Baakiyalakshmi: ரெஸ்டாரெண்டை என்கிட்ட கொடுத்துடுங்க.. பாக்கியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பார் ஓனர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை கொண்டதாக அமைந்திருந்தது. ராதிகா வீட்டில் தங்கியிருக்கும் ஈஸ்வரி, அங்கு தொடர்ந்து பல்வேறு அட்ராசிட்டிகளை அரங்கேற்றி வருகிறார். இந்நிலையில் அவரது தொல்லை தாங்க முடியாமல் ராதிகாவின் அம்மா கமலா அந்த வீட்டை விட்டு தன்னுடைய மகன் வீட்டிற்கு செல்வதாக கூறுகிறார்.

இதனால் வருத்தப்படும் ராதிகா, அவரை போக விடாமல் செய்கிறார். இந்நிலையில் தன்னை அந்த வீட்டை விட்டு போகுமாறு ராதிகா கூறுவது குறித்து கோபியிடம் கேள்வி எழுப்புகிறார் ஈஸ்வரி. ஆனால் ராதிகா சொன்னதை எல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டாம் என்றும் தான் ஈஸ்வரியை மகாராணியை போல பார்த்துக் கொள்வேன் என்றும் கோபி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Vijay TV s Baakiyalakshmi serial today 25th May 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டது. தன்னுடைய மகன் கோபி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராதிகா வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார் ஈஸ்வரி. இதனால் அவருக்கும் ராதிகாவின் அம்மா கமலாவிற்கும் அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் தொடர்ந்து பிரச்சினைகள் தலை தூக்குவதையடுத்து தான் அங்கிருந்து செல்வதாக கமலா, பெட்டி படுக்கைகளுடன் கிளம்ப தயாராகிறார். இதனால் ராதிகா மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி தனக்கு யாருமே இல்லை என்றும் நீ தான் எனக்கு கண்டிப்பாக உதவியாக இருக்க வேண்டும் என்றும் தன்னுடைய அம்மாவிடம் கூறுகிறார்.

வீட்டைவிட்டு வெளியேற கமலா திட்டம்: இதனிடையே ராதிகாவின் அம்மா இல்லை என்றால் என்ன நான் உனக்கு இருக்கிறேன் பேபி என்று கோபி வழக்கம் போல சமாதானப்படுத்த முயற்சிக்கிறார் ஆனால் இதற்கு எல்லாம் மயங்காத ராதிகா, தன்னுடைய அம்மாவின் பயணத்தை தடுத்து தன்னுடனேயே இருக்க வைக்கிறார். தொடர்ந்து கீழே படுத்து தூங்குவதால் கமலாவிற்கு கால் வலி ஏற்பட்டதையடுத்து, தன்னுடனேயே தன்னுடைய படுக்கையில் படுத்துக் கொள்ளுமாறு தன்னுடைய அம்மா மற்றும் மகள் இருவரையும் கூறுகிறார். இந்நிலையில் தன்னுடைய அம்மாவிடம் போய் பேசுகிறார் கோபி.

நாடகத்தை தொடரும் ஈஸ்வரி: அப்போது ராதிகா தன்னை வீட்டை விட்டு போக சொல்வது குறித்து கேள்வி எழுப்புகிறார் ஈஸ்வரி. தான் அந்த வீட்டை விட்டு செல்வதாக கூறுகிறார். மேலும் தன்னுடைய ஒரே மகனான கோபியைத்தான் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் தற்போது எல்லா வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் தன்னை கவனிக்க ஆளில்லை என்றும் ஈஸ்வரி நாடகம் போடுகிறார். இதனால் உருகும் கோபி, தன்னை விட்டு ஈஸ்வரி எங்கும் போக வேண்டாம் என்றும் அவரை மகாராணியை போல தான் பார்த்துக் கொள்வேன் என்றும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

அதிர்ச்சியில் பாக்கியா: இதனிடையே, கமலா மற்றும் மயூ, ராதிகாவுடன் படுத்து தூங்குவதால், கோபி வெளியில் ஹாலில் தூங்கும் நிலை ஏற்படுகிறது. இதனிடையே பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் அடுத்த பிரச்சினை தலைதூக்குகிறது. ரெஸ்டாரண்ட் பக்கத்தில் பார் துவங்க ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், அதனால் குடிகாரர்கள், ரெஸ்டாரெண்டில் தகறாறு செய்வார்கள் என்று பாக்கியா, செல்வி உள்ளிட்டவர்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். இதையடுத்து அந்த பார் உரிமையாளரிடம் இதுகுறித்து பாக்கியா பேச முயல்கிறார். அவரோ, பயமாக இருந்தால் ரெஸ்டாரெண்டை தனக்கு கொடுக்கும்படி கூறுகிறார். இதனால் பாக்கியா மட்டுமில்லாமல் செல்வியும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள்.

அமிர்தாவை சமாதானப்படுத்தும் பாக்கியா: இதனிடையே வீட்டிற்கு வரும் பாக்கியா அமிர்தாவிடம், ஜெனி குறித்து பேசுகிறார். அவர்கள் இருவருக்கும் பிரச்சனையா என்று கேட்கிறார். இதையடுத்து நடக்கும் விஷயங்களை அமிர்தா பாக்கியாவிடம் கூறுகிறார். இந்நிலையில் பல்வேறு குழப்பங்களுடன் ஜெனி இருப்பதாகவும் அவர் அதிலிருந்து மீண்டு வருவதற்கு சிறிது காலங்கள் பிடிக்கும் என்று கூறும் பாக்கியா விரைவில் இதெல்லாம் சரியாகும் என்று அமிர்தாவிற்கு சமாதானம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X