பிசினஸில் முதலில் தூக்கிப் போட வேண்டியது பயத்தைதான்.. பாக்கியாவிற்கு பாடம் எடுத்த பழனிச்சாமி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் தாத்தாவை கவனித்துக் கொள்ளுமாறு ஜெனியிடம் கூறிவிட்டு பாக்கியா மற்றும் அமிர்தா இருவரும் ரெஸ்டாரண்டுக்கு கிளம்புகின்றனர். ஆனால் தன்னுடைய குழந்தையை தூங்க வைத்து விட்டு தானும் தூங்கிவிடுகிறார் ஜெனி.
இதனால் ராமமூர்த்திக்கு உணவு கொடுக்கவும் மாத்திரை கொடுக்கவும் அவர் மறந்து விடுகிறார். இதனிடையே பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு வரும் பழனிச்சாமி, பக்கத்தில் பார் ஓபன் செய்யும் விஷயம் குறித்து கேள்விப்படுகிறார். இதையடுத்து பிசினஸில் நம்முடைய பயத்தை அடுத்தவருக்கு காண்பிக்கக் கூடாது என்று அவர் பாக்கியாவிடம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குனர். சீரியல் துவக்கத்திலே குடும்பத்தினரின் ஒற்றுமை குறித்த இந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஒரு நாளில் ஒரு வேளையாவது குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கூறிவரும் சூழலில், பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவது அடுத்தடுத்து காட்சிப்படுத்தப்பட்டு வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.
ரெஸ்டாரெண்டிற்கு வந்த பழனிச்சாமி: இதையடுத்து அமிர்தாவை ரெஸ்டாரெண்ட்டிற்கு வரும்படி கூறும் பாக்கியா, தாத்தா மற்றும் வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு ஜெனியிடம் கூறுகிறார். துணைக்கு ரெஸ்டாரெண்ட் ஊழியர் ஒருவரையும் விட்டு செல்கிறார். இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறிய சூழலில் தொடர்ந்து அழுது கொண்டிருந்த குழந்தையை சமாதானப்படுத்தி தூங்க வைக்கும் ஜெனி, ஒரு கட்டத்தில் தானும் தூங்கி விடுகிறார். இதனால் தாத்தாவிற்கு மாத்திரை கொடுக்காமல் உணவும் கொடுக்காத சூழல் காணப்படுகிறது. இதனிடையே ரெஸ்டாரெண்ட்க்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பழனிச்சாமி வருவதாக காட்டப்பட்டுள்ளது.
பார் ஓனருடன் மீட்டிங்: இதையடுத்து பக்கத்தில் பார் ஓபன் செய்யும் விஷயம் குறித்து பழனிச்சாமிடம் பாக்கியா கூறுகிறார். இதனால் ஊழியர்கள் அனைவரும் பயப்படுவதாகவும் பாக்கியா தெரிவிக்கிறார். தொடர்ந்து பாரை வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுமாறு தானே அந்த உரிமையாளரிடம் கேட்டதாகும் பாக்கியா கூறிய சூழலில் அதற்கு எப்படி ஒப்புக் கொள்வார்கள் என்று பழனிச்சாமி நடைமுறையை எடுத்துக் கூறுகிறார். தொடர்ந்து பாக்கியாவை அழைத்துக் கொண்டு பக்கத்து கடை உரிமையாளரை பார்த்து பேசி விட்டு வரலாம் என்று செல்கிறார் பழனிச்சாமி. அவரிடம் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொள்ளும் பழனிச்சாமி, தொடர்ந்து பேசும் சூழலில் அவர் தன்னுடைய பிரச்சனையை பழனிச்சாமிடம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
பார் ஓபனிங் கான்டிராக்ட்: மறுநாள் கடை ஓபனிங்கிற்காக சமையலுக்கு சொல்லி இருந்ததாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் சொதப்புவதாகவும் பார் உரிமையாளர் தன்னுடைய பிரச்சனையை கூறிய சூழலில் பக்கத்திலேயே இவ்வளவு பெரிய ரெஸ்டாரண்டை வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் கடினப்படுகிறீர்கள் என்றும் கூறும் பழனிச்சாமி, பாக்கியாவின் பொருட்காட்சி கான்ட்ராக்ட் உள்ளிட்ட பல விஷயங்களை கூற, பார் உரிமையாளர் ஆச்சரியப்படுகிறார். தொடர்ந்து மறுநாள் பார் ஓபனிங்கிற்கான சமையல் கான்டிராக்ட் பாக்கியாவிற்கு கிடைக்கிறது. சிக்கன், மட்டன், பிரியாணி என்று அவர் நான்வெஜ் ஐட்டங்களாக அடுக்க பாக்யாவிற்கு தயக்கம் ஏற்படுகிறது.
நீங்கிய பாக்கியாவின் பயம்: இருந்தபோதிலும் பழனிச்சாமியின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இந்த கான்டிராக்டை வாங்கிக் கொள்கிறார். இந்நிலையில் பிசினசில் மிகப்பெரிய எதிரி நம்முடைய பயமும் தயக்கமும் தான் என்று பாக்கியாவிடம் கூறுகிறார் பழனிசாமி. தொடர்ந்து மறுநாள் பார் ஓப்பனிங்கின்போது தான் இங்கேயே இருப்பதாகவும் அனைத்து குடிகாரர்களும் மோசமானவர்கள் கிடையாது என்றும் பலவாறாக பாக்கியாவின் தயக்கத்தையும் பயத்தையும் போக்குகிறார் பழனிசாமி. தொடர்ந்து பாக்கியாவிற்கு எப்போதும் தான் உதவியாக இருப்பேன் என்றும் அவர் கூறுவதாக இந்த எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











