Baakiyalakshmi: ஈஸ்வரிக்கு நீ பண்ண துரோகத்துக்கு தனி ஆளா நிற்படா.. கோபியை அடிக்கப்பாய்ந்த அப்பா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் காணப்பட்டது. தன்னுடைய அம்மாவை கொலைகாரி பட்டம் சுமத்தி வீட்டை விட்டு வெளியேற்றிய கோபி, தொடர்ந்து இந்த விஷயத்தில் அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
இதனால் கோபி குடிக்க சென்ற நிலையில் அது குறித்து ராதிகா மற்றும் அவரது அம்மா இருவரும் கேள்வி எழுப்புவதாக காணப்பட்டது. அவர் தன்னுடைய அம்மா குறித்து வருத்தப்படும் சூழலில், தன்னுடைய குழந்தையை இழந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தன் மீது அக்கறையை வெளிப்படுத்தாமல் இப்போதும் அம்மா, அம்மா என்று கூறிக் கொண்டிருக்கிறீர்களே என்று ராதிகா கோபியிடம் சண்டையிடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில், தன்னுடைய அம்மாவை வீட்டை விட்டு அனுப்பியது குறித்து குழப்பத்தில் இருக்கும் கோபி, வீட்டிற்கு குடித்து விட்டு வருகிறார். இதனால் ராதிகா மற்றும் அவரது அம்மா இருவரும் மிகுந்த ஆத்திரப்படுகின்றனர். தொடர்ந்து தன்னுடைய அம்மாவை வீட்டை விட்டு அனுப்பியதால் வருத்தத்தில் தான் குடித்து விட்டு வந்ததாக இருவரிடமும் கோபி கூறுகிறார். இதையடுத்து தன்னுடைய குழந்தையை பறிகொடுத்து விட்டு தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளதாகவும் தன்னுடைய உடல்நிலை குறித்து எந்த அக்கறையும் விசாரிப்பும் இல்லாத நிலையில் அம்மா, அம்மா என்று எப்போதும் அவரைப் பற்றியே கோபி நினைத்துக் கொண்டிருப்பதாகவும் ராதிகா ஆத்திரப்படுகிறார்.
ராதிகா ஆத்திரம்: இப்படி அம்மா பிள்ளையாக இருக்க வேண்டுமென்றால் அவருடனேயே இருக்க வேண்டியதுதானே என்னை எதற்காக திருமணம் செய்து கொண்டீர்கள் என்றும் ராதிகா அடுத்தடுத்த கேள்விகளை எழுப்புகிறார். தொடர்ந்து தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து அவர் தவறான முடிவை எடுத்து விட்டதாக ராதிகா கூறுகிறார். இந்நிலையில் ராமமூர்த்தி மற்றும் பாக்கியா இருவரும் காலையில் வாக்கிங் செல்கின்றனர். தன்னுடைய மனைவி ஈஸ்வரி, அதிகார தோரணையுடன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதை எல்லாம் தான் பார்த்துள்ளதாகவும் ஆனால் இப்படி மனமுடைந்து உட்கார்ந்து அழுவதை தான் எப்போதுமே பார்த்ததில்லை என்றும் மன வருத்தம் கொள்கிறார்.
கோபியை அடிக்கப்பாய்ந்த அப்பா: அவரை பாக்கியா சமாதானப்படுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. தொடர்ந்து அங்கு கோபியை பார்க்கும் ராமமூர்த்தி, கோபி யாருக்குமே நல்லவராக இல்லை என்று சண்டையிடுகிறார். உன்னுடைய குழந்தைகள், நம்பி திருமணம் செய்து கொண்ட பாக்கியா, கைக் குழந்தை போல எப்போதும் உள்ளங்கையிலேயே வைத்திருந்த அம்மா மற்றும் தன்னுடைய உடல்நல குறைவிற்கும் காரணமாக கோபி அமைந்ததாக சண்டையிடுகிறார். பப்ளிக்காக ராமமூர்த்தி எந்த அப்பாவும் தன்னுடைய மகன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்க மாட்டான் என்றும் சாபம் கொடுக்க மாட்டான் என்றும் ஆனால் தான் வயிறெரிந்து கூறுவதாகவும் கண்டிப்பாக கோபி நன்றாக இருக்க மாட்டான் என்றும் யாரும் இல்லாமல் அனாதையாக தனியாக கோபி நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ராமமூர்த்தி திட்டித் தீர்க்கிறார்.
கும்பகோணம் பயணம்: இதையடுத்து ஈஸ்வரி, ராமமூர்த்தி, பாக்கியா மற்றும் இனியா என நால்வரும் கும்பகோணம் புறப்பட்டு செல்கின்றனர். ஈஸ்வரி தொடர்ந்து தயக்கம் காட்டிய நிலையில், அவர்தான் கும்பகோணம் செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் அவர் வராமல் தாங்கள் எப்படி செல்வது என்றும் பாக்கியா சமாதானப்படுத்த அனைவரும் கும்பகோணம் புறப்படுகின்றனர். இதுகுறித்து செழியனிடம் கோபி விசாரிக்கும் நிலையில், மிகுந்த அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டாம் என்று அவரும் எழிலும் ஆத்திரப்படுகின்றனர். இதனால் கோபிக்கு மேலும் வருத்தம் ஏற்படுகிறது.
தொடரும் ராதிகாவின் ஆத்திரம்: இதையடுத்து கோபி வேதனையுடன் வீட்டிற்கு வந்து இது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா, அவரது அம்மா கமலா, மற்றும் மகள் மயூ என மூவரும் வெளியில் கிளம்புகின்றனர். பலமுறை கோபி கேட்டும் தாங்கள் செல்லும் இடம் குறித்து ராதிகா கூறாமல் ஆத்திரப்படுகிறார். கோபி போகும் இடத்தை எல்லாம் தன்னிடம் சொல்லிவிட்டு போகிறாரா என்று கோபத்துடன் கேட்கிறார். இதையடுத்து தன்னுடைய அம்மா வீட்டை விட்டு போனதால் குழப்பத்தில் குடிக்க சென்றதாக கோபி விளக்கம் கொடுக்கிறார். இதனால் ராதிகாவின் கோபம் மேலும் அதிகரிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











