Baakiyalakshmi: வீடுங்கற கான்செப்டை அடிச்சு நொறுக்கனும்.. என்ன கோபியை இப்படி புலம்ப விட்டுட்டாங்க!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி அடுத்தடுத்த குழப்பத்தில் உள்ளதாக காணப்படுகிறது. ராதிகா, கமலா மற்றும் கோபியிடம் ஈஸ்வரி குறித்து பாக்கியா பேசியநிலையில், தான் ஏற்கனவே குழப்பத்தில் உள்ளதாகவும் தன்னை மேலும்ம் குழப்ப வேண்டாம் என்றும் கோபி கூறுகிறார். ஆனாலும் இவ்வளவு கொடூரமான ஒரு விஷயத்தை ஈஸ்வரி செய்வாரா என்று பாக்கியா கேட்ட கேள்வி அவருக்கு உறுத்தலையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.

தன்னுடைய அம்மா அப்படி எல்லாம் செய்திருக்க மாட்டார் என்று தனக்குத்தானே கூறிக் கொள்ளும் கோபி, இதே நினைப்பில் தன்னுடைய கிளவுட் கிச்சனுக்கு வந்து அங்கேயும் அனைவரிடமும் எரிந்து விழுவதாக காணப்படுகிறது. இந்நிலையில் அவர் பாருக்கு சென்று இந்த பிரச்சனைகளை நினைத்து தொடர்ந்து அடுத்தடுத்த ரவுண்டாக குடிக்கிறார்.

Television Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் மிகச்சிறப்பாகவே அமைந்திருந்தது. தன்னுடைய மாமியாரை மற்றும் அவரது மன உளைச்சலை நீக்கும் வகையில் அடுத்தடுத்து யோசித்து செயல்பட்டு வருகிறார் பாக்கியா. தன்னுடைய மாமியாரை கொலைகாரி என்று கூறி வீட்டை விட்டு வெளியேற்றிய கோபி, ராதிகா மற்றும் கமலா ஆகியோரிடம் அவர்களது வீட்டிற்கே சென்று நியாயம் கேட்கிறார். இறுதி வரை ராதிகாவும் கமலாவும் புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட நிலையில் வெளியில் வந்து கோபியிடம் பேசும் பாக்கியா, மற்றவர்கள் அவரது அம்மாவை புரிந்து கொள்ளாவிட்டாலும் இத்தனை ஆண்டுகளாக கூடவே இருக்கும் ஈஸ்வரி குறித்து கோபி இப்படி பேசியது தவறு என்று சுட்டிக் காட்டுகிறார்.

Television Baakiyalakshmi serial Vijay tv

குழப்பத்தில் கோபி: மேலும் கோபி இக்கட்டான நேரங்களில் இருக்கும் போதெல்லாம் ஈஸ்வரி அவருக்கு கை கொடுத்ததை குறிப்பிட்டு பேசிய பாக்கியா, அவர் இவ்வளவு கொடூரமான வேலையை செய்வார் என்று எப்படி நீங்கள் நம்பினீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். இது குறித்து கோபி தொடர்ந்து குழப்பத்தில் காணப்படும் கோபி, தன்னுடைய கிளவுட் கிச்சனில் ஊழியர்களிடம் எரிந்து விழுவதையும் இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. தொடர்ந்து வழக்கம் போல பாருக்கு சென்று அளவில்லாமல் குடிக்கிறார். இந்நிலையில் அங்கு வரும் கோபியின் நண்பர் செந்தில், கோபியை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

Television Baakiyalakshmi serial Vijay tv

ராதிகா வெறுப்பு: தான் ராதிகாவை திருமணம் செய்வதற்கு முன்பு தன்னுடைய அம்மா, அப்பா, குழந்தைகள், பிசினஸ் என எவ்வளவு கெத்தாக இருந்தேன் என்றும் ராதிகாவை திருமணம் செய்ததற்கு பின்பு அவை எல்லாமே தன் கையை விட்டு போனதாகவும் குறிப்பாக தன்னுடைய அம்மாவிற்கு இணையாக தான் நினைத்த தன்னுடைய மகள் இனியாவும் தன்னை வெறுத்து விட்டதாக கோபி புலம்பி தள்ளுகிறார். தொடர்ந்து திருமணம் என்ற கான்செப்ட்டை அடித்து நொறுக்க வேண்டும் என்று அவர் பேசுகிறார். செந்திலின் சமாதானங்கள் அவருக்கு முன்பு எடுபடாமல் போகிறது. இந்நிலையில் குடித்துவிட்டு தள்ளாடியபடி வீட்டிற்கு வந்து சேர்கிறார் கோபி. அங்கு ராதிகா மற்றும் கமலாவின் வெறுப்பிற்கும் உள்ளாகிறார்.

கும்பகோணம் ட்ரிப்: இதனிடையே தன்னுடைய மாமியாரின் மனநிலையை மாற்றுவதற்காக அவரை கும்பகோணத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிடும் பாக்கியா, அது குறித்து தன்னுடைய மாமனாரிடம் பேசி அவரையும் உடனழைத்து செல்ல உள்ளதாக கூறுகிறார். இதனிடையே இனியாவிற்கும் கல்லூரி விடுமுறை என்பதால் அவரையும் உடன் அழைத்துச் செல்ல உள்ளதாக கூறுகிறார். ஆனால் ஆன்மீகப் பயணம் என்பதால் இனியா வர மறுக்கிறார். அவரை வற்புறுத்தி இந்த ட்ரிப்பிற்கு வர பாக்கியா சம்மதிக்க வைக்கிறார். அவர்கள் கும்பகோணம் கோயில்களுக்கு செல்லும் காட்சிகள் அடுத்தடுத்த எபிசோடுகளில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X