Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. தன்னுடைய தோழியாக மட்டுமே நினைத்து அனைத்து வகையிலும் பாக்கியாவிற்கு உதவி செய்து வந்தார் பழனிச்சாமி. இந்நிலையில் தற்போது பாக்கியா மீது அவருக்கு ஈர்ப்பு வந்துள்ளது. இதேபோல பாக்கியாவிற்கும் ஈர்ப்பு வருமா என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதெல்லாம் வராது என்று ஒரு தரப்பினரும் வந்தால் என்ன தவறு என்று மற்றொரு தரப்பினரும் கமெண்ட் செய்து வருகின்றனர், கண்டிப்பாக இவர்கள் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது, பாக்கியாவிற்கு சொந்த வாழ்க்கையில் பலவகைகளில் கோபி இடையூறு கொடுத்து வருகிறார். இதனால் அவருடன் நடந்த திருமணத்தை மறந்துவிட்டு பழனிச்சாமியை பாக்கியா திருமணம் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது, இந்த சீரியல் 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை கொடுத்துள்ள சூழலில் தொடர்ந்து சேனலில் இரண்டாவது முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வருகிறது, சீரியல் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த முகாந்திரமும் சீரியலில் காணப்படவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த விஷயங்களை சீரியலில் புகுத்தி வருகிறார் இயக்குனர். இன்றைய தினம் தன்னுடைய மகள் பெயர் சூட்டு விழாவிற்காக தன்னுடைய மாமனார் ஜோசப் மற்றும் மாமியார் மரியத்தை அழைக்க தன்னுடைய தாத்தா மற்றும் அம்மாவுடன் செல்கிறார் செழியன்.
ஜோசப் கோபம்: அங்கு ஜோசப் தொடர்ந்து கோபத்துடன் பேசுவதை பார்க்க முடிகிறது, ஆனால் நடந்ததை பற்றி நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரவர் வழக்கப்படி குழந்தைக்கு பெயர் சூட்டிக் கொள்ளலாம் என்றும் பாக்கியா சமாதானமாக பேசுகிறார். ஆயினும் ஜோசப் தொடர்ந்து சண்டை போடும் தொனியிலேயே பேசுவதை பார்க்க முடிந்தது. இதனிடையே பழனிச்சாமியின் அம்மா கேட்டதற்கு இணங்க, அவருக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பும் இறால் வறுவலும் செய்து கொண்டு எடுத்து செல்கிறார் பாக்கியா. அங்கு அவர் அனைவரையும் பார்த்து பேசி மகிழ்கிறார்.
பழனிச்சாமி வீட்டிற்கு சென்ற பாக்கியா: தொடர்ந்து தான் எடுத்துக் கொண்டு சென்ற உணவுப்பொருட்களை கொடுத்துவிட்டு கிளம்ப தயாராகிறார். ஆனால் பழனிச்சாமியின் அம்மா பாக்கியாவை அவரது ரெஸ்டாரண்டில் டிராப் செய்ய சொல்கிறார். இதையடுத்து பழனிச்சாமி மிகுந்த உற்சாகத்துடன் அவரை டிராப் செய்ய செல்கிறார். போகும் வழியில் அவர்கள் இருவரும் பேசிக் கொள்கின்றனர். ஆனால் பழனிச்சாமி முன்னதாக அதிகமாக பாக்கியாவுடன் தான் பேசியதாகவும் ஆனால் தற்போது அவருடன் பேசுவதற்கு வார்த்தைகளே வருவதில்லை என்றும் தனக்குள் நினைத்துக் கொள்கிறார். இதனிடையே பாக்கியாவிற்கு பிடித்த டிஷ் என்ன என்று பழனிச்சாமி கேள்வி எழுப்புகிறார்.
பாக்கியாவிற்கு பிடித்த டிஷ்: தனக்கு என்று எந்த டிஷ்ஷும் பிடித்ததில்லை என்றும் மற்றவர்களுக்கு செய்வதையே தானும் சாப்பிட்டுக் கொள்வேன் என்றும் இதுவரை தன்னிடம் இது போல் யாரும் கேள்வி எழுப்பியதில்லை என்றும் பாக்கியா தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறார். மேலும் தனக்கு மட்டும் இல்லை, எல்லா பெண்களுக்கும் இதே நிலைதான் இன்றும் அவர் கூறுகிறார். கண்டிப்பாக அவருக்கு பிடித்த டிஷ் இருக்கும் என்று பழனிச்சாமி கூறும் சூழலில் நீண்ட யோசனைக்கு பிறகு தன்னுடைய அம்மா செய்யும் பால் கொழுக்கொட்டை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தான் எவ்வளவு முயன்றும் அந்த சுவை தனக்கு இதுவரை வந்ததில்லை என்றும் பாக்கியா கூறுகிறார்.
எழிலிடம் செல்வி கேட்கும் கேள்வி: இதையடுத்து அதேபோல பால் கொழுக்கட்டையை தான் செய்து உங்களுக்கு எடுத்து வந்து கொடுப்பேன், இதேபோல உங்களுக்கு பிடித்த விஷயங்களை தேடித்தேடி உங்களுக்காக செய்வேன் என்று பழனிச்சாமி தனக்குள் கூறிக் கொள்கிறார், இதனிடையே பாக்கியாவை ரெஸ்டாரண்டில் அவர் டிராப் செய்கிறார், அவர்களது ஜோடி பொருத்தம் குறித்து எழிலிடம் செல்வி பேசுகிறார், பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் பிடித்திருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார், அவர்களுக்கு பிடித்திருந்தால் உடனடியாக திருமணம் தான் என்று எழில் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது,
அதிர்ச்சியில் பழனிச்சாமி: இந்நிலையில் ரெஸ்டாரண்டிற்கு உள்ளே பழனிச்சாமி வந்த சூழலில் அவரிடம் செல்வி, அவருக்கும் பாக்கியாவிற்கும் திருமணம் செய்து வைக்க எழில் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார், இதைக் கேட்கும் பழனிச்சாமி மிகுந்த அதிர்ச்சி அடைகிறார், எவ்வளவு எளிதாக இந்த விஷயத்தை பேசி விட்டார்கள் என்று அவர் திகைக்கிறார். இந்த சூழ்நிலையில் அவரை சமாளிக்கும் வகையில் அவரிடம் தன்னுடைய ஸ்கிரிப்ட் குறித்து விவாதிக்க இருப்பதாக கூறி எழில் அங்கிருந்து அவரை ஒட்டிக்கொண்டு செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது,


Click it and Unblock the Notifications











