நண்பர்கள் கட்டாயப்படுத்தி விஷத்தை கொடுத்தால் குடிப்பாயா.. பாக்கியா கேள்வியால் அதிர்ந்த இனியா!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் இனியாவால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து பாக்கியா அவரிடம் கோபம் மற்றும் ஆத்திரமாக பேசுவதாக காணப்பட்டது. இதனால் இனியா தொடர்ந்து கண்ணீர் விட்டு கதறுவதாகவும் தொடர்ந்து மன்னிப்பு கேட்பதாகவும் காணப்பட்டது. இந்த விஷயத்தில் செழியனை ஈஸ்வரி கோபத்துடன் பேசுவதாகவும் இன்றைய எபிசோட் அமைந்திருந்தது.

இனியா நண்பர்களுடன் இணைந்து பப்பிற்கு சென்றதால் போலீசில் மாட்ட, அங்குவந்த ராதிகா அவரை போலீசிடம் இருந்து மீட்பதாக கடந்த எபிசோட்களில் காணப்பட்டது. இந்நிலையில் இந்த விஷயத்தில் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் பதைபதைப்பதாகவும் அடுத்தடுத்த எபிசோட்களில் காட்சிகள் அமைந்திருந்தன.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் இன்றைய எபிசோடில் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்யும்வகையில் காட்சிகள் அமைந்திருந்தன. இனியா பப்பிற்கு சென்று போலீசிடம் சிக்கிய நிலையில், அங்குவந்த ராதிகா, தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக அவரை மீட்கிறார். தொடர்ந்து சமையல் போட்டியில் இருந்த பாக்கியாவை போன் செய்து வரவழைத்து இனியாவை ஒப்படைப்பதாக கடந்த எபிசோட்களில் காணப்பட்டது. தன்னுடைய வளர்ப்பை ராதிகா கேள்வி கேட்க, இதனால் மனமுடைந்து போகிறார் பாக்கியா. தொடர்ந்து இன்றைய எபிசோடில் இனியாவை அவர் அடித்து உதைப்பதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன.

கதறிய இனியா: ராதிகா தன்னுடைய வளர்ப்பை குறைகூறியதால், இனியாவிற்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியது குறித்து பாக்கியா கேள்வி கேட்கிறார். சுதந்திரத்தையும் கொடுத்துவிட்டு பின்னாலேயே வர முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து கண்ணீர் விட்டு கதறிய இனியா, தொடர்ந்து பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். இதையடுத்து பேசிய தாத்தா, காலம் கெட்டுக் கிடப்பதாகவும் தங்களின் வாழ்க்கையை அவரவர்தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

கோபியிடம் பேசிய செழியன்: தொடர்ந்து வீட்டிற்குவரும் கோபி, ராதிகாவிடம் என்ன நடந்தது என்று கேட்கிறார். ஆனால் ராதிகாவோ, எந்த விஷயத்தையும் கூறாமல் தன்னுடைய அறைக்கு சென்று தாழிட்டுக் கொள்கிறார். இதனால் பரிதவிக்கும் கோபி, நடந்த விஷயத்தை தெரிந்துக் கொள்ள பாக்கியா வீட்டிற்கு நள்ளிரவில் வருகிறார். இனியாவிற்கு கோபி கால் செய்ய அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் தொடர்ந்து செழியனுக்கு கால் செய்து கீழே வரவழைக்கிறார். செழியன் நடந்த விஷயங்களை கோபியிடம் கூறுவதாக காணப்பட்டது. இதையடுத்து எவ்வளவு கோபம் இருந்தாலும் ராதிகா இனியாவை காப்பாற்றியது குறித்து கோபி நெகிழ்கிறார்.

இனியாவிடம் பாக்கியா கேட்ட கேள்வி: இதனிடையே, தன்னுடைய அறைக்கு வருகிறார் பாக்கியா. அங்கு இனியா தூங்குவதுபோல பாவனை செய்கிறார். இதையடுத்து அவரை பார்த்து பாக்கியா அழுவதாக காணப்பட்டது. இதையடுத்து எந்த சூழ்நிலையில் தான் பப்பிற்கு சென்றேன் என்பதாக இனியா விளக்கம் கொடுக்கிறார். தன்னுடைய நண்பர்கள் தன்னை கட்டாயப்படுத்தியதாக இனியா கூற, அவர்கள் விஷத்தை கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க சொன்னால் செய்வாயா என்று பாக்கியா கேள்வி எழுப்புகிறார். இளைஞர்கள் மீது பெற்றோர் வைக்கும் நம்பிக்கையை அவர்கள் ஒரு நாளாவது காப்பாற்றுகிறார்களா என்றும் பாக்கியா கேள்வி எழுப்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X