Baakiyalakshmi serial: வெளிப்பட்டது குட்டு.. பாக்கியாவிற்கு தெரியவந்தது ராதிகா கர்ப்பம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கடந்த சில ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது பாக்யலட்சுமி தொடர். இந்த தொடர் 1100 எபிசோடுகளை தாண்டி ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவரது நடவடிக்கையில் அதிகமான மாற்றங்கள் காணப்படுவதை அடுத்து குடும்பத்தினர் அனைவரும் சந்தேகம் கொள்கின்றனர்.

செல்வி இந்த விஷயத்தை நேரடியாகவே பாக்கியாவிடம் கேட்பதாக காணப்பட்டது. ராதிகாவின் முகத்தில் மினுமினுப்பு இருப்பதாக ஈஸ்வரி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் ராதிகாவை தனியாக மொட்டை மாடியில் பார்க்கும் பாக்கியா இதுகுறித்து அவரிடம் நேரடியாகவே கேள்வி எழுப்புவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Vijay TV s Baakiyalakshmi serial today 27th April 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகின்றன. அந்த வகையில் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. ராதிகா கர்ப்பம் அடைந்த சூழலில் அவரது கர்ப்பம் குறித்து தன்னுடைய அம்மா ஈஸ்வரி மற்றும் குடும்பத்தினரிடம் வெளிப்படுத்த முடியாமல் அவமானமாக உணர்கிறார் கோபி. தன்னுடைய மகன்களிடம் இது குறித்து ஜாடை மாடையாக அவர் பேச்சை துவங்க செழியனோ, இது மிகவும் அருவருப்பாக இருப்பதாக கூறுகிறார்.

ராதிகா கர்ப்பம்: இதனால் ராதிகா கர்ப்பமடைந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் முழிபிதுங்கி வருகிறார் கோபி. ஆனால் ராதிகாவோ தன்னுடைய அம்மா, அண்ணன் மற்றும் தன்னுடைய மகள் மயூவிடன் இந்த விஷயத்தை வெளிப்படுத்துகிறார். இதனிடையே ராதிகாவிற்கு அதிகமாக வாந்தி, மயக்கம் உள்ள சூழலில் அதை குடும்பத்தினரிடம் கூறாமல் மறைப்பதற்கு மிகுந்த பிரயத்தனப்படுகிறார். இதுகுறித்து எல்லாம் கவலை கொள்ளாமல் கோபி, தொடர்ந்து இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் மறைத்து வருகிறார். இதை கேள்விப்படும் ராதிகாவின் அம்மா, கோபியை வரவழைத்து அவர் விரைவில் இந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்திடம் கூறவில்லை என்றால் தானே வந்து ஈஸ்வரி உள்ளிட்டவர்களிடம் இந்த விஷயத்தை வெளிப்படுத்துவேன் என்று எச்சரிக்கிறார்.

முழி பிதுங்கும் கோபி: உடனடியாக தான் வந்து கூறுவதாகவும் சொல்ல கோபி அவரை சமாதானப்படுத்தி தான் விரைவில் இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் கூறுவதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் முன்னதாக ராதிகாவிற்கு உணவு கொடுக்கும் வகையில் பாக்கியா வீட்டிற்கு வருகிறார் மயூ. தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக மயூ, பாக்கியாவிடம் கூறி உண்மையை வெளிப்படுத்த முயல்கிறார். இதனிடையே அங்கே வரும் ராதிகா அந்த விஷயத்தை வெளிப்படுத்த விடாமல் தடுத்து. அங்கிருந்து மயூவை அழைத்து செல்கிறார். இதனிடையே, எழில் மற்றும் அமிர்தா குழந்தை நிலாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு கிளம்புகின்றனர்.

ஈஸ்வரி ஆத்திரம்: அப்போது ஈஸ்வரியையும் நிகழ்ச்சிக்கு கூப்பிடுகிறார் எழில். ஆனால் தான் எழிலிடம் பேச விரும்பவில்லை என்றும் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்தும் ஈஸ்வரி கறாராக பேசுகிறார். என்னதான் எழிலை நிலா அப்பா என்று கூப்பிட்டாலும் அது சொந்த குழந்தை போல வராது என்றும் வளர்ந்த பின்பு எழிலை நிலா நிராகரித்து விடுவார் என்றும் ஈஸ்வரி கூறுகிறார். இதையடுத்து அமிர்தா, எழில் மற்றும் பாக்கியா அனைவரும் மனவருத்தம் கொள்கின்றனர். தொடர்ந்து மொட்டை மாடியில் தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் ராதிகா. அவர் அங்கிருந்து தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டு கிளம்புகிறார்.

உண்மையை சொன்ன ராதிகா: அப்போது அங்கே பாக்கியா வர, ராதிகா மயக்கத்துடன் கீழே விழப் போகிறார். அவரை பிடிக்கும் பாக்கியா அவரிடம் நேரடியாகவே அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்தாலும் ராதிகா பாக்கியாவிடம் உண்மையை கூறுகிறார். இதனால் அந்த இடத்தில் பயங்கரமான மௌனம் நிலவுகிறது. மிகுந்த அதிர்ச்சி அடையும் பாக்கியா இதற்கு எந்த மாதிரி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். தொடர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் பாக்கியா இது நல்ல விஷயம் தானே என்று ஒப்புக்கு சொல்லி வைக்கிறார். இதையடுத்து ராதிகா கீழே இறங்கி செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. தொடர்ந்து பாக்கியா அதிர்ச்சியுடனேயே இருப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X