Baakiyalakshmi serial: கொலைகாரின்னு பெத்த பையன் வாயால கேட்கும்போது.. தொடர்ந்து வருத்தத்தில் ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் கோபி, ராதிகா மற்றும் கமலா மூவரும் இணைந்து ஈஸ்வரியை கொலைகாரி என்று குற்றம் சாட்டி வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். இதனால் மனம் வெதும்பி போகும் இடம் தெரியாமல் சாலையில் நின்று கொண்டிருந்த ஈஸ்வரியை மீட்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார் பாக்கியா.

ஈஸ்வரி தொடர்ந்து தன்னுடைய மன உளைச்சலில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார். சாப்பிடாமல் முரண்டு பிடிக்கும் அவரை சமாதானப்படுத்த ராமமூர்த்தி, இனியா, பாக்கியா என அனைவரும் முயற்சி மேற்கொள்கின்றனர். தன்னுடைய மகன் தன்னை கொலைகாரி என்று கூறியதை ஈஸ்வரியால் ஏற்க முடியவில்லை.

Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியது குறித்து ஈஸ்வரி தொடர்ந்து புலம்பலிலும் ஆதங்கத்திலும் இருப்பதாக காணப்பட்டது. தான் இதுபோல செய்வேனா என்று வீட்டிலுள்ள அனைவரிடமும் ஈஸ்வரி தொடர்ந்து கேட்கிறார். தொடர்ந்து சாப்பிடாமல் கோபி சொன்னதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். அவரை நார்மலுக்கு கொண்டுவர பாக்கியா, ராமமூர்த்தி உள்ளிட்ட அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் அதற்கான எந்த தீர்வும் கிடைக்காமல் அவர்கள் தொடர்ந்து வருத்தத்தில் இருக்கின்றனர்.

சமாதானப்படுத்தும் பாக்கியா: தன்னுடைய மாமனார் கூறியதை போல கோபி கூறியதை தன்னுடைய மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று பாக்கியா கூறுகிறார். ஆனால் தன்னுடைய மகன் கூறிய அந்த குற்றச்சாட்டை தன்னால் எப்படி எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியும் என்று தொடர்ந்து ஈஸ்வரி சாப்பிடாமல் அந்த வருத்தத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய பாட்டியை சமாதானம் செய்யும் இனியா, ஒரு கட்டத்தில் அவரை இப்படி பார்ப்பதற்கு மிகவும் சங்கடமாக இருப்பதாக கூறி தன்னுடைய கண்ணீரையும் வெளிப்படுத்துகிறார். குடும்பத்தில் அடுத்தடுத்து அனைவரும் இப்படி சோகத்துடன் இருப்பதை பார்த்து, இதுகுறித்து கோபியிடம் கேட்டு வர அவரது வீட்டிற்கு செல்கிறார் பாக்கியா.

ராதிகாவிடம் பேச்சு: அங்கு அவர் இல்லாத சூழலில் ராதிகாவிடம் இதுகுறித்து பேசுகிறார். நடந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று பாக்கியா ராதிகாவிடம் கூற, தான் மனவருத்தத்தில் உடைந்து இருப்பதாகவும் வந்து சமாதானம் செய்யும்படியும் கேட்டேனா என்று முகத்தில் அறைந்தது போல பாக்கியாவிடம் ராதிகா தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார். இந்நிலையில் தங்களுக்குள் முன்னதாக இருந்த நட்பை எடுத்துச் சொல்லி தான் அந்த ராதிகா எப்போதுமே சங்கடப்படக்கூடாது என்று நினைத்ததாகவும் பாக்கியா கூறுகிறார். இந்நிலையில் ஆமாம் பெரிய நட்பு என்று கமலா இடையில் புகுந்து பேசுகிறார்.

https://www.youtube.com/watch?v=Lcrz0y-BZ0s

கோபியிடம் ஆத்திரம்: இதையடுத்து கமலாவை அடக்கும் பாக்கியா, தான் ராதிகாவிடம் பேச வந்ததாகவும் உங்களிடம் பேசுவதற்கு வரவில்லை என்று முகத்தில் அடித்தபடி கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார் பாக்கியா. இதனிடையே வாசலில் கோபியை பார்க்கும் பாக்கியா, மற்றவர்கள் புரியாமல் பேசட்டும், ஆனால் இத்தனை ஆண்டுகளாக உடன் இருக்கும் நீங்கள் உங்கள் அம்மாவை எப்படி இப்படி பேசலாம் அவர்கள் ஒரு குழந்தையை கொல்லும் அளவிற்கு கொடூரமானவர்களா என்று பலவாறு கேள்வி எழுப்புகிறார். தான் ஏற்கனவே மிகவும் குழப்பத்தில் இருப்பதாகவும் பாக்கியா, தன் பங்கிற்கு குழப்ப வேண்டாம் என்றும் கோபி கூறுகிறார்.

பாக்கியாவின் திட்டம்: இதையடுத்து வீட்டிற்கு வரும் பாக்கியா, தொடர்ந்து ஈஸ்வரியை சாப்பிட வற்புறுத்துகிறார். ஆனால் தான் கொலைகாரி என்ற பட்டத்தை அதிலும் தான் பெற்ற மகனின் வாயாலயே வாங்கிவிட்டு வந்ததாகவும் சாப்பிடுவதற்கு மனம் வரவில்லை என்றும் ஈஸ்வரி பலவாறாக புலம்புகிறார். இந்நிலையில் பாக்கியா செல்வியிடம், இதே சூழலில் ஈஸ்வரி இருந்தால் அவரது மனம் கண்டிப்பாக நடந்ததையே நினைத்துக் கொண்டிருக்கும் என்றும் அவர் முன்னதாக விரும்பியபடி கும்பகோணம் கோயிலுக்கு சில தினங்கள் அழைத்துப் போக உள்ளதாகவும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

எதிரெதிர் துருவங்கள்: தன்னுடைய கரு கலைந்ததற்கு தன்னுடைய மாமியார் ஈஸ்வரி தான் காரணம் என்று ஒரு பக்கம் ராதிகா குற்றம் சாட்டிக் கொண்டிருக்க மறுப்பக்கம் தன்னுடைய மாமியாரின் மோசமான மனநிலையில் இருந்து அவரை மீட்க திட்டமிடும் மருமகளாக பாக்கியா காணப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X