Baakiyalakshmi serial: என் ரெஸ்டாரெண்ட்ல வேலைக்கு வந்துடுங்க.. பாக்கியாவால் கடுப்பான கோபி!

சென்னை: விஜய் டிவியின் சீரியல்களில் மக்கள் ரசனையை சரியாக படம் பிடித்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வரும் தொடர் என்றால் பாக்கியலட்சுமி அதில் முக்கியமான இடத்தை பிடித்து விடும். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் இந்த சீரியல் ஸ்ரீமோயி என்ற பெங்காலி சீரியலின் ரீமேக் என்பது தெரிந்திருக்கலாம், அந்த வகையில் இந்த சீரியல் வடநாட்டிலிருந்து வந்தாலும் தமிழக மக்களை கவரும்வகையில் இதன் காட்சி அமைப்புகளை உருவாக்கி வருகிறார் சீரியலின் இயக்குனர். கணவனால் ஏமாற்றப்பட்டு விவாகரத்து பெற்ற ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறும் நிலையிலும் தன்னுடைய குடும்பத்தையும் கையோடு அழைத்துச் செல்வது இந்த சீரியலில் முக்கியமான அம்சமாக காணப்படுகிறது.

ஒருபுறம் குடும்பத் தலைவியாக தன்னுடைய குடும்பத்தினரின் நன்மையை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்டு வந்த பாக்கியா, மசாலா பிசினஸ் துவங்கி தற்போது ரெஸ்டாரெண்ட் திறப்பது வரை தன்னை முன்னேற்றிக் கொண்டுள்ளார். மறுபுறம் குடும்பத் தலைவனாக தான் மட்டுமே சம்பாதித்து குடும்பத்தின் நலன்களை பார்த்துவந்த கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டாலும் பாக்கியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தன்னுடைய முன்னேற்றத்தை படிப்படியாக குறைத்து, கீழிறங்கி தற்போது 5 பைசாகூட இல்லை என்று கூறுமளவிற்கு மாறியுள்ளார்.

Vijay TVs Baakiyalakshmi serial today (28th February 2024) episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவி முன்னணி சீரியல்கள் வரிசையில் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலின் முக்கியமான அம்சமே ரசிகர்களை கவரும் வகையில் இதன் நாயகியின் செயல்பாடு தான். கணவனால் ஏமாற்றப்பட்டு விவாகரத்து பெற்றநிலையிலும் தன்னுடைய வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிய தன்னுடைய பயணத்தில் உறுதியாக இருந்த போதிலும் தன்னுடைய குடும்பத்தை கைவிடாமல் கையோடு தன்னுடைய வெற்றிப் பயணத்தில் கூட்டணி அமைத்துக் கொள்கிறார். இந்த சீரியலின் நாயகி பாக்கியலட்சுமி என்ற பாக்யாவாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்த நாயகியாக சுசித்ரா நடித்துள்ளார்.

பாக்கியாவின் வளர்ச்சி: இந்த சீரியலில் பாக்கியாவின் கணவன் கோபி, அவரது இரண்டாவது மனைவி ராதிகா மற்றும் மகன்கள், மகள், மாமனார், மாமியார் என முக்கியமான கேரக்டர்களை மட்டுமே மையமாகக் கொண்டு அடுத்தடுத்த கதைகளங்கள் வெளியாகி வருகின்றன. கணவனை மட்டுமே சார்ந்ததாக தன்னுடைய வாழ்க்கைப்பயணத்தை அமைத்துவந்த பாக்கியா, ஒரு கட்டத்தில் அவரின் பிரிவுக்குப் பிறகு தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலும் தன்னுடைய வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும் நிலையில் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதாக இந்த சீரியல் அமைந்து வருகிறது.

ரசிகர்களை ஈர்க்கும் பாக்கியா: மசாலா பிசினஸ் துவங்கி கேட்டரிங் கான்ட்ராக்ட், சமையல் காண்ட்ராக்ட் என அடுத்தடுத்த தளங்களில் தன்னுடைய வெற்றியை மேற்கொண்டு வந்த பாக்யா, தற்போது ரெஸ்டாரன்ட் துவங்கும் அளவிற்கு தன்னை முன்னேற்றிக் கொண்டுள்ளார். தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத குடும்பத்தினர் முன்பு மட்டும் இல்லாமல் தன்னை சார்ந்தவர்களின் முன்பும் தன்னுடைய சுயத்தை வெளிப்படுத்தும் நிலையில் பாக்கியா கேரக்டர் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. இதனிடையே தன்னுடைய குடும்பத்தில் தான்தான் பெஸ்ட் என்னும் வகையாக இருந்து வந்த கோபி கேரக்டர் தற்போது படிப்படியாக கீழிறங்கி தற்போது ஐந்து பைசா கூட இல்லாத நிலையில் மற்றவர்களை சார்ந்து இருப்பதாக மாறியுள்ளது.

வெளியானது கோபியின் குட்டு: சரியான வருமானம் இல்லாத நிலையில் அவர் தன்னுடைய நிறுவனத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூடிவிட்டு அதை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தும் தைரியம் இல்லாமல் மறைக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரம் அவரது இரண்டாவது மனைவி ராதிகாவிற்கு தெரிய வந்தது. தொடர்ந்து இந்த எபிசோடில் அவர் கோபியிடம் ஆத்திரத்துடன் சண்டை பிடிப்பதாக அமைந்தது. தொடர்ந்து தன்னுடைய மாமியாரிடம் உண்மையை போட்டு உடைக்கிறார். உங்கள் மகன் உங்களிடம் எல்லாவற்றையும் கூறுவதாக நீங்கள் நம்பிக்கையுடன் கூறுகிறீர்கள். ஆனால் அவர் தன்னுடைய அலுவலகத்தை மூடியதை உங்களிடம் சொன்னாரா என்பதாக ராதிகா கேள்வி எழுப்பிய நிலையில் சொல்வது அறியாமல் ஈஸ்வரி வாயடைத்து அதிர்ச்சிக்குள்ளாகிறார்.

மனமுடைந்த கோபி: தொடர்ந்து இதைத்தான் எப்படி சொல்வேன் என்று குமுறி அழும் கோபியின் மீது குடும்பத்தினர் அனைவரும் பச்சாதாபம் கொள்கின்றனர். அடுத்ததாக வேலை தேடும் படலத்தில் மும்முரமாக ஈடுபடுகிறார் கோபி. தன்னுடைய நண்பர் ஒருவரிடம் அவர் வேலை கேட்பதை பார்க்கும் பாக்கியா, தான் புதிதாக துவங்க உள்ள ரெஸ்டாரண்டில் மேனேஜர் போஸ்டில் இணைந்து கொள்வாரா என்று கேட்கிறார். இதை அவமானமாக கருதும் கோபி அவரிடம் ஆத்திரத்துடன் சண்டை போடுகிறார். நான் உன் கீழ் வேலை செய்ய வேண்டுமா என்று அவர் கேட்பது அவருடைய ஈகோவை வெளிக்காட்டும் காட்சியாக அமைந்துள்ளது. இவர்களின் இந்த உரையாடலில் என்ன சொல்வது என்று தெரியாமல் ராதிகா முழிப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X