Baakiyalakshmi serial: சதாபிஷேகத்திற்கு தன்னை கூப்பிடாததற்கு காரணம் பாக்கியாவா.. கோபி ஆத்திரம்!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் சதாபிஷேக விழா குறித்த அடுத்தடுத்த காட்சிகள் ஒளிபரப்பாகின. இந்த நிகழ்ச்சியில் எழில் வருவாரா என்று குடும்பத்தினர் அனைவரும் காத்திருந்த நிலையில் அவர் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் வந்து அனைவரையும் சந்தோஷப்படுத்துகிறார்.

இதனிடையே அழையாத விருந்தாளியாக கோபியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக காணப்பட்டது. ஆனால் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் கோபியை திட்டி அங்கிருந்து வெளியேறுமாறு கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து கோயிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நாம் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்று பாக்கியா கூறுவதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன.

Television Baakiyalakshmi serial Vijay TV


பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாளையொட்டிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த காட்சிகளை ஒளிபரப்பு செய்தது. ராமமூர்த்தியின் சதாபிஷேகம் கோயிலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்த நிலையில், எழில் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரா என்று குடும்பத்தினர் அனைவரும் மனத்தாங்கலுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் அமிர்தா மற்றும் குழந்தை நிலாவுடன் எழில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனால் அனைவரும் மிகவும் சந்தோஷத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

கோபி ஆத்திரம்: செழியன் மாமனார் ஜோசப், பழனிச்சாமி, செல்வி மற்றும் ரெஸ்டாரெண்ட் ஊழியர்கள், உறவினர்கள் என அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்ற நிலையில், செழியனிடம் பேசும் கோபி அவர்கள் 80வது பிறந்த நாள் விழாவிற்காக கோயிலில் இருப்பதை தெரிந்து கொள்கிறார். தொடர்ந்து ராதிகாவிடம் தன்னுடைய மனத்தாங்கலை வெளிப்படுத்துகிறார். தன்னுடைய அப்பாவின் சதாபிஷேக விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை பற்றி கூறி அவர் வருந்துகிறார். பாக்கியா தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

சதாபிஷேகத்திற்கு வந்த கோபி: தொடர்ந்து தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாகவும் ராதிகாவையும் நிகழ்ச்சிக்கு வருமாறு கோபி கூப்பிடுகிறார். ஆனால் கோபியே நிகழ்ச்சியில் அனைவரிடமும் அவமானப்பட போவதாக சுட்டிக்காட்டும் ராதிகா, நானும் வந்து அவமானப்பட விரும்பவில்லை என்று கூறுகிறார். ஆனாலும் கோபி கோயிலுக்கு செல்கிறார். ராதிகா கூறியதை போலவே அவர் அங்கு அவமானப்படுகிறார். அங்கு அவர் அழையாத விருந்தாளியாகவே பார்க்கப்படுகிறார். அவர் ஏன் வந்தார் என்பதாக ராமமூர்த்தி, ஈஸ்வரி உள்ளிட்ட அனைவருமே பார்க்கின்றனர். ஆனாலும் தன்னுடைய அப்பாவின் முக்கியமான இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள வந்ததாக கோபி கூறுகிறார்.

அவமானப்படும் கோபி: யாருக்கு யார் அப்பா என்று ராமமூர்த்தி கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து ஈஸ்வரியும் ஆத்திரத்துடன் பேசுவதாக காணப்பட்டது. இந்நிலையில் ஜெனியின் அப்பா ஜோசப், பழனிச்சாமி உள்ளிட்டவர்கள், நல்ல விஷயம் நடக்கும் போது எதற்காக குழப்பம் என்பதாக பேசுகின்றனர். இதனிடையே பாக்கியாவும் கோயிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அவர்களை போக சொல்வதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக கூறுகிறார். இதனிடையே தான் கண்டிப்பாக ஒரு ஓரமாக நின்றாவது விழாவை முழுவதுமாக பார்த்துவிட்டு தான் போவேன் என்று கோபி கூறுவதாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X