Baakiyalakshmi serial: கமலாவை வீட்டை விட்டு துரத்தாமல் விட மாட்டேன்.. ஈஸ்வரியின் புதிய சபதம்!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அடுத்தடுத்த காட்சிகளை கொண்டதாக காணப்பட்டது. தன்னுடைய அம்மா தனக்காக எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும்நிலையில் தான் தன்னுடைய புதிய படத்திற்காக விருது வாங்கி, அந்த சந்தோஷத்தை தன்னுடைய அம்மா முகத்தில் பார்க்க வேண்டும் என்று எழில் அமிர்தாவிடம் நெகிழ்ச்சியாக கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

இதனிடையே பார்க்கில் ராமமூர்த்தியை சந்தித்து பேசும் ஈஸ்வரி தான் இப்போதைக்கு கோபி வீட்டில் இருந்து வரமாட்டேன் என்றும் அங்கிருக்கும் ராதிகாவின் அம்மா கமலாவை துரத்தி விட்டு தான் மறு வேலை என்றும் கூறுவதாக அமைந்துள்ளது. இதனிடையே பாக்கியா ரெஸ்டாரெண்ட்டிற்கு பக்கத்தில் பார் ஓபன் செய்யும் உரிமையாளர், தன்னுடைய கடை திறப்பிற்கான இன்விடேஷனை பாக்கியாவிடம் கொடுப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

Vijay TV s Baakiyalakshmi serial today 27th May 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்று முன்னணியில் காணப்படுகிறது. இந்த வார டிஆர்பியில் சன் டிவி சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளது பாக்கியலட்சுமி. சேனலிலும் இரண்டாவது முன்னணி தொடராக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஜெனியின் நடவடிக்கையில் மாறுபாடுகள் இருப்பதை பார்த்து அதுகுறித்து அமிர்தாவிடம் பேசுகிறார் பாக்கியா.

எழிலின் விருப்பம்: தொடர்ந்து நம்ம ஜெனி தானே, கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் என்று அமிர்தாவுக்கு அட்வைஸ் செய்கிறார் பாக்கியா. இதையடுத்து தான் எழுதிய சில காட்சிகளை அமிர்தாவிடம் காட்டி அது குறித்து டிஸ்கஸ் செய்கிறார் எழில். தான் கண்டிப்பாக இந்த முறை சாதிக்க வேண்டும் என்று கூறும் எழில், தன்னுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் அனைவரும் முட்டுக்கட்டை போட்ட போது தனக்காக தொடர்ந்து சப்போர்ட் செய்தவர் தன்னுடைய அம்மா என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். தன்னுடைய படத்திற்கு விருது வாங்கி அதை தன்னுடைய அம்மாவை பார்க்க வைக்க வேண்டும் என்றும் அவரது முகத்தில் தொடர்ந்து சிரிப்பை தக்க வைக்க வேண்டும் என்றும் எழில் கூறுகிறார்.

கோபி போட்டுக் கொடுத்த காபி: இது கண்டிப்பாக நடக்கும் என்று அமிர்தாவும் எழிலுக்கு ஆதரவாக பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தனக்கு நல்ல அம்மா மட்டும் இல்லாமல் நல்ல மனைவியும், நல்ல மகளும் வாய்த்திருப்பதாக எழில் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இதனிடையே ராதிகா வீட்டில் காலையில் குளித்துவிட்டு வெளியில் வரும் ஈஸ்வரி, தன்னுடைய மகன் கோபி ஹாலில் படுத்து தூங்குவதை பார்த்து கேள்வி எழுப்புகிறார். கோபி ஒருவழியாக சமாளிக்கிறார். தன்னுடைய மனைவியை போட்டுக் கொடுக்காமல் சப்போர்ட் செய்கிறார். இதையடுத்து கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரிக்கு காபி போட்டுக் கொடுப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

காபியை கொட்டிய ஈஸ்வரி: இதுவரை சமையல் ரூமிற்கு செல்லாத கோபி முதல் முயற்சியாக போடும் காபியை குடித்துவிட்டு சிறப்பாக இருக்கிறது என்று கூறும் ஈஸ்வரி, அவர் வாக்கிங்கிற்காக கிளம்பியதையடுத்து காபியை கொண்டு போய் முகச்சுளிப்புடன் கொட்டுகிறார். இதை பார்க்கும் ராதிகா மற்றும் கமலா இருவரும் அதிர்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. தொடர்ந்து வாக்கிங் செல்லும் ஈஸ்வரி, தன்னுடைய கணவர் ராமமூர்த்தியை சந்தித்து பேசுகிறார். அப்போது ராமமூர்த்தி எப்படி இருக்கிறார் என்று கேள்வி எழுப்ப, தன்னுடைய குறைகளை கொட்டித் தீர்க்கிறார் ஈஸ்வரி.

ஈஸ்வரியின் சபதம்: ராதிகாவின் அம்மா இரவு நேரத்தில் அவல் உப்புமா செய்வதையும் பல்வேறு விஷயங்களையும் பேசும் ஈஸ்வரி அது கூட பரவாயில்லை இன்று காலை கோபி போட்டு கொடுத்த காபி பாகற்காயில் போட்டுக் கொடுத்தது போல இருந்ததாக கூறுகிறார். தொடர்ந்து பாகற்காய் கூட இல்லை வேப்ப எண்ணையில் போட்டது போல இருந்ததாக கூறுகிறார். இவ்வளவு கஷ்டங்களுடன் ஏன் அங்கு இருக்க வேண்டும் உடனடியாக நம் வீட்டிற்கு வந்து விடு என்று ராமமூர்த்தி கூற, ஈஸ்வரியோ, கோபிக்காக அங்கு சென்றதாகவும் ஆனால் தற்போது தனக்கு வேறு ஒரு கடமையும் வந்துவிட்டதாகவும் கூறுகிறார். ராதிகா அம்மா கமலாவை அந்த வீட்டை விட்டு துரத்துவது தான் தன்னுடைய இலக்கு என்றும் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X