Baakiyalakshmi serial: மொத்தமா தோத்து போயிட்டேன்.. கண்ணீர் விட்டு கதறிய பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு நண்பர்களுடன் பப்பிற்கு சென்று போலீசிடம் சிக்கவிருந்த இனியாவை மீட்ட ராதிகா அவரை பாக்கியாவிடம் ஒப்படைக்கிறார். இளம் பெண்ணை வளர்ப்பது குறித்து அவர் பேசிய பேச்சு பாக்கியாவை வருத்தத்திற்குள்ளாக்குகிறது. அவர் அதிர்ச்சியடைவதாகவும் காணப்படுகிறது.

இதனிடையே இனியாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வரும் பாக்கியா, தான் மொத்தமாக வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பரிதவிக்கின்றனர். தொடர்ந்து இனியாவை பாக்கியா அடிப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக ரசிகர்களை வெகுவாக வருத்தப்பட செய்யும் வகையில் அமைந்திருந்தது. இளம்பெண்களை வைத்திருக்கும் அம்மாக்களின் மனோபாவத்தை இந்த எபிசோடில் பாக்கியலட்சுமி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் பப்பிற்கு சென்று போலீசிடம் சிக்குகிறார் இனியா. தொடர்ந்து அங்கு வரும் ராதிகா, அவரை போலீஸிடம் இருந்து மீட்கிறார். ஆனாலும் பாக்கியா உடனே அந்த இடத்திற்கு வந்தால் தான் இனியாவை விடுவேன் என்று அவர் செழியனிடம் உறுதியுடன் கூறுகிறார்.

இனியாவை மீட்ட ராதிகா: இதனால் வேறு வழி இல்லாமல் தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்து ராதிகாவை பேச வைக்கிறார் செழியன். தொடர்ந்து மகளை வளர்க்க தெரியாமல் அவள் தற்போது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பப்பிற்கு சென்று குடித்ததாக ராதிகா கூறுகிறார். இதைக் கேட்டு தான் பங்கேற்றிருந்த பிரம்மாண்டமான சமையல் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேறுகிறார் பாக்கியா. தொடர்ந்து ராதிகாவிடமிருந்து இனியாவை மீட்டு அவருக்கு நன்றி சொல்கிறார். ஆனால் தன்னுடைய மகளை கோர்ட்டுக்கு அழைத்து வந்த பாக்கியாவை போல இல்லாமல் தான் இனியாவை காப்பாற்றியுள்ளதை ராதிகா சுட்டிக் காட்டுகிறார்.

கதறி அழுத பாக்கியா: இளம் பெண்ணை வளர்ப்பது குறித்து ராதிகா விமர்சிக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் பாக்கியா தன்னுடைய மகள் மிகப்பெரிய கிஃப்டை தனக்கு கொடுத்ததாக ஆதங்கம் மற்றும் வருத்தத்துடன் பேசியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் வீட்டிற்கு வரும் இனியாவை குடும்பத்தினர் அனைவரும் திட்டி விட்டு பிறகு அவருக்கு சப்போர்ட்டாக நிற்கின்றனர். ஆனாலும் ஈஸ்வரி மட்டும் தொடர்ந்து இனியாவை திட்டிக் கொண்டே இருக்கிறார். நண்பர்கள் வற்புறுத்தினால் உனக்கு எங்கே போனது புத்தி என்று அவர் அடுத்தடுத்த கேள்விகளை அடுக்குகிறார். இதனிடையே வீட்டிற்கு வந்தும் யாரிடமும் பேசாமல் தன்னுடைய அறைக்கு சென்று பாக்கியா கதறி அழுவதாக காணப்பட்டது.

சமையல் போட்டியில் ஜெயித்த கோபி: தொடர்ந்து வீட்டிற்கு வரும் செல்வி தான் சமையல் போட்டியில் தோற்று விட்டதாக கூறுகிறார். தன்னால் பிரசன்டேஷனை சரியாக செய்ய முடியவில்லை என்றும் செல்வி கூறுகிறார். இதையடுத்து, தான் மொத்தமாக வாழ்க்கையிலேயே தோற்று விட்டதாக பாக்கியா கதறி அழுகிறார். அவரைத் தேற்றும் வழி தெரியாமல் குடும்பத்தினர் அனைவரும் பரிதவிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. முன்னதாக பிரம்மாண்ட சமையல் போட்டியில் பாக்கியாவுடன் போட்டியிட்ட கோபி, அவர் இல்லாத நிலையில் போட்டியில் வெற்றி பெறுகிறார். நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே செல்வியிடம் அவர் பாக்கியா பயந்து ஓடி விட்டாரா என்று கேட்க, இனியாவிற்கு பிரச்சனை என அவர் கூற கோபியும் இது குறித்து ராதிகாவிற்கு கால் செய்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X