Baakiyalakshmi: ரெஸ்டாரெண்ட் துவக்கவிழாவிற்கு அமைச்சரை கூப்பிட்ட பாக்கியா.. விரைவில் ஓபனிங்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பான தருணங்களை ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கமம் எபிசோட்கள் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுடன் இணைந்து ராஜி மற்றும் கதிரின் திருமணத்தை நடத்தி முடித்து இருந்தார் பாக்கியலட்சுமி. இந்நிலையில் கடந்த சில தினங்களாக எழிலின் மனைவி அமிர்தாவை அவரது முன்னாள் கணவர் கணேஷ் கடத்தியதையும் அவரிடம் இருந்து பழனிச்சாமியின் உதவியுடன் அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினர் மீட்டதையும் பார்க்க முடிந்தது.
தற்போது எழிலின் பிரச்சினை தீர்ந்துள்ள நிலையில் அடுத்ததாக செழியனின் வாழ்க்கையும் சீராகும் என்று தன்னுடைய மாமியார் ஈஸ்வரியிடம் உறுதியாக கூறுகிறார் பாக்கியா. இந்நிலையில் அடுத்ததாக ரெஸ்டாரெண்ட் துவங்கும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார், இதையொட்டி தன்னுடைய மாமனார், எழில், செல்வி, அமிர்தாவுடன் ரெஸ்டாரெண்டை அவர்கள் சென்று பார்க்கின்றனர். தொடர்ந்து இந்த ரெஸ்டாரெண்டின் துவக்க விழா குறித்தும் திட்டமிடுகின்றனர். அமைச்சரையும் சென்று பாக்கியா, எழில் மற்றும் மாமனார் சென்று பார்க்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்து பரபரப்பான தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகின. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுடன் இணைந்து பாக்கியலட்சுமி குடும்பத்தினரும் செயல்பட்டனர். பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலின் கதிர் மற்றும் ராஜிக்கு நடைபெற்ற திருமணத்தை முன்னிருந்து நடத்திக் கொடுத்தார் பாக்யா, எழில் மற்றும் அமிர்தா. இந்நிலையில் கடந்த சில தினங்களாக எழிலின் மனைவி அமிர்தாவை அவரது முன்னாள் கணவர் கணேஷ் கடத்தி வலுக்கட்டாயமாக திருமணத்திற்கு அடி பணிய வைத்ததை பார்க்க முடிந்தது.
சிறை சென்ற கணேஷ்: ஆனால் பழனிச்சாமியின் உதவியுடன் கணேசனின் இந்த திட்டத்தை பாக்யா, எழில் மற்றும் செழியன் முறியடித்தனர். எழில் விவகாரத்தில் தற்போது கணேஷ் சிறை சென்றுள்ளதால் அவர்கள் வாழ்க்கை சீராகியுள்ளது. இதேபோல செழியன் விவகாரத்திலும் சிறப்பான முடிவு ஏற்படும் என்று பாக்யா நம்பிக்கை தெரிவிக்கிறார். இதனிடையே வீட்டின் பிரச்சினைகள் தீர்ந்ததாக நினைக்கும் பாக்யா, தன்னுடைய ரெஸ்டாரெண்ட் துவக்க விழா குறித்த அடுத்தடுத்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். ரெஸ்டாரெண்ட் துவக்க விழாவிற்கு அமைச்சரை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார் பாக்யா. அவரும் பங்கேற்பதாக உறுதி அளிக்கிறார்.
ரெஸ்டாரெண்ட் துவக்கவிழா: விரைவில் ரெஸ்டாரெண்ட் துவக்க விழா தொடர்பான எபிசோட்களை இந்த சீரியலில் எதிர்பார்க்கலாம். இதனிடையே நீண்ட நாட்களாக தன்னுடைய நிறுவனத்தை மூடியது குறித்து குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைத்து வந்த கோபியின் குட்டு தற்போது வெளிப்பட்டுள்ளது. கோபியை தேடி அவரது நிறுவனத்திற்கே செல்லும் ராதிகாவை திசை மாற்றி சாப்பிட அழைத்து செல்கிறார் கோபி. ஆயினும் சந்தேகம் கொள்ளும் ராதிகா, மீண்டும் அவரது நிறுவனத்திற்கு சென்று பார்க்கிறார். அப்போது கோபி அந்த நிறுவனத்தை கடன் தொலையால் மூடியது அவருக்கு தெரிய வருகிறது.
ராதிகாவிற்கு தெரியவந்த உண்மை: இது குறித்து காரில் வரும் வழியெல்லாம் அவரை திட்டித் தீர்க்கிறார் ராதிகா. தொடர்ந்து வீட்டிற்கும் வரும் இவர்களிடம் என்ன நடந்தது என்று குடும்பத்தினர் கேட்கின்றனர். ஆனால் உண்மையை வெளிப்படுத்த வேண்டாம் என்று கோபி கெஞ்சி கேட்கிறார். ஆனாலும் ராதிகா கோபத்துடன் அதை சொல்ல முயல்வதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது, நிறுவனத்தை மூடியது தெரிந்தால் பயங்கரமான பிரச்சினை ஏற்படும் என்று நினைத்தே கோபி அதை மறைக்கிறார். தற்போது அந்த விஷயம் ராதிகாவிற்கு தெரியவந்துள்ள நிலையில், வீட்டினர் எத்தகைய ரியாக்ஷனை வெளிப்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











