Baakiyalakshmi: மயூவிடம் கர்ப்பம் குறித்து வெளிப்படுத்திய ராதிகா.. கோபி எப்ப சொல்லப் போறாரு?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை இதுவரை ஒளிபரப்பியுள்ளது. தொடர்ந்து பல சுவாரசியங்களை இந்த சீரியலில் ரசிகர்கள் பெற்று வருகின்றனர். கலவையான விமர்சனங்களை இந்த சீரியல் பெற்றாலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை அட்ராக்ட் செய்யும் வகையில் அமைந்திருந்தது.
ராதிகா கர்ப்பமான விஷயத்தை தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் எப்படி சொல்வது என்பது குறித்து தொடர்ந்து கோபி யோசித்து வருகிறார். இதை குடும்பத்தினரிடம் சொல்ல அவர் அவமானமாக உணர்கிறார். இதனிடையே தன்னுடைய அம்மாவிடம் உடனடியாக இந்த விஷயத்தை சொன்ன ராதிகா, தொடர்ந்து இன்றைய எபிசோடில் தன்னுடைய மகளிடமும் கூறுகிறார். இதைக் கேட்கும் மையூ மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. ராதிகா கர்ப்பமான விஷயத்தை தன்னுடைய அம்மா ஈஸ்வரி மற்றும் குடும்பத்தினரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தொடர்ந்து கோபி முழித்து வருகிறார். தனியாக இருக்கும் தன்னுடைய மகன்களிடம் இது குறித்து வேறு யாருக்கோ நடந்தது போல கூற முற்படுகிறார். ஆனால் இதை கேட்கும் செழியன் கேவலமாக இருப்பதாக கூறுகிறார். அவரது இந்த ரியாக்ஷனை கேட்கும் கோபி, பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார்.
கர்ப்பத்தை மயூவிடம் சொன்ன ராதிகா: இதனிடையே தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை முன்னதாக தன்னுடைய அம்மாவிடம் கூறிய ராதிகா, இன்றைய எபிசோடில் தன்னுடைய மகள் மயூவிடமும் நிதானமாக எடுத்துக் கூறுகிறார். இதை கேட்டு மயூ மிகுந்த உற்சாகமடைகிறார். தான் சிங்கிள் சைல்ட் என்பதால் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தற்போது அந்த நிலை மாறியுள்ளதாகவும் அவர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே தன்னுடைய அனைத்து விஷயங்களையும் இழுத்தடிப்பது போல இதையும் இழுத்தடிக்கிறார் கோபி. இந்நிலையில் தன்னுடைய வாந்தி விவகாரத்தை வீட்டில் உள்ளவர்களிடம் மறைக்க முடியாமல் ராதிகா மிகவும் சிரமப்படுகிறார்.
ஊறுகாய் சாப்பிடும் ராதிகா: வீட்டில் பாக்கியா மற்றும் எழில் இருவரும் இணைந்து ஊறுகாய் செய்கின்றனர். இதை பார்க்கும் ராதிகாவிற்கு நாவில் எச்சில் ஊறுகிறது. மசக்கையாக இருக்கும் அவருக்கு அந்த ஊறுகாய் வாங்கி சாப்பிட ஆசை தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் பாக்கியாவிடம் ஊறுகாய் கேட்டு வாங்கி சுவைக்கிறார் ராதிகா. அவர் தன்னை மறந்து ஊறுகாய் சாப்பிடுவதை பார்க்கும் பாக்கியா மற்றும் எழில் இருவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழிக்கின்றனர். இதனிடையே ஈஸ்வரி ராதிகாவை வழக்கம் போல குறை சொல்கிறார். இத்தனை ஆண்டுகளில் பாக்கியா, ஒரு நாள் கூட தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வீட்டில் உள்ளவர்களுக்கு சமைக்காமல் இருந்ததில்லை என்று கூறுகிறார்.
ராதிகாவை திட்டும் ஈஸ்வரி: ஆனால் வாந்தி வருவதை மட்டுமே காரணமாக கூறி கோபிக்கு தொடர்ந்து ராதிகா சமைக்காமல் இருப்பதாக குறை கூறுகிறார் ஈஸ்வரி. இதைக் கேட்கும் எழில் கோபி தன்னுடைய கிளவுட் கிச்சனில் சாப்பிட்டுக் கொள்வார் என்று சமாதானப்படுத்துகிறார். ஆயினும் வீட்டில் சாப்பிடுவது போல ஆகுமா என்று ஈஸ்வரி தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்து தொடர்ந்து ராதிகாவை திட்டி தீர்க்கிறார். மேலும் கோபிக்கு பாக்கியா சமைக்க முடியுமா என்று கேட்டு அவரது கடுப்பையும் சம்பாதிக்கிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடில் ராதிகாவின் கர்ப்பம் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.


Click it and Unblock the Notifications











