Baakiyalakshmi serial: அந்தாளு ஒரு தேள்.. கோபியை அடிக்க கிளம்பிய எழிலை தடுத்த பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கரு கலைந்ததற்கு தன்னுடைய அம்மா ஈஸ்வரியை குற்றம் சாட்டி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் கோபி. இதையடுத்து சாலையில் போகும் வழி தெரியாமல் பரிதவிப்புடன் ஈஸ்வரி நின்று கொண்டிருக்க திடீரென வீட்டை விட்டு வெளியில் வரும் பாக்கியா ஈஸ்வரியை பார்த்து அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருவதாக காணப்பட்டது.
தொடர்ந்து ஈஸ்வரி வீட்டில் உள்ளவர்கள் அனைவரிடமும் புலம்பி தீர்ப்பதாகவும் கண்ணீருடன் கலங்குவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ராதிகா மற்றும் கமலாவிற்கு தன்னைப் பற்றி தெரியாது, மேலும் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இத்தனை ஆண்டுகளாக தன்னுடன் இருக்கும் கோபி தன்னை இப்படி சொல்லி விட்டானே என்று அவர் அழுததை பார்க்கும் குடும்பத்தினரும் கண் கலங்குகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் முக்கியமான காட்சிகளை கொண்டதாக காணப்பட்டது. இன்றைய எபிசோடில் தன்னுடைய மனைவியின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று கூறும் கோபி தொடர்ந்து அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார். இதனால் மன வருத்தம் கொள்ளும் ஈஸ்வரி, ஒரு கட்டத்தில் பெட்டியுடன் வெளியேறி சாலையில் நின்றபடி பரிதவிப்புடன் காணப்படுகிறார். இந்நிலையில் ஏதோ ஒன்று தோன்ற வெளியில் வரும் பாக்கியா, ஈஸ்வரியை மீட்டு அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
ஆற்றாமையில் ஈஸ்வரி: அங்கு ராமமூர்த்தி, எழில், செழியன், ஜெனி, இனியா, அமிர்தா மற்றும் செல்வி என அனைவரும் ஈஸ்வரிக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஆனாலும் தன்னுடைய ஆற்றாமையை ஒவ்வொருவரிடமும் கூறி கண்ணீருடன் அழுதபடி ஈஸ்வரி காணப்படுகிறார். அனைவரிடமும் தான் முன்பின் பேசுவேன், ஆனால் இப்படி நடந்து கொள்ளக்கூடிய ஆளா என்று ஈஸ்வரி தனித்தனியாக கேட்கும்படி இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். மனமுடைந்து காணப்படும் தன்னுடைய பாட்டியின் உடல்நிலைக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று எழில், செழியன், இனியா என அனைவரும் பரிதவிக்கின்றனர்.
கோபியை அடிக்கக் கிளம்பிய எழில்: இந்நிலையில் ஏழில் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய கோபத்தை அடக்க முடியாமல் தன்னுடைய அப்பாவை அடிப்பதற்காக வீட்டை விட்டு ஆத்திரத்துடன் கிளம்புகிறார். தொடர்ந்து எழிலை தடுக்கும் பாக்கியா, தேள் என்றால் கொட்டத்தான் செய்யும், உன்னுடைய அப்பா தேள் மாதிரி, அது தெரிந்தே நாம் அனைவரும் திரும்பத் திரும்ப அவரிடம் சென்று கொட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோம், நாம் தான் புரிந்து கொண்டு விலக வேண்டும் என்று பலவாறாக கூறி சமாதானம் செய்கிறார். இந்நிலையில் தொடர்ந்து சாப்பிடாமல் முரண்டு பிடிக்கும் ஈஸ்வரியை ஒரு குட்டிக்கதை மூலம் சமாதானப்படுத்துகிறார் ராமமூர்த்தி.
சமாதானம் அடையாத ஈஸ்வரி: ஆனாலும் அவர் சமாதானம் அடையாமல் தொடர்ந்து அழுவதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து அவரை சாப்பிட வைக்க இனியா, பாக்கியா என அனைவரும் சேர்ந்து முயல்கின்றனர் ஆனால் அவர் சாப்பிடாமல் முரண்டு பிடிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. எந்த நேரத்திலும் தன்னுடைய மகன் கோபியை விட்டுக் கொடுக்காமல் இருந்த ஈஸ்வரிக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் கோபி. மற்றவர்கள் எவ்வளவோ கூறிய பொழுதிலும் கோபியுடன் ராதிகா வீட்டிற்கு புறப்பட்டு சென்ற ஈஸ்வரி, மிகப்பெரிய அடியுடன் திரும்பி வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











