Baakiyalakshmi serial: இதுவரைக்கும் கிடைக்காத பரிசை இனியா கொடுத்துட்டா.. மனம் வெறுத்து பேசிய பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக கவரும்வகையில் மிகவும் சென்டிமெண்டாக அமைந்திருந்தது. பிரம்மாண்டமாக நடைபெற்ற சமையல் போட்டியில் மிகவும் ஆர்வமுடன் பாக்கியா பங்கேற்றிருந்தார்.

அவருக்கு எதிரணியாக கோபி & டீம் இருந்த நிலையில், பாக்கியாவை கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற தீவிரத்துடன் அடுத்தடுத்த செஃப்களை இறக்கினார் கோபி. இந்நிலையில் அந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் வித்தியாசமான டிஷ்ஷுடன் களமிறங்கயி ராதிகாவிற்கு தொடர்ந்து போட்டியில் பங்கேற்காத நிலை ஏற்படுகிறது.

Television Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவரும்வகையில் அமைந்துள்ளது. மசாலா பிசினசில் துவங்கிய பாக்கியா தற்போது ரெஸ்டாரெண்ட் துவங்கி மாஸ் காட்டி வருகிறார். தன்னுடைய குடும்பத்தில் நிகழும் அடுத்தடுத்த பிரச்சினைகளை தனியாளாக சமாளித்து அனைவரையும் அரவணைத்து சென்றாலும் தன்னுடைய பிசினசையும் சிறப்பாக நடத்தி வருகிறார் பாக்கியா. இந்நிலையில் பிரம்மாண்டமாக நடைபெறும் குக்கிங் போட்டியில் அவர் பங்கேற்கிறார். அவருடன் கோபியும் தன்னுடைய கிளவுட் கிச்சன் சார்பில் பங்கேற்கிறார்.

இறுதிச்சுற்றில் கோபி -பாக்கியா: முதலில் விருப்பமில்லாமல் இந்த போட்டியில் பங்கேற்றாலும் தன்னுடைய போட்டியாளர் பாக்கியா என்பது தெரிந்தவுடன் கண்டிப்பாக போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற தீவிரத்தில் அடுத்தடுத்த செஃப்களை போட்டியில் களமிறக்குகிறார் கோபி. இதையடுத்து இறுதிச்சுற்றில் கோபி மற்றும் பாக்கியா இருவரும் பங்கேற்கின்றனர். இதனால் போட்டி பலமாக இருக்கிறது. ஆனாலும் இறுதிச்சுற்றில் சாக்லேட் கேக் செய்யும் கோபியின் முயற்சி வீணாகிறது. அவரது கேக் கருகிவிட, உடனடியாக நடுவர்களின் அட்வைஸ்படி அடுத்த மற்றும் விரைவில் செய்யக்கூடிய டிஷ்ஷை அவரது டீம் செய்கிறது.

இனியாவை காப்பாற்றிய ராதிகா: தன்னுடைய நண்பர்களுடன் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வதாக கூறி சென்ற இனியாவை அவரது நண்பர்கள் பப்பிற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு ஏற்பட்ட பிரச்சினையில், அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்கின்றனர். இதனிடையே, அங்குவரும் ராதிகா, தனக்கு தெரிந்த போலீஸ் உயரதிகாரிகளிடம் பேசி, இனியாவுடன் அவரது தோழிகளையும் மீட்கிறார். தொடர்ந்து அங்கு பாக்கியா வந்தால்தான் இனியாவை விடுவேன் என்றும் கூறுகிறார். மிகுந்த தயக்கத்துடன் செழியன் பாக்கியாவிற்கு கால் செய்ய, அவரும் தன்னுடைய சமையல் போட்டியை அப்படியே செல்வியிடம் விட்டுவிட்டு தன்னுடைய மாமியாருடன் இனியாவை பார்க்க வருகிறது.

இனியா கொடுத்த பரிசு: இதையடுத்து இனியாவை விடுவிக்கும் ராதிகா, இக்கட்டான நேரத்தில் இனியாவை தான் மீட்டதாகவும் ஆனால் தன்னுடைய மகள் மயூவை கோர்ட்டிற்கு சாட்சி சொல்ல பாக்கியா அழைத்து வந்ததாகவும் சுட்டிக் காட்டுகிறார். இதையடுத்து மிகுந்த பரிதவிப்புடன் ராதிகாவிற்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு புறப்படுகிறார் பாக்கியா. இதனிடையே, செல்வி கால் செய்து பரிசு குறித்து பேசுகிறார். யாருமே கொடுக்க முடியாத பரிசை தன்னுடைய மகள் கொடுத்துவிட்டதாக மன உளைச்சலுடன் கூறும் பாக்கியா, செல்வியே சமையல் போட்டியை சமாளித்துக் கொள்ளும்படி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X