Baakiyalakshmi: உங்களுக்கு விருப்பம் இல்லன்னா வீட்டை விட்டு போயிடுங்க.. கோபியிடம் கடுப்பான ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு பரபரப்பான கட்டங்களுடன் காணப்பட்டது. ராதிகாவை செக்கப் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை மறந்து விடுகிறார் கோபி. ஏற்கனவே அவர் அம்மாவிற்கு சப்போர்ட் செய்வதும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் என அடுத்தடுத்த சம்பவங்களால் மிகவும் ஆத்திரமாக காணப்படும் ராதிகா தற்போது மேலும் ஆத்திரத்துக்கு உள்ளாகிறார்.

தொடர்ந்து கமலாவும் கோபியை பலவாறாக பேசுகிறார். இதனால் ஆத்திரமடையும் கோபி கமலாவை பதிலுக்கு பேச முயல, ராதிகா அங்கு வந்து தனக்கு ஆதரவாக ஒரு சிலர் பேசுவார்கள் என்றும் அதையும் வேண்டாம் என்று கூறுகிறீர்களா என்று கோபியிடம் கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து அவர்களுக்குள் சண்டை வலுப்பதாகவும் இதையடுத்து இன்றைய தினமும் மீண்டும் கோபி குடிப்பதாகவும் காணப்பட்டது. பாக்கியலட்சுமி சீரியல்: அடுத்தடுத்த எபிசோட்களால் ஏராளமான ரசிகர்களுக்கு விருப்பமான சீரியலாக காணப்படும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது. தன்னுடைய அம்மாவை கொலைகாரி என்ற பட்டம் சுமத்தி வீட்டை விட்டு வெளியேற காரணமாக இருந்த கோபி, தொடர்ந்து மனக்குழப்பத்திலேயே இருக்கிறார். இது குறித்து பாக்கியலட்சுமி மற்றும் கோபியின் அப்பா ஆகியோர் தங்களது கோபத்தை வெளிப்படுத்திய நிலையில் கோபியின் குழப்பம் மேலும் அதிகரிக்கிறது. இந்நிலையில் ராதிகா மற்றும் அவரது அம்மா கமலா இருவரும் ஈஸ்வரி குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டுவதை கோபியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மருத்துவமனை சென்ற ராதிகா: தன்னுடைய அம்மாவிற்கு சப்போர்ட்டாக கோபி பேசிய நிலையில், ராதிகா மிகுந்த கடுப்பாவதாக காணப்படுகிறது. மேலும் கோபி குடித்துவிட்டு வருவதும் அவருக்கு மிகப்பெரிய எரிச்சலை கொடுக்கிறது. இந்நிலையில் மருத்துவமனைக்கு செக்கப்பிற்காக ராதிகா செல்கிறார். ஆனால் அன்றைய தினம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை கோபி முற்றிலும் மறந்த நிலையில் ராதிகா மேலும் கோபம் கொள்வதாக காணப்படுகிறது. தொடர்ந்து தன்னுடைய அம்மா மற்றும் மயூவை அழைத்துக் கொண்டு ராதிகா மருத்துவமனைக்கு செக்கப்பிற்கு சென்று வருகிறார்.

கமலா எகத்தாளம்: அவர்கள் மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நிலையில் தொடர்ந்து டாக்டர் என்ன சொன்னார் என்று கோபி கேட்க, ராதிகா பதில் சொல்லாமல் ஆத்திரத்துடன் தன்னுடைய அறைக்கு சென்று விடுகிறார். இதையடுத்துப் பேசும் கமலா, எப்போதும் அம்மா அம்மா என்று நினைத்துக் கொண்டிருந்தால் தன்னுடைய மனைவியை எப்படி கவனிப்பீர்கள் என்பதாக தொடர்ந்து ஆத்திரத்துடன் பேசுகிறார். இதையடுத்து தாங்கள் ஈஸ்வரி குறித்து போலீசில் கம்ப்ளைண்ட் செய்திருந்தால் ஈஸ்வரி தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார் என்றும் கமலா பேசிய நிலையில் அவரிடம் கோபி ஆத்திரத்துடன் பேசுகிறார்.

பிடிக்கலைன்னா போங்க: இதையடுத்து அங்கு வரும் ராதிகா, தன்னுடைய அம்மா சொல்வதில் என்ன தவறு என்று கேட்கிறார். தொடர்ந்து கோபிக்கு விருப்பமில்லை என்றால் அவர் தாராளமாக அந்த வீட்டை விட்டு சென்றுவிடலாம் என்றும் ராதிகா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இதையடுத்து இன்றைய தினமும் பாருக்கு செல்லும் கோபி, எக்கச்சக்கமாக குடிக்கிறார். கூட இருக்கும் அவருடைய நண்பர் செந்தில் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் குடித்துக் கொண்டிருக்கும் கோபி, ராதிகா மற்றும் கமலாவின் செயல்பாடுகள் குறித்து ஆத்திரத்துடன் சுட்டி காட்டுகிறார்.

Television Baakiyalakshmi serial

அளவுக்கதிகமான குடி: ராதிகாவின் அம்மா அவருக்கு கீ கொடுப்பதாகவும் அதற்கு ஏற்ப தன் தலையில் ஏறிக்கொண்டு ராதிகா ஆடுவதாகவும் கோபி பேசுகிறார். மேலும் தான் வாடகை கட்டி வரும் வீட்டிலிருந்து தன்னையே ராதிகா வெளியேற சொல்வதாகவும் கோபி ஆத்திரத்துடன் கூறுகிறார். இதை பக்கத்து மேஜையில் இருந்து கேட்கும் நபர் ஒருவர் அமைதியாக இருக்கும் படி கூறுகிறார். அவரிடம் கோபி சண்டைக்கு போகிறார். சண்டை வலுக்க பார் ஊழியர்கள் அவர்களை வெளியேற்றுகின்றனர். இதையடுத்து அவர்கள் சண்டை வெளியிலும் நீடிக்கிறது. இதையடுத்து அங்குவரும் செழியன் மற்றும் எழில் இதை பார்ப்பதாகவும் கோபியை மீட்டு அழைத்து செல்வதாகவும் இன்றைய எபிசோட் காணப்பட்டது.

மலரும் நினைவுகளில் ஈஸ்வரி: இதனிடையில் பாக்கியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி மற்றும் இனியா நால்வரும் கும்பகோணம் சென்றடைகின்றனர். அவர்கள் அனைவரும் உற்சாகமாக காணப்படும் நிலையில், ஈஸ்வரியின் தோழிகள் குறித்து இனியா கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் ஈஸ்வரி, தனக்கு மிகவும் குறைவான தோழிகளே இருந்ததாகவும் அதில் சாவித்ரி என்ற சினேகிதி மிகவும் நெருக்கமானவர் என்றும் தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்கிறார். இதை பார்க்கும் பாக்கியா வேறு ஒரு யோசனை செய்வதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X