Baakiyalakshmi: செழியனை அடித்த ஜெனியின் அப்பா.. ஈஸ்வரிக்கு சாய தோள் கொடுத்த ராதிகா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக மாஸ் காட்டிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. செழியனுக்கு ஜெனி சார்பில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார் அவரது அப்பா. முன்னதாக ஜெனி தன்னைவிட்டு பிரிந்ததால் மிகுதியான மனவேதனையுடன் இருந்த செழியன், எப்படியும் ஜெனி தன்னை விரைவில் சேர்வார் என்று நம்பிக்கையுடன் தன்னை தேற்றிவந்தார். ஆனால் அவரது நம்பிக்கைக்கு மாறாக, தற்போது விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளதால் பைத்தியம் பிடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் குடும்பத்தில் யாருக்கும் நிம்மதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாக்கியாவிற்கோ கணேஷ் பிரச்சினையையும் சேர்த்து தீர்க்கும் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைய எபிசோடில் பாக்கியாவிற்கு போன் செய்யும் கணேஷ், அவர் கேட்டுக் கொண்ட கால அவகாசம் நிறைவடைந்து விட்டதாகவும் மறுநாள் அவர்களது வீட்டிற்கு அவர் வரவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கிறார். அவர் இதுவரை அமிர்தா தன்னை பற்றி எதையும் பேசியிருக்க மாட்டார் என்று தனக்கு தெரியும் என்றும் கூறுகிறார். வீட்டில் செழியனின் பிரச்சினை போய்க் கொண்டிருக்கும் சூழலில் அமிர்தாவின் விவாகரத்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் பாக்கியா குழம்பிப் போய் இருக்கிறார்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமிக்கு அடுத்தடுத்து பிசினஸ் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் அவர் ஒவ்வொன்றாக எதிர்கொண்டு தீர்த்து வருகிறார். அவரது குடும்பத்தினர் அவருக்கு சப்போர்ட்டாக இருந்தாலும், எல்லா காலகட்டத்திலும் அவர் அதை எதிர்பார்க்க முடியாத சூழலும் காணப்படுகிறது. முன்னதாக பாக்கியாவின் நடவடிக்கைகளுக்கு துணையாக இருந்த ஈஸ்வரியும் கோபியுடன் இணைந்து பாக்கியாவிற்கு குடைச்சல் கொடுத்து வந்தார்
பிசினசில் சக்சஸ் காட்டிய பாக்கியா: ஆனால் தற்போது பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டில் சக்சஸ்புல்லாக இயங்கிய பாக்கியாவிற்கு அமைச்சர் கையால் மாலை அணிவிக்கப்பட்டதை அறிந்து பாக்கியாவை நெகிழ்ச்சியாக கட்டித் தழுவிக் கொள்கிறார் ஈஸ்வரி. இந்நிலையில் செழியனுக்கு ஜெனி சார்பில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் தவிப்பில் உள்ளனர். இதுகுறித்து ஈஸ்வரி, கோபி உள்ளிட்டவர்கள் ஜெனியை சந்தித்து பேசப் போக, அங்கு அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார் ஜெனியின் அப்பா ஜோசப். இதனால் கோபமடைந்த ஈஸ்வரி, ஆத்திரத்துடன் கத்திவிட்டு வருகிறார்.
ஜெனி அப்பாவிடம் அடிவாங்கிய செழியன்: இந்த விஷயத்தை கேள்விப்பட்ட செழியன், ஜெனியிடம் நேரடியாக பேச அவரது வீட்டிற்கு போகிறார். அங்கு அவரை தடுக்க முயலும் ஜெனியின் அப்பா, செழியனை ஒரு கட்டத்தில் அடித்து வெளியேற்ற முயற்சிக்கிறார். இதனை தடுக்கும் எழிலையும் தரக்குறைவாக பேசுகிறார். ஜெனியை அறைக்குள் வைத்து பூட்டுகிறார். மொபைலையும் பறிக்கிறார். இதனால் செழியன் மிகவும் விரக்தியடைகிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கோபி ஈடுபடுகிறார். ஆனால் எதை சொல்லி அவரை தேற்றுவது என்று தெரியாமல் அவரும் மலைப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
மாமியாரை தேற்றிய ராதிகா: வீட்டில் செழியன் -ஜெனி விவகாரத்தால் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். இரவு தூக்கம் வராமல் ஈஸ்வரி அழுதுக் கொண்டே இருக்கிறார். இதைப் பார்க்கும் ராதிகா அவரை தேற்றுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. தன்னுடைய பேரனின் மகனை தான் மிகவும் சிறப்பாக வளர்க்க நினைத்ததாகவும் எழில், செழியன் வளர்ந்ததை பார்த்தது போலவே அவனையும் வளர்க்க நினைத்ததாகவும் அவர் கதறுகிறார். இதையடுத்து அவரை தேற்றும் ராதிகா, அவர் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்று தேற்றுகிறார். இதையடுத்து அவரது தோளில் சாய்ந்து ஈஸ்வரி அழுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











