனுக்கு கால் செய்கிறார். அவரோ, அனைவர் முன்னிலையில் அவரது காலை கட் செய்கிறார். இதனால் நடக்கும் கொண்டாட்டம் குறித்து அறியாமல் கோபி திண்டாடுகிறார். இதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறார் ராதிகா. அவர் எதையும் கேட்காதது குறித்தும் கோபி வெறுப்புடன் யோசிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
உறவினர்கள் கேள்வி: இந்நிலையில் விழாவிற்கு கோபிதான் வரவில்லை பேரன் எழில் அவரது மனைவி என யாரையுமே காணவில்லையே என அடுத்தடுத்து உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் அந்த சூழ்நிலை சிறிது நேரம் இறுக்கமாக மாறுகிறது. ஆனாலும் அந்த சூழ்நிலையை பழனிவேல், இனியா, ஜெனி என அனைவரும் சேர்ந்து சமாளிக்கின்றனர். இந்நிலையில் ஐயர் மந்திரம் ஓத, ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். வெட்கம், ஆர்வம் என அனைத்தும் ஒருங்கே இணைய ஈஸ்வரி மிகவும் பளபளப்பாக காணப்படுவதாக இன்றைய எபிசோடில் காட்சிகள் அமைந்திருந்தன.
எழில் ஸ்வீட் என்ட்ரி: இதனிடையே, அங்கே வரும் எழில் ஈஸ்வரியை பார்த்து, என்ன வெட்கமா ஈசு என்று கேட்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. அவர் தன்னுடைய மனைவி அமிர்தா மற்றும் நிலாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார். முன்னதாக அமிர்தா இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்துக் கொள்ள மாட்டேன் என்று விடாப்பிடியாக கூறும் எழில், அவரையும் அழைத்துக் கொண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதாக இன்றைய எபிசோடின் காட்சிகள் அமைந்திருந்தன. தன்னுடைய தங்க மோதிரத்தை விற்று தாத்தாவிற்கு அழகான வாட்சை அமிர்தா பரிசாக வாங்கியுள்ளதையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











