Baakiyalakshmi: பளார்.. என்னா அடி.. ஜெனி காலில் விழுந்து சரணடைந்த செழியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் 1000 எபிசோட்களை கடந்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தொடர்ந்து முதலிடத்தில் காணப்பட்ட இந்த சீரியல் இடையில் சிறிது சறுக்கி இரண்டாவது இடத்தில் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இந்த சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டு வரும் சூழலில் அதற்கு ஏற்ப முன்னதாக எழில் - அமிர்தாவின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இன்றைய எபிசோடில் செழியன் மற்றும் ஜெனியின் பிரச்னையும் தீர்க்கப்பட்டு உள்ளது.

செழியன் மற்றும் ஜெனி இருவரும் இணைந்து பேசும் சந்தர்ப்பத்தை பாக்கியா மற்றும் ஜெனியின் அம்மா மரியம் ஆகியோர் ஏற்படுத்தியிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பேசி, சண்டையிட்டு, அடித்துக் கொண்டு சமாதானமடைந்துள்ளனர். அடுத்ததாக கோபி பாக்யாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் சூழலில் அந்த பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சீரியல் நிறைவடைந்தால் அடுத்ததாக தொடர்ந்து பாக்கியலட்சுமி 2 சீசன் துவங்கப்படுமா என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Vijay TV s Baakiyalakshmi serial today 28th March 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையை பாக்யா மற்றும் குடும்பத்தினர் இணைந்து தகர்த்த நிலையில் அவர்கள் தற்போது நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஜெனி மற்றும் செழியன் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை தீர்க்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து மறுமணம் செய்யும் ஏற்பாடுகளில் ஜெனியின் அப்பா மற்றும் கோபி, ஈஸ்வரி ஆகியோர் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.

செழியன் மறுமணம்: இந்நிலையில் செழியன் மற்றும் ஜெனி இருவரையும் தான் சேர்த்து வைப்பேன் என்று தன்னுடைய மாமனார் ராமமூர்த்தியிடம் பாக்கியா உறுதியுடன் தெரிவித்தார். அதற்கான வேலைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்ட நிலையில் தற்போது செழியனுக்கு மறுமண ஏற்பாடுகள் நடப்பதை பார்த்து அவர் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டார். ஜெனியின் வீட்டிற்கு சென்று அவரது அப்பாவிடம் இது குறித்து அவர் அழுத்தம் திருத்தமாக பேசினார். ஜெனி மற்றும் செழியன் இருவரையும் ஒரு முறை நேரில் சந்தித்து பேச விட்டால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்று பாக்கியா எடுத்துக் கூற, அதை ஏற்கும் மனநிலையில் ஜோசப் இல்லாத நிலை காணப்பட்டது.

செழியன் -ஜெனி மீட்டிங்: இதையடுத்து பாக்கியா, அங்கிருந்து கோபம் மற்றும் வருத்தத்துடன் புறப்பட்டார். இந்நிலையில் செழியனுக்கு மறுமணம் என்ற விஷயத்தை கேள்விப்பட்டு ஜெனி மிகுந்த மன உளைச்சலில் ஈடுபட்டு தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறார், இதை பார்க்கும் அவரது அம்மா மரியம் தன்னுடைய மகள் எந்த காலத்திலும் செழியனை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று தெரிந்து கொள்கிறார். இதையடுத்து பாக்கியாவிடம் பேசும் மரியம், செழியன் மற்றும் ஜெனி இருவரையும் நேரில் சந்தித்து பேச வைக்க ஒப்புதல் தெரிவிக்கிறார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் தெரியாமல் மரியத்தின் தோழி கவிதா வீட்டில் அவர்களை சந்திக்க வைக்க ஏற்பாடுகளை செய்கின்றனர் மரியம் மற்றும் பாக்கியா.

செழியன் விளக்கம்: தொடர்ந்து அவர்கள் இருவரையும் அங்கே வரவழைத்து இருவரையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டுகின்றனர். இதனால் துவக்கத்தில் பயங்கர ஆத்திரமடையும் ஜெனி கதவை திறக்குமாறு தொடர்ந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஆனால் செழியனும் ஜெனியிடம் பேச தனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் அவரை சமாதானப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்கிறார். தான் தெரியாமல் மாலினி விரித்த வலையில் சிக்கிக் கொண்டதாகவும் தனக்கு திருமணம் நடந்ததை தான் முன்னதாகவே கூறிய நிலையில் தன்னை சதி செய்து அவளது வலையில் விழ வைத்ததாகவும் தனக்கு எப்போதுமே மாலினி மீது எந்த ஈர்ப்பும் ஏற்பட்டதில்லை என்று செழியன் பலவாறாக பேசி ஜெனிக்கு புரிய வைக்க முயல்கிறார்.

சமாதானமாகும் செழியன் -ஜெனி: ஆனால் தனக்கு செழியன் செய்த துரோகத்தை எந்த காலத்திலும் தான் மன்னிக்க மாட்டேன் என்று ஜெனி அறுதியிட்டு கூறுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்படும் செழியன், ஒரு கட்டத்தில் ஜெனியின் கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுகிறார். ஜெனியையும் தன்னுடைய மகளையும் தான் எந்த காலத்திலும் பிரிய முடியாது என்றும் கூறுகிறார். இதையடுத்து செழியனை எதிர்கொள்ளும் ஜெனி, அவரது கன்னத்தில் பளார் பளார் என்று அறைகிறார். இதனால் செழியன் நிலைகுலைந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறார். இதையடுத்து இருவரும் சமாதானம் ஆவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X