Baakiyalakshmi serial: நாளைக்கு உங்கம்மா கிளம்பிதான் ஆகணும்.. கோபியிடம் உறுதியாக கூறிய ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியல், இந்த வார டிஆர்பியில் ஐந்தாவது இடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளது. இந்த வார டிஆர்பியில் விஜய் டிவி சீரியல்களை பின்னுக்குத் தள்ளி, முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்துள்ளது. இதனால் விஜய் டிவி சீரியல்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவது தெரியவருகிறது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் தொடர்ந்து ராதிகாவின் அம்மா கமலாவிடம் சண்டையிட்டு வருகிறார் ஈஸ்வரி. தன்னுடைய மகன் கோபி இருக்கும்போது ஒரு மாதிரியாக நடந்து கொள்ளும் ஈஸ்வரி, அவர்கள் தன்னிடம் தொடர்ந்து சண்டையிடுவதாக கூறுகிறார். இதனால் தன்னுடைய அம்மாவின் நிம்மதியை குலைக்கும் விஷயங்களை தான் அனுமதிக்க முடியாது என்று கோபி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

Vijay TV s Baakiyalakshmi serial today 24th May 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் அனைவரையும் கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் சிறப்பாக அமைந்து வருகின்றன, பாக்கியா வீட்டை விட்டு கோபி வெளியேறிய சூழலில் தன்னுடைய அம்மாவையும் சமாதானப்படுத்தி ராதிகா வீட்டிற்கே அழைத்து வருகிறார். அங்கு முன்னதாக இருக்கும் ராதிகாவின் அம்மாவிற்கும் ஈஸ்வரிக்கும் ஏழாம் பொருத்தமாக அமைகிறது. இருவரும் தொட்டதற்கெல்லாம் சண்டையிட்டு கொள்கின்றனர். தொடர்ந்து தன்னுடைய மகன் கோபி இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் மற்றும் அவர் இல்லாத நேரங்களில் ராதிகா மற்றும் அவரது அம்மா கமலாவிடம் வேறு மாதிரியும் நடந்து கொள்கிறார் ஈஸ்வரி.

டிஆர்பியில் முன்னேற்றம்: இதனால் ராதிகா மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். ராதிகாவிற்கு கட் செய்து வைக்கும் பழங்களை, யாரையும் கேட்காமல் எடுத்து சாப்பிடுகிறார் ஈஸ்வரி. மயக்கம் வந்து விழுந்தது போல நடித்து கோபியின் பரிதாபத்திற்கு உள்ளாகிறார். இதனால் ராதிகா மற்றும் கமலாவிடம் சண்டையிடுகிறார் கோபி. இப்படியாக இந்த சீரியலில் அடுத்தடுத்த எபிசோட்கள் சிறப்பாக அமைந்து வருகின்றன. இதனால் இந்த வார டிஆர்பியில் பாக்கியலட்சுமி சீரியல் ஐந்தாவது இடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்வீட் எடு.. கொண்டாடு: இதனிடையே, நீண்ட நாட்களாக தன்னுடைய அடுத்த படத்திற்காக மெனக்கெட்டு வந்த எழிலுக்கு அடுத்த படத்திற்கான ஒப்புதல் கிடைக்கிறது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாக காணப்படுகின்றனர். ஒருவருக்கொருவர் ஸ்வீட் எடு கொண்டாடு என்று மனநிலையில் இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் தொலைபேசி மூலம் தெரிவிக்கிறார் எழில். இதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாத ஈஸ்வரி, தொடர்ந்து எழில் குழந்தை பெற்றுக் கொண்டால்தான் தனக்கு சந்தோஷம் என்று கூறுகிறார்.,

ஜெனிக்கு பாக்கியா அட்வைஸ்: ந்நிலையில் அமிர்தாவிற்கு பாக்கியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக நினைக்கும் ஜெனி, தொடர்ந்து வேதனைக்கு உள்ளாகிறார். இதை தெரிந்து கொள்ளும் அமிர்தா, ஜெனிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடந்து கொள்கிறார். ஆனால் ஜெனிக்கு வீட்டு வேலைகள் செய்வதில் எந்த அனுபவமும் இல்லாததால், செல்வி அவரை கிண்டலடிக்கிறார். இதனால் கோபித்துக் கொள்ளும் ஜெனி, அங்கிருந்து தன்னுடைய அறைக்கு செல்வதாகவும் காணப்பட்டது. இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் பாக்கியா, வீட்டு வேலைகள் தெரியாமல் இருப்பது தான் பெண்களுக்கு நல்லது என்று கூறுவதாக் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


கோபி கோபம்: வீட்டு வேலை தெரிந்து விட்டால் ஆயுசு முழுவதும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் ஜெனியிடம் பாக்கியா கூறுகிறார். ஒரு மாமியாராக தான் இதை கூறக்கூடாது என்றும் ஆனாலும் ஒரு பெண்ணாக இதை கூறுவதாகவும் வீட்டு வேலை செய்யாமல் சந்தோசமாக இருக்கும் படியும் ஜெனி இடம் பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் கோபி, தன்னுடைய அம்மாவும் மாமியாரும் சண்டை போடுவதை பார்க்கிறார். தொடர்ந்து தன்னுடைய அம்மாவின் நிம்மதியை குலைக்கும் எந்த விஷயத்தையும் தான் அனுமதிக்க முடியாது என்று ராதிகா மற்றும் கமலாவிடம் கூறுகிறார்.

உறுதியாக சொன்ன ராதிகா: தொடர்ந்து இரவு அறைக்கு வரும் கோபி, கோபத்துடன் இருக்கும் தன்னுடைய மனைவி ராதிகாவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். அப்போது அவரது கையை தட்டி விடும் ராதிகா, காலையில் என்ன நடந்தது என்று கூட கேட்காமல் கத்திவிட்டு இப்போது சமாதானப்படுத்த வந்தீர்களா என்று கோபியிடம் சண்டை இடுகிறார். தொடர்ந்து நாளை காலை உங்களது அம்மா கண்டிப்பாக இங்க இருக்க கூடாது என்றும் பாக்கியா வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. அப்படியெல்லாம் அனுப்ப முடியாது என்று கோபி கூறினாலும் ராதிகா அதை ஏற்க தயாராக இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X