Baakiyalakshmi: தகர்ந்த இனியாவின் கனவு.. என்ன இருந்தாலும் கோபி இப்படி செஞ்சிருக்கக் கூடாது!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய காட்சி அமைப்புகளை கொண்டிருந்தது. நீண்ட காலங்களாக டான்ஸ் மச்சி டான்ஸ் ஷோவிற்காக பயிற்சி மேற்கொண்டு வந்த இனியா ஃபைனல்சில் கண்டிப்பாக டைட்டிலை பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த சூழலில் அதில் ஏமாற்றமே ஏற்படுகிறது.

போட்டிக்கு முன்னதாக இனியா தன்னுடைய அப்பா, அம்மாவை மேடைக்கு அழைக்க, பாக்கியா மேடைக்கு வருகிறார். கோபி ராதிகாவையும் மேடைக்கு அழைத்து வருகிறார். இதனால் இனியா அவமானப்படுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. சக போட்டியாளர்கள் மற்றும் தோழிகள் அனைவரும் இனியாவை கலாய்கின்றனர். இதனால் முக்கியமான நேரத்தில் ஆட முடியாமல் அவர் திணறுவதை இன்றைய எபிசோடில் காண முடிந்தது.

television baakiyalakshmi serial vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 1300 எபிசோடுகளை கடந்து தொடர்ந்து வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இந்த சீரியல் எண்ட் கார்டு போட உள்ளதாக தொடர்ந்து பல மாதங்களாக கூறப்பட்டு வரும் சூழலில் அதற்கான எந்த காட்சிகளும் இதில் காணப்படவில்லை. மாறாக உடல்நிலை சரியில்லாத கோபியை மீண்டும் பாக்கியா வீட்டிற்கு அழைத்து வந்து அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளார் ஈஸ்வரி. ராதிகாவையும் கன்வின் செய்து தற்போது பாக்கியா வீட்டிற்கு அவருடன் மயூவையும் கோபி அழைத்து வருகிறார். ஆனால் அவர்கள் அங்கு தங்க பாக்கியா வாடகை கேட்டு பெற்றுக் கொள்கிறார்.

ராதிகாவை கட்டாயப்படுத்தும் கோபி: இந்நிலையில் அடுத்தடுத்து ஈஸ்வரி மற்றும் ராதிகாவிற்கு இடையில் தொடர்ந்து சண்டைகள் ஏற்படுகின்றன. மீண்டும் பாக்கியாவையும் கோபியையும் சேர்த்து வைக்க ஈஸ்வரி செயல்பட்டு வருகிறார். கோபியின் மனமாற்றம் அனைவரையும் வியப்படைய செய்கிறது. இதனிடையே, டான்ஸ் மச்சி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இனியா தொடர்ந்து அதற்காக பயிற்சியில் ஈடுபடுகிறார். அடுத்தடுத்த ரவுண்டுகளில் வெற்றியையும் பெற்ற அவர் பைனல்சிற்காக மிகவும் ஆர்வமுடன் பிராக்டீஸ் செய்கிறார். இந்நிலையில் பைனல்ஸ் போட்டியில் ராதிகா பங்கேற்க வேண்டும் என்று கோபி கட்டாயப்படுத்துகிறார்.

அவமானப்படும் இனியா: ராதிகா வேண்டாம் என்று கூறியும் ராதிகாவை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வரும் கோபி, மேடையில் தன்னுடைய அம்மாவையும் அப்பாவையும் இனியா அழைக்க ராதிகாவையும் தன்னுடன் மேடையேற்றுகிறார். இதனால் மற்றவர்கள் கிண்டல் செய்கின்றனர். இனியாவிற்கு இரண்டு அம்மாவா என்று சக போட்டியாளர்கள் கலாய்க்க இதனால் மனமுடைந்து போகிறார் இனியா. இந்த எபிசோடில் இதன் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. இதை சிறிதும் எதிர்பார்க்காத கோபி அதிர்ச்சியடைகிறார். ஆயினும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் இனியா, அடுத்தடுத்த அவமானங்களுடன் தன்னுடைய டான்ஸில் கவனம் செலுத்தாமல் ஸ்டேஜில் சொதப்புவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

தகர்ந்த இனியாவின் கனவு: இனியாதான் எப்படியும் டைட்டிலை வெற்றி கொள்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது பரிசே கிடைக்கிறது. இதனால் இனியா மிகப்பெரிய கோபத்துக்கு உள்ளாகிறார். இதையடுத்து வீட்டிற்கு வரும் இனியா, இவை அனைத்திற்கும் காரணம் ராதிகா தான் என்று அவரை குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து பலவிதமாக பேசுகிறார். கோபி இதை தடுக்க முயன்றும் இனியாவை மற்றும் அவரது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார். இந்நிலையில் இடையில் பேசும் பாக்கியா, இந்த நிலைமைக்கு காரணம் ராதிகா இல்லை என்றும் கோபி தான் காரணம் என்றும் கூறுகிறார்.

கோபியை வெளுத்துவாங்கும் பாக்கியா: தன்னுடனேயே அனைத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோபியின் எண்ணம் தான் நடந்த அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்றும் பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. தன்னுடைய மகனை பாக்கியா குற்றம் சொல்வதை பொறுக்க முடியாமல் ஈஸ்வரியும் பதிலுக்கு பேசுவதாக அடுத்தடுத்த காட்சி அமைப்புகள் இருந்தன. ஆனாலும் நிகழ்ச்சியில் தான் மேடை ஏறி வந்தது தவறுதான் என்று ராதிகாவும் முன்னதாக குடும்பத்தினரிடம் சாரி கேட்டதையும் பார்க்க முடிந்தது. இவ்வாறு அடுத்தடுத்த குடும்ப சிக்கல்களை பாக்கியலட்சுமி சீரியலில் இயக்குநர் அரங்கேற்றி வருகிறார். ஒரு மனிதன் காலம் கடந்த நிலையில் ஒரு உறவை விட்டுவிட்டு மற்றொரு உறவிற்குள் போகும்போது ஏற்படும் உறவு சிக்கல்களை இந்த சீரியல் அடுத்தடுத்து வெளிப்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X